அஸ்ஸாமில் போடோ தீவிரவாதிகள் தாக்குதல், வன்முறையில் உயிரிழப்பு 75 ஆக அதிகரிப்பு
குவஹாத்தி: அஸ்ஸாம் மாநிலத்தில் போடோ தீவிரவாதிகள் நடத்திய தாக்குதல் மற்றும் வன்முறையில் பலியானோர் எண்ணிக்கை 75 ஆக அதிகரித்துள்ளது.
அஸ்ஸாமில் போடோலாந்து தேசிய ஜனநாயக முன்னணி என்ற தீவிரவாத அமைப்பு செயல்படுகிறது. இதில் அரசுடன் அமைதிப் பேச்சுவார்த்தையை விரும்பாத ஒரு பிரிவினர் சாங்பிஜித் என்பவர் தலைமையில் என்.டி.எப்.பி(எஸ்) என்ற பெயரில் தனியாக செயல்படுகின்றனர்.
இம்மாநிலத்தில் அண்மைக் காலமாக தீவிரவாதிகளுக்கு எதிரான நடவடிக்கைகளை பாதுகாப்பு படையினர் தீவிரப்படுத்தியுள்ளனர். இதனால் ஆத்திரமடைந்த தீவிரவாதிகள், சோனித்பூர், கோக்ரஜார், சிராங் ஆகிய மாவட்டங்களில் 5 கிராமங்களில் ஆதிவாசியினர் மீது கண்மூடித்தனமாக தாக்குதல் நடத்தினர்.

இதில் சோனித்பூர் மாவட்டத்தில் 39 பேரும், கோக்ரஜார் மாவட்டத்தில் 25 பேரும் உயிரிழந்தனர். சிராங் மாவட்டத்தில் 3 பேர் பலியாகினர்.
இதனிடையே இந்தத் தாக்குதலால் ஆத்திரமுற்ற ஆதிவாசிமக்கள், சோனித்பூர் மாவட்டத்தின் புலோகுரின் பகுதியில் போடோ இனத்தவர்களுக்கு சொந்தமான 20 வீடுகளுக்கு தீவைத்தனர். மேலும் வில், அம்பு ஏந்தி ஆயிரக்கணக்கான தேயிலைத் தோட்ட தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டப் பேரணிகள் நடத்தினர்.
மேலும் சோனித்பூர் மாவட்டம் தெகியாஜுலி அருகே தேசிய நெடுஞ்சாலையில் நேற்று மறியல் போராட்டம் நடைபெற்றது. இதையடுத்து வில், அம்புடன் பேரணியாக சென்ற போராட்டக்காரர்கள் தெகியாஜுலி காவல் நிலையத்தை தாக்க முயன்றனர். இவர்களை போலீசார் தடியடி நடத்தி கலைக்க முயன்றனர். தொடர்ந்து போலீசார் துப்பாக்கிச்சூடு நடத்தியதில் 3 பேர் உயிரிழந்தனர். பலர் காயமடைந்தனர்.
அஸ்ஸாமில் கடந்த சில நாட்களாக நிகழ்ந்த தாக்குதல் மற்றும் வன்முறையில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 75 ஆக அதிகரித்துள்ளது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications