காதலை நிரூபிக்க எய்ட்ஸால் பாதிக்கப்பட்ட காதலனின் ரத்தத்தை செலுத்திக்கொண்ட சிறுமி!மிரண்ட நெட்டிசன்கள்

Subscribe to Oneindia Tamil

திஸ்பூர்: அசாம் மாநிலத்தில் சிறுமி ஒருவர் தனது காதலை நிரூபிக்கச் செய்த செயல் அனைவருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்துவதாக உள்ளது.

காதலுக்குக் கண்கள் இல்லை என்று பொதுவாகச் சொல்வார்கள். அதாவது யாருக்கு வேண்டுமானாலும் யார் மீது வேண்டுமானாலும் காதல் வரும் என்பதைக் குறிக்கவே இந்த தொடர் கூறப்படுகிறது.

ஆனால், இதை வைத்துக் கொண்டு இளைஞர்கள் இளம்பெண்கள் சிலர் செய்யும் காரியங்கள் ஜீரணிக்கவே முடியாத அளவுக்கு உள்ளது. அப்படியொரு சம்பவம் தான் அசாமில் நடந்துள்ளது.

 காதல்

காதல்

ஷேக்ஸ்பியரின் காதல் கதைகள் தொடங்கி நம் கல்லூரிகளில் பார்க்கும் காதல் வரை காதலர்களின் செயல்பாடுகளுக்கு எல்லையே இல்லை தான். காதலனுக்காகப் பல தியாகங்களைச் செய்த காதலியை நாம் பார்த்திருப்போம். அதேபோல காதலிக்காக உயிரை விட்ட காதலனைக் கூட நாம் கேள்விப்பட்டு இருக்கிறோம். ஆனால், அதையெல்லாம் இந்த கதை மிஞ்சிவிடும் போலவே இருக்கிறது.

அசாம்

அசாம்

அசாம் மாநிலத்தின் தான் இந்த வினோத சம்பவம் அரங்கேறி உள்ளது. அசாம் மாநிலம் சுவால்குச்சி மாவட்டத்தில் மைனர் சிறுமி ஒருவர் தனது காதலனிடம் வித்தியாசமான முறையில் காதலை நிரூபித்து உள்ளார். 15 வயதே ஆன அந்த சிறுமி ஒருவரைக் காதலித்து வந்துள்ளார். அந்த நபருக்கு எச்.ஐ.வி பாதிப்பு இருப்பதாகக் கூறப்படுகிறது. இதனிடையே இருவரும் உட்கார்ந்து பேசிக் கொண்டு இருந்துள்ளனர்.

 எய்ட்ஸ்

எய்ட்ஸ்

அப்போது இருவருக்கும் இடையே ஏதோ விவாதம் ஏற்பட்டதாகத் தெரிகிறது. இளைஞரிடம் உண்மையாகக் காதலித்ததாக அந்த சிறுமி கூறி உள்ளார். அத்துடன் நிற்காமல் எய்ட்ஸால் பாதிக்கப்பட்ட காதலனிடம் இருந்து எடுக்கப்பட்ட ரத்தத்தை ஊசி மூலம் அந்த சிறுமி தனக்குத்தானே செலுத்திக் கொண்டார். இந்தச் சம்பவம் அசாம் மாநிலத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

 பேஸ்புக் காதல்

பேஸ்புக் காதல்

பேஸ்புக் மூலம் அந்த சிறுமிக்கு இந்த நபருடன் பழக்கம் ஏற்பட்டு உள்ளது. மேலும், அந்த சிறுமி ஏற்கனவே சில முறை அந்த நபருடன் வீட்டைவிட்டு வெளியேறி உள்ளார். அப்போதெல்லாம் சிறுமியின் பெற்றோர் தான் அவர்களை மீட்டு அழைத்து வந்துள்ளனர். இந்த சம்பவம் அசாமில் மட்டுமின்றி இணையத்திலும் பெரும் விவாதத்தையே கிளப்பி உள்ளது. நெட்டிசன்களும் இதற்கு பல்வேறு கருத்துகளைத் தெரிவித்து வருகின்றனர்.

 நெட்டிசன்கள்

நெட்டிசன்கள்

இது தொடர்பாக நெட்டிசன் ஒருவர், அந்த சிறுமிக்குக் காதல் மீது இந்தளவுக்கு அபார நம்பிக்கை இருக்கிறது. ஆனால், அந்த பெண் டீன் ஏஜ் பருவத்தில் உள்ளார். அவர்களின் பெற்றோர் முறையாக வழிநடத்தி இருக்க வேண்டும் என்று பதிவிட்டுள்ளார். மற்றொருவரோ என்ன தான் காதலுக்குக் கண் இல்லை என்று சொன்னாலும் அதுக்கு இப்படியா என்ற ரீதியிலும் கேள்வி கேட்டு வருகின்றனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+