திரிபுரா தேர்தலில் மும்முனைப் போட்டி- பாஜக ஆட்சியை தக்க வைக்க இடைவிடாது படையெடுக்கும் அமித்ஷா!
திரிபுராவில் உள்துறை அமைச்சர் அமித்ஷா இன்று தேர்தல் பிரசாரம் செய்கிறார்.
அகர்தலா: திரிபுரா சட்டசபை தேர்தலில் பாஜக ஆட்சியைத் தக்க வைத்துக் கொள்ள தீவிரம் காட்டுகிறது. திரிபுரா தேர்தல் பிரசாரத்துக்காக 2-வது முறையாக இன்று வருகை தருகிறார் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா.
60 தொகுதிகளைக் கொண்ட திரிபுரா சட்டசபைக்கு வரும் 16-ந் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. வாக்குப் பதிவு நாள் நெருங்கி விட்ட நிலையில் அம்மாநிலத்தில் அனைத்து அரசியல் கட்சிகளும் படுதீவிரமாக பிரசாரம் செய்து வருகின்றன.
திரிபுராவில் ஆளும் பாஜக, எதிர்க்கட்சிகளான இடதுசாரிகள்- காங்கிரஸ் கூட்டணி மற்றும் அகன்ற திப்ரலாந்து தனி மாநில கோரிக்கையை (திரிபுரா பழங்குடிகளை மட்டும் கொண்ட தனி மாநிலம்) முன்வைக்கும் திப்ரா மோதா தலைமையிலான கூட்டணி என மும்முனைப் போட்டி நிலவுகிறது.

25 ஆண்டுகால இடதுசாரிகள் ஆட்சியை வீழ்த்தி, காங்கிரஸை ஒட்டுமொத்தமாக கபளீகரம் செய்து திரிபுராவில் கால் பதித்தது பாஜக. இன்னமும் உட்கட்சி மோதல் ஓயாமல் அக்கப் போர் நிலவுகிறது. இதனை எல்லாம் தாண்டி ஆட்சியைத் தக்க வைக்க போராடுகிறது பாஜக. ஏற்கனவே திரிபுராவில் 2 ரத யாத்திரைகளில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா பங்கேற்றார். இந்த நிலையில் இன்று மீண்டும் திரிபுராவில் பிரசாரம் செய்கிறார் அமித்ஷா. மேலும் உபி முதல்வர் யோகி ஆதித்யநாத், மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் ஆகியோரும் திரிபுராவில் தேர்தல் பிரசாரம் செய்ய உள்ளனர்.
திரிபுரா தேர்தலில் அகன்ற திப்ரலாந்து கோரிக்கை பிரதான இடம் பிடித்துள்ளது. ஆனால் பாஜகவோ, திரிபுரா பழங்குடி மக்களையும் குடியேறிய பிற மாநிலத்தவரையும் வேறுபடுத்தக் கூடிய இந்த கோரிக்கையை நிராகரிக்கிறது. ஆனால் நீண்டகால திப்ரலாந்து கோரிக்கைதான் திரிபுரா தேர்தலில் தீர்மானிக்கும் காரணியாக இருக்கும் என்கின்றனர் அரசியல் பார்வையாளர்கள்.

திரிபுராவில் ஒரு காலத்தில் எலியும் பூனையுமாக இருந்தவை இடதுசாரிகளும் காங்கிரஸும். இப்போது இரு துருவங்களும் கூட்டணியாக கை கோர்த்து தொகுதிகளை பங்கீடு செய்து தேர்தலில் களம் காணுகின்றன. இழந்துவிட்ட செல்வாக்கை எப்படியாவது மீட்பதில் இடதுசாரிகள் வாழ்வா? சாவா? என போராடி வருகின்றனர். இதனால் திரிபுரா தேர்தல் களம் தீ பறக்கிறது.
-
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர்












Click it and Unblock the Notifications