குஜராத் காங். எம்எல்ஏ ஜிக்னேஷ் மேவானி அஸ்ஸாமில் மீண்டும் கைது! ஜாமீன் கிடைத்த நிலையில் நடவடிக்கை!

Subscribe to Oneindia Tamil

குவஹாத்தி: குஜராத் காங்கிரஸ் எம்.எல்.ஏ.வும் தலித் தலைவர்களில் ஒருவருமான ஜிக்னேஷ் மேவானி அண்மையில் அஸ்ஸாம் போலீசாரால் கைது செய்யப்பட்டிருந்தார். ஒரு வழக்கில் ஜிக்னேஷ் மேவானிக்கு அஸ்ஸாம் நீதிமன்றம் ஜாமீன் வழங்கிய நிலையில் மேலும் ஒரு வழக்கில் மீண்டும் அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

2017-ம் ஆண்டு குஜராத் சட்டசபை தேர்தல் நடைபெற்றது. குஜராத்தில் தங்களை எதிர்க்க ஆளே இல்லை என நினைத்துக் கொண்டிருந்த பாஜகவுக்கு பேரிடியாக இளம் தலைவர்களான ஜிக்னேஷ் மேவானி, கன்னையா குமார், ஹர்திக் பட்டேல் ஆகியோர் காங்கிரஸுடன் கை கோர்த்தனர். இது காங்கிரஸூக்கு பெரும் பலமாக கருதப்படுகிறது. இந்த ஆண்டு நடைபெறும் குஜராத் தேர்தலில் இந்த இளம் தலைவர்கள் முழு வீச்சில் களமிறங்கும் நிலையில் பாஜகவுக்கு ஆகப் பெரும் சவாலாக இருப்பார்கள் என்பது அரசியல் பார்வையாளர்களின் கருத்து.

Assam: Jignesh Mevani Rearrested in Another Case

இந்நிலையில் பிரதமர் மோடியை விமர்சித்து ட்விட்டரில் ஜிக்னேஷ் மேவானி பதிவிட்டதாக கூறப்படுகிறது. ஆகையால் ஜிக்னேஷ் மேவானி மீது நடவடிக்கை எடுக்கக் கோரி அஸ்ஸாம் போலீசில் பாஜகவை சேர்ந்த அருப்குமார் டே புகார் செய்திருந்தார். இந்த புகாரின் அடிப்படையில் கடந்த சில நாட்களுக்கு முன்னதாக நள்ளிரவில் அஸ்ஸாம் போலீசாரால் ஜிக்னேஷ் மேவானி கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். இக்கைது நடவடிக்கைக்கு மூத்த காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி உள்ளிட்டோர் கடும் கண்டனம் தெரிவித்திருந்தனர்.

இதனிடையே இவ்வழக்கில் ஜிக்னேஷ் மேவானிக்கு அஸ்ஸாம் நீதிமன்றம் இன்று ஜாமீன் வழங்கியது. ஆனால் இந்த ஜாமீன் கிடைத்த சில மணிநேரங்களிலேயே மேலும் ஒரு வழக்கில் அவரை கைது செய்வதாக அஸ்ஸாம் போலீசார் தெரிவித்தனர். இது ஜிக்னேஷ் மேவானியின் ஆதரவாளர்களை கொந்தளிக்க வைத்துள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+