Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ராகுல் காந்திக்கு புது சிக்கல்! அசாம் போலீஸ் வைக்கும் ‛செக்’.. நெருங்கும் தேர்தலால் பறக்கும் சம்மன்

Subscribe to Oneindia Tamil

கவுஹாத்தி: அசாம் மாநில சிஐடி போலீசார் காங்கிரஸ் எம்பி ராகுல் காந்திக்கு சம்மன் அனுப்ப முடிவு செய்துள்ளனர். விரைவில் நாடாளுமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில் ராகுல் காந்திக்கு புது தலைவலி ஏற்பட்டுள்ளது.

காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி பாரத் ஜோடோ யாத்திரை என்ற பெயரில் இந்திய ஒற்றுமை பயணத்தை கன்னியாகுமரியில் தொடங்கி காஷ்மீரில் முடித்தார். இந்த யாத்திரையில் அவர் நடந்தே சென்றார். தற்போது 2வது யாத்திரையை ராகுல் காந்தி தொடங்கி உள்ளார். இந்த யாத்திரை என்பது மணிப்பூரில் தொடங்கி மும்பை வரை நடைபெற்று வருகிறது.

Assam Police decides to send summon for Rahul Gandhi on the incident of Congress Bharat Jodo Nyay Yatra clash

நாடாளுமன்ற தேர்தல் நெருங்கும் நிலையில் இந்த யாத்திரையை ராகுல் காந்தி மேற்கொண்டுள்ளார். இந்த யாத்திரையில் ராகுல் காந்தி நடந்து செல்வதோடு, வாகனங்களிலும் பயணித்து வருகிறார். மணிப்பூரில் இருந்து கடந்த 14ம் தேதி ராகுல் காந்தி யாத்திரையை தொடங்கினார்.

இந்த யாத்திரை என்பது மொத்தம் 66 நாட்கள் நடக்க உள்ளது. மொத்தம் 6,713 கிலோமீட்டர் தொலைவை கடந்து மார்ச் மாதம் 20ம் தேதி மும்பையில் முடிவடைய உள்ளது. மொத்தம் 15 மாநிலங்களில் 110 மாவட்டங்களில் 337 சட்டசபை தொகுதிகள், 100 நாடாளுமன்ற தொகுதிகள் வழியாக யாத்திரை நடைபெற உள்ளது. அசாம் மாநிலத்தில் கடந்த மாதம் யாத்திரை நடந்தது. அசாம் மாநிலத்தை பொறுத்தமட்டில் அங்கு பாஜக ஆட்சி நடக்கிறது. அங்கு முதல்வராக ஹேமந்த் பிஸ்வா சர்மா உள்ளார்.

இந்நிலையில் தான் கடந்த மாதம் 23ம் தேதி ராகுல் காந்தியின் பாரத் ஜோடோ நியாய யாத்திரை என்பது கவுஹாத்தி நகரில் நடந்தது. இந்த வேளையில் காங்கிரஸ் கட்சியின் தொண்டர்கள் மற்றும் போலீசார் இடையே தள்ளுமுள்ளு நடந்தது. கவுஹாத்தி நகருக்குள் நுழையவிடாமல் தடுப்பு வேலிகள் வைக்கப்பட்ட நிலையில் அதனை காங்கிரஸ் கட்சியினர் அகற்றினர். இந்த வேளையில் கடும் மோதல் ஏற்பட்டது.

இந்த மோதலில் காங்கிரஸ் கட்சியினர் மற்றும் போலீசார் காயமடைந்தனர். இதையடுத்த போலீசார் தடியடி நடத்தினர். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. போலீசாரின் நடவடிக்கையை ராகுல் காந்தி உள்ளிட்டவர்கள் கடுமையாக கண்டித்தனர்.
இதுதொடர்பாக அசாம் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். ராகுல் காந்தி, கேசி வேணுகோபால், ஜிதேந்திர சிங், ஜெய்ராம் ரமேஷ், சீனிவாஸ் பிவி, கங்கையா குமார், கவுரவ் கோகாய், பூபன் குமார் போரா உள்பட பலர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இதற்கு காங்கிரஸ் கட்சி சார்பில் கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது.

இதுபற்றி அசாம் முதல்வர் ஹேமந்த பிஸ்வாஸ் சர்மா கூறுகையில், ‛‛நாங்கள் இப்போது ராகுல் காந்தியை கைது செய்யமாட்டோம். வழக்கு தொடர்பாக நாடாளுமன்ற தேர்தலுக்கு பிறகு கைது செய்வோம்'' என்றார். அதாவது ராகுல் காந்தியை உடனே கைது செய்தால் அது நாடாளுமன்ற தேர்தலில் எதிரொலிக்கலாம் என கருதி அவரை கைது செய்யும் நடவடிக்கையை பாஜக தாமதப்படுத்துவதாக கூறப்படுகிறது.

இத்தகைய சூழலில் தான் தற்போது கவுஹாத்தியில் நடந்த மோதல் தொடர்பாக ராகுல் காந்தியிடம் விளக்கம் பெற அசாம் மாநில போலீசார் முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. இதற்காக அசாம் சிஐடி போலீசார் ராகுல் காந்திக்கு சம்மன் அனுப்ப திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. விரைவில் நாடாளுமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இதில் ராகுல் காந்தி காங்கிரஸ் கட்சிக்காக இந்தியா முழுவதும் பிரசாரம் மேற்கொள்ள வேண்டும்.

இந்த வேளையில் அவருக்கு சம்மன் அனுப்பப்படும் என கூறப்படுகிறது. இது அவரது பிரசாரத்தை பாதிக்கலாம் என்பதால் ராகுல் காந்திக்கு புதிய சிக்கல் ஏற்பட வாய்ப்புள்ளதாக அரசியல் நோக்கர்கள் தெரிவித்துள்ளனர்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+