Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

சிறுமிகளுக்கு ஆபாச வீடியோ காட்டிய ஆசிரியர்.. கொதித்தெழுந்த கிராம மக்கள்

Subscribe to Oneindia Tamil

அசாம்: பாலியல் குற்றங்கள் சமூகத்தின் எல்லா பக்கமும் புற்றீசல் போல முளைத்துக் கொண்டிருக்கின்றன. அந்த வகையில் பள்ளிகளும் அதற்கு விலக்கு இல்லை. அசாம் மாநிலத்தில் வக்கிரம் பிடித்த பள்ளி ஆசிரியர் ஒருவர் பள்ளி மாணவிகளுக்கு செல்போனில் ஆபாச வீடியோக்களை காட்டியுள்ளார். கடுப்பான கிராம மக்கள் செய்த செயலால் அந்த கிராமமே பதற்றத்தில் உள்ளது.

மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தா பயிற்சி பெண் மருத்துவர் பாலியல் கொலை, உத்தரகாண்ட் மாநிலத்தில் செவிலியர் பாலியல் கொலை, உத்தரப்பிரதேச மாநிலத்தில் தன் சொந்த மகளை பாலியல் பலாத்காரம் செய்த அப்பா, கோவை அரசு மருத்துவமனையில் பயிற்சி பெண் மருத்துவர் முன்பு அரைகுறை ஆடையுடன் அநாகரித்தில் ஈடுபட முயற்சித்த இளைஞன் என்று திரும்பிய பக்கமெல்லாம் பாலியல் குற்றங்கள் நடந்து கொண்ருக்கின்றன.

Teacher Porn

வீடு, சாலை, மருத்துவமனை என்று பெண்களுக்கு எந்த இடத்திலும் பாதுகாப்பு இல்லை என்பதையே ஒவ்வொரு சம்பவமும் மீண்டும் மீண்டும் உணர்த்தி கொண்டிருக்கின்றன. இந்த வரிசையில் மாணவர்கள் படிக்க செல்லும் பள்ளிக் கூடங்களிலும் மாணவ, மாணவிகளுக்கு பாதுகாப்பற்ற சூழல் நிலவி வருகிறது. கல்வியை விதைக்க வேண்டிய ஆசிரியர்கள், கண்டதையும் விதைக்கும் அவலம் தொடர்ந்து கொண்டிருக்கிறது.

அந்த வகையில் அசாம் மாநிலம் கரிம்கன்ஞ் மாவட்டத்தில் உள்ள பள்ளியின் ஆசிரியர் மீது அதிர்ச்சியளிக்கும் புகார் வந்தது. இதுதொடர்பாக பாதிக்கப்பட்டவர்கள் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். அதன்படி அந்த ஆசிரியர் பள்ளியில் உள்ள மாணவிகளிடம் ஆசை வார்த்தை சொல்லி நெருங்கி பழகியுள்ளார். அதன் பிறகுதான் அந்த அசிங்கமான செயலில் ஈடுபட்டுள்ளார். இதுகுறித்து பாதிக்ப்பட்ட சிறுமிகளின் பெற்றோர் கூறுகையில், அந்த வக்கிரம் பிடித்த ஆசிரியர், மாணவிகளிடம் தன் செல்போனில் ஆபாச வீடியோக்களை போட்டு காண்பித்துள்ளார். இந்த சம்பவத்தால் மாணவிகள் உளவியல் ரீதியாக பாதிக்கப்பட்டனர். தொடக்கத்தில் இதை எப்படி வெளியில் சொல்வது என்று அவர்கள் தயங்கினர்.

நாங்கள் பொறுமையாக பேசி புரிய வைத்த பிறகுதான் அவர்கள் என்ன நடந்தது என்று கூறினார்கள். மறுப்பு தெரிவித்த மாணவிகளிடம் அவர் வற்புறுத்தி, அந்த அசிங்கத்தை பார்க்க வைத்திருக்கிறார். அதனுடன் நிற்காமல் ஆசிரியர் மாணவிகளிடம் பாலியல் சீண்டலிலும் ஈடுபட்டிருக்கிறார். என்று வேதனையுடன் அந்த துயரத்தை பகிர்ந்து கொண்டனர். இதனால் ஆத்திரமடைந்த மாணவிகளின் குடும்பத்தினரும், ஊர் மக்களும் அந்த ஆசிரியரை பிடித்து தாக்க முயற்சித்தனர். ஆனால் அந்த நபர் எப்படியோ ஊரை விட்டு தப்பி சென்றுவிட்டார். மக்கள் ஆத்திரத்தில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

ஒருகட்டத்தில் பள்ளி மீது தாக்குதலில் ஈடுபட்டனர். ஒருகட்டத்தில் போராட்டத்தில் ஈடுபட்டிருந்த ஒரு தரப்பினர் பள்ளி உடைமைகள் மீது நெருப்பும் வைத்தனர். இதனால் கிராமம் முழுவதும் பதற்றம் நிலவுகிறது. சம்பவ இடத்துக்கு விரைந்த காவல்துறை வழக்குப்பதிவு செய்து விசாரணையை தொடங்கினர். முதல்கட்டமாக அந்த ஆசிரியர் மீது போக்சோ சட்டத்தில் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அதேபோல பள்ளிக்கு நெருப்பு வைத்து பொது உடைமைகளை சேதப்படுத்திய வழக்கில் கிராம மக்கள் மீதும் காவல்துறை வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். சம்மந்தப்பட்ட ஆசிரியரை கைது செய்யவும் போலீஸ் நடவடிக்கை எடுத்து கொண்டிருக்கின்றனர்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+