சட்டென பாய்ந்த குண்டுகள்.. 6 வீரர்களை சுட்டுவிட்டு அசாம் ரைபிள் வீரர் தற்கொலை.. மணிப்பூரில் ஷாக்
இம்பால்: மணிப்பூரில் அசாம் ரைபிள் படையை சேர்ந்த வீரர் ஒருவர், தனது சக வீரர்களை துப்பாக்கியால் சுட்டுவிட்டு, தானும் தற்கொலை செய்துகொண்டு உயிரிழந்துள்ளார். ஏற்கெனவே மணிப்பூர் அமைதி முழுமையாக திரும்பாத நிலையில், இச்சம்பவம் பெரும் அதிர்ச்சியையும், பதற்றத்தையும் உருவாக்கியுள்ளது.
மணிப்பூரில் பல மாதங்களாக வன்முறை நீடித்து வருகிறது. ஏராளமான உயிரிழப்புகளும், பொருள் இழப்புகளும் இதனால் ஏற்பட்டிருக்கிறது. ராணுவம், துணை ராணுவ படைகள் அங்கு குவிக்கப்பட்டிருந்தாலும், இன்னும் பதற்றம் முழுமையாக தணியவில்லை. இந்நிலையில் மற்றொரு அதிர்ச்சி சம்பவம் அங்கு அரங்கேறியுள்ளது. அதாவது, பாதுகாப்பு படையில் இருந்த அசாம் ரைபிள் படைவீரர், தன்னுடன் பணியில் இருந்த மற்ற வீரர்களை துப்பாக்கியால் சுட்டுவிட்டு, தானும் துப்பாக்கியால் சுட்டுக்கொண்டு தற்கொலை செய்துகொண்டிருக்கிறார்.

சுராசந்த்பூரில் சேர்ந்த வீரர்தான் இந்த சம்பவத்தில் ஈடுபட்டிருப்பது உறுதி செய்யப்பட்டிருக்கிறது. இவர் நீண்ட விடுமுறையை முடித்துக்கொண்டு மீண்டும் பணிக்கு திரும்பியிருக்கிறார். இந்தோ-மியான்மர் எல்லைக்கு அருகே தெற்கு மணிப்பூரில் அவருக்கு பாதுகாப்பு பணி வழங்கப்பட்டிருக்கிறது. இன்று காலை பணியில் சேர்ந்த அவர் தனது துப்பாக்கியை கொண்டு உடன் பணியாற்றிய 6 பேரை சுட்டிருக்கிறார். பின்னர் தன்னை தானே சுட்டுகொண்டுள்ளார். இதில் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.
படுகாயமடைந்த மற்ற வீரர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கின்றனர். இது தொடர்பாக தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது. ஏற்கெனவே மணிப்பூரில் கலவரம் நீடித்து வரும் நிலையில், தற்போது நடைபெற்றுள்ள துப்பாக்கிச்சூடு சம்பவம் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியது.
இந்நிலையில், அசாம் ரைபிள்ஸ் (தெற்கு) ஐஜி தரப்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், “தற்போது மணிப்பூரில் நடக்கும் கலவரத்திற்கும், இதற்கும் எந்த சம்பந்தமும் இல்லை. இந்த விவகாரம் தொடர்பான வதந்திகளையும், ஊகங்களையும், தவிர்க்கவும். உண்மை தகவல்களை பகிர்ந்துகொள்வது அவசியமாக இருக்கிறது. எனவேதான் நாங்கள் இது குறித்து அனைத்து தகவல்களையும் பகிர்ந்திருக்கிறோம். தாக்குதலுக்கு உள்ளான 6 வீரர்களில் யாரும் மணிப்பூரை சேர்ந்தவர்கள் கிடையாது” என்று விளக்கமளிக்கப்பட்டிருக்கிறது.
-
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
வளைகுடா வளையம்: ஈரானிடம் இந்தியா வைத்த 'செக்'.. தவிப்பில் கச்சா எண்ணெய்! டெல்லி மெகா முடிவு -
டிராகனின் வெள்ளி வேட்டை.. சீனாவைச் சுழற்றியடிக்கும் சில்வர் ஜுரம்.. வெள்ளி இனி குட்டித்தங்கம்.. ஏன்? -
நோட் பண்ணுங்க! கலைஞர் மகளிர் உரிமைத் தொகைக்கு 'செக்' - ரேஷன் கார்டில் இதை கவனிக்கலைன்னா பணம் கட்? -
கழுத்தறுத்த பாஜக..சரண்டராகும் சரத்குமார்! பஞ்சாயத்தை கூட்டிய நாட்டாமை குடும்பத்தார்! பரபர பாலிடிக்ஸ் -
பென்டகன் பிளான் ரெடி.. ஈரானுக்குள் நுழையும் அமெரிக்க வீரர்கள்! கதை மொத்தமா முடியுது! -
Siragadikka Aasai Promo: விஜயாவுக்கு எதிராக ஆதாரத்தை கண்டுபிடித்த முத்து- மீனா.. சிந்தாமணிக்கு ஆப்பு! செம சம்பவம் -
பாஜக நட்சத்திர பேச்சாளர் பட்டியலில் இருந்து தமிழிசை பெயர் நீக்கம்.. பின்னணி இதுதானா? -
தப்புக் கணக்கான ராதிகாவின் முடிவு? மீண்டும் சமத்துவ மக்கள் கட்சியை தொடங்குகிறாரா சரத்குமார்? -
கெத்து காட்டும் இந்தியா.. ஹார்முஸ் ஜலசந்தியை கடக்க இந்திய கப்பல்களுக்கு தனிப்பாதை கொடுத்த ஈரான்.. செம -
நன்றியய்யா நன்றி.. ஓட்டல் ஓனர்கள் வயிற்றில் பால் வார்த்த அறிவிப்பு! இனி சிலிண்டர் தட்டுப்பாடு இல்லை! -
துபாய் உட்பட.. மொத்த வளைகுடா நாடுகளிலும் குடிநீர் பஞ்சம் ஏற்படும் அபாயம்! ஈரான் எச்சரிக்கை!












Click it and Unblock the Notifications