ஐ.சி.யூவிற்குள் பலாத்கார முயற்சி; மருத்துவ மாணவி கொலை: வார்டு பாய் கைது!
திப்ருகார்: அஸ்ஸாம் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் முதுநிலை மாணவியை பாலியல் பலாத்காரம் செய்யமுயன்று, கொலை செய்த வார்டு பாய் கைது செய்யப்பட்டுள்ளார்.
அஸ்ஸாம் மாநிலம், திப்ருகாரில் உள்ள அரசு மருத்துவக்கல்லூரியில் முதுநிலை மருத்துவம் முதல் ஆண்டு படித்து வந்தவர் சரிதா.
இவர் மருத்துவக் கல்லூரியுடன் இணைந்த மருத்துவமனையின் தீவிர சிகிச்சைப் பிரிவில் வியாழக்கிழமை (8ஆம் தேதி) இரவு பணியில் ஈடுபட்டிருந்தார்.
இந்நிலையில், வெள்ளிக்கிழமை (9ஆம் தேதி) காலை 8 மணிக்கு தீவிர சிகிச்சை பிரிவு அறைக்கு சென்ற நர்சுகள், சரிதா கழுத்தில் கத்தியால் குத்தப்பட்டு ரத்த வெள்ளத்தில் இறந்து கிடந்தது கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.
இதையடுத்து காவல்துறைக்கு புகார் தெரிவிக்கப்பட்டது. அங்கு வந்த காவல்துறையினர், இது தொடர்பாக வார்டு பாய் கிரு மெக் உள்பட 4 பேரிடம் விசாரணை நடத்தினர். இந்த விசாரணையில், சரிதாவை கொலை செய்ததை வார்டு பாய் கிரு மெக் ஒப்புக்கொண்டார்.
மேலும், சரிதாவை பாலியல் பலாத்காரம் செய்ய முயன்றதாகவும், அதற்கு அவர் எதிர்ப்பு தெரிவித்ததால் அவரை கொலை செய்ததாகவும் அவன் கூறியுள்ளார். இதையடுத்து அவரை காவல்துறையினர் கைது செய்தனர்.
கொலை செய்யப்பட்ட சரிதா, இதே கல்லூரியில் எம்.பி.பி.எஸ். படித்திருந்தார். கடந்த ஆண்டு ஜூலை மாதம் 7ஆம் தேதி தன்னோடு பணிபுரியும் டாக்டர் ஒருவரை திருமணம் செய்து கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள்












Click it and Unblock the Notifications