அஸ்ஸாமில் தீயில் கருகி இறந்தவர் ராகுல் காந்தியை முத்தமிட்டவர் அல்ல - போலீஸ்

குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளனர்.
அந்தப் பெண் ராகுல் காந்தியை முத்தமிட்டவர் அல்ல என்று போலீஸ் கூறுகிறது. மாறாக, ராகுல் காந்திக்குக் கூட்டத்துக்குப் போய் விட்டு அவர் லேட்டாக வீடு திரும்பியதால் கணவருடன் சண்டை ஏற்பட்டதாகவும், அதில் அவர் தற்கொலைக்கு முயன்றிருக்கலாம் என்றும் போலீஸார் கூறுகின்றனர்.
அவரது கணவர் தொடர்ந்து கவலைக்கிடமான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார். அவர் உயிர் பிழைத்து ஏதாவது கூறினால்தான் உண்மை தெரிய வரும்.
அஸ்ஸாமின் ஜோர்ஹாட் நகருக்கு ராகுல் வந்திருந்தார். அங்கு மகளிர் சுய உதவிக் குழுப் பெண்களுடன் கலந்துரையாடினார். அப்போது சில பெண்கள் திடீரென ராகுல் காந்திக்கு முத்தம் கொடுத்தனர்.
அதில் ஒருவர்தான் தற்போது தீயில் கருகி உயிரிழந்தவரான போன்டி சுத்தியா என்று முதலில் தகவல்கள் கூறின. காங்கிரஸ் வார்டு உறுப்பினராவார் இவர்.
நேற்று இவருக்கும், இவரது கணவருக்கும் இடையே திடீரென வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. சில நிமிடங்களில் வீட்டிலிருந்து அலறல் குரல்கள் கேட்கவே அக்கம் பக்கத்தினர் விரைந்து வந்தனர்.
வீட்டுக்குள் கணவனும், மனைவியும் தீயில் கருகிய நிலையில் கிடந்ததைப் பார்த்து மக்கள் அவர்களை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பினர். அங்கு போன்டி உயிரிழந்தார். அவரது கணவர் 60 சதவீதத்திற்கும் மேற்பட்ட காயத்துடன் கவலைக்கிடமான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
ராகுல் காந்திக்கு தனது மனைவி முத்தமிட்டதால் கோபமடைந்து அவருடன் கணவர் வாக்குவாதத்தில் ஈடுபட்டு பின்னர் தீவைத்துக் கொன்று விட்டதாக முதலில் தகவல்கள் வெளியாகின.
ஆனால் தற்போது அதை போலீஸார் மறுத்துள்ளனர். அந்தக் கூட்டத்திற்கு போன்டி போனது உண்மைதான். ஆனால் அவர் முத்தம் தரவில்லை. இதை அந்தக் கூட்டத்தில் கலந்து கொண்ட பெண்கள் சிலரும் உறுதிப்படுத்தியுள்ளனர். உண்மையில் என்ன நடந்தது. இது கொலையா, தற்கொலையா என்பது குறித்து தற்போது விசாரணை நடத்தி வருகிறோம் என்று கூறியுள்ளனர்.
-
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்!












Click it and Unblock the Notifications