அஸ்ஸாம், மேற்கு வங்கத்தில் 2–வது கட்ட வாக்குப் பதிவு- நாளை பிரசாரம் ஓய்கிறது!
குவஹாத்தி/ கொல்கத்தா: அஸ்ஸாம் மற்றும் மேற்கு வங்கத்தில் 2-வது கட்ட வாக்குப் பதிவு நடைபெறும் தொகுதிகளில் நாளை மாலையுடன் பிரசாரம் ஓய்கிறது. அம்மாநிலங்களில் அசம்பாவிதங்கள் நடைபெறாத வகையில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
தமிழ்நாடு, புதுவை, கேரளா, அஸ்ஸாம், மேற்கு வங்கம் ஆகிய 5 மாநில சட்டசபைகளுக்கும் தேர்தல் நடைபெறுகிறது. தமிழ்நாடு, புதுவை, கேரளா ஆகிய மாநிலங்களுக்கு மே 16-ந் தேதி ஒரே நாளில் வாக்குப் பதிவு நடைபெறுகிறது.

அஸ்ஸாமில் மொத்தம் உள்ள 126 தொகுதிகளுக்கு 2 கட்டமாக வாக்குப் பதிவு நடைபெறுகிறது. இதில் முதல் கட்டமாக 65 தொகுதிகளுக்கு கடந்த 4-ந்தேதி வாக்குப் பதிவு நடைபெற்றது. இதில் மொத்தம் 78% வாக்குகள் பதிவாகி இருந்தது.
எஞ்சிய 61 தொகுதிகளுக்கு 2-வது கட்டமாக வரும் 11-ந்தேதி தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கான தேர்தல் பிரசாரம் நாளை மாலை 5 மணியுடன் முடிவடைகிறது.
மே. வங்கம்....
மேற்கு வங்க மாநிலத்தில் மாவோயிஸ்டுகள் ஆதிக்கம் காரணமாக 294 தொகுதிகளுக்கு 6 கட்டமாக தேர்தல் நடத்தப்படுகிறது. இதில் முதல் கட்டமாக 18 தொகுதிகளுக்கு கடந்த 4-ந்தேதி வாக்குப் பதிவு நடைபெற்றது. அத்தேர்தலில் 80% வாக்குகள் பதிவானது.
2-வது கட்டமாக வருகிற 11-ந் தேதி 56 தொகுதிகளுக்கு வாக்குப் பதிவு நடைபெறுகிறது. இதற்கான பிரசாரம் நாளை மாலை 5 மணியுடன் நிறைவடைகிறது.
இரு மாநிலங்களிலும் அசம்பாவிதங்கள் நடைபெறாத வகையில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
-
4,000 EVM–கள் எரிந்தன.. 2026 மேற்கு வங்க தேர்தல் ரிசல்ட்டே அதுக்குள்ளத்தான்.. ஷாக் தந்த தீவிபத்து -
தனியார் பள்ளிகள் லஞ்சம் தரவேண்டாம்.. அதற்கு பதிலாக.. ராஜ்மோகன் உத்தரவால் வரப்போகும் மாற்றம் -
"நீட் வேண்டாம்.. +2 மார்க் அடிப்படையில் மருத்துவ சேர்க்கை.." பிரதமர் மோடியிடம் விஜய் வைத்த கோரிக்கை! -
பிராய்லர் சிக்கன் சாப்பிட்டால் சிறுமிகள் சீக்கிரம் பருவமடைகிறார்களா? 65 சாப்பிடலாமா? FSSAI விளக்கம்? -
கங்கை அமரன் போட்ட போடு! பாரதிராஜாவின் 500 கோடி சொத்தில் வெடித்த சர்ச்சை! நீலாங்கரை பங்களா யாருக்கு -
40,000 கோடி முதலீட்டில் கப்பல் தளம்! அமைச்சர் கீர்த்தனாவின் மாஸ்டர் மூவ்! ஆனால் கனிமொழி சொல்வதென்ன -
ராஜ்மோகன் மெகா அறிவிப்பு.. அரசு பள்ளி மாணவர்களுக்கு சிறப்பு திட்டம்.. 5000 அரசுப் பள்ளிகளுக்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு வருகிறேன்! முடிவை அறிவித்தார் லாரன்ஸ்! விஜய்யின் தவெகவா? அண்ணாமலை இயக்கமா? -
"மீட்டிங் போட்டு.. யாரும் கமிஷன் தர வேண்டாம்னு சொன்னவரு.." ஆதவ் அர்ஜுனாவை புகழ்ந்து தள்ளிய ராஜ்மோகன் -
10 பைசா செலவு இல்லாம.. ரூ.7 லட்சம் கிடைக்கும்.. எத்தனை பேருக்கு இப்படியொரு திட்டம் இருப்பது தெரியும்? -
சிபிஐ எந்த கூட்டணியிலும் இல்லை.. தவெகவுக்கு எதிராக போராட்டத்தை அறிவித்த வீரபாண்டியன்! -
கடன் சுமையை சமாளிக்க முடியல.. அதிமுகவினர் தவெகவிற்கு தாவ இதுதான் காரணமா? ஆட்டம் காணும் அடித்தளம்!












Click it and Unblock the Notifications