இந்தியாவில்தான் “நவீன அடிமைகள்” அதிகம்- குளோபல் ஸ்லேவரி இண்டெக்ஸ் ஆய்வில் தகவல்!
டெல்லி: "நவீன அடிமைகள்" அதிகம் உள்ள நாடுகளின் பட்டியலில் இந்தியா 5 இடத்தில் உள்ளது என்ற தகவல் குளோபல் ஸ்லேவரி இண்டெக்ஸ் 2014 அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
உலகில் உள்ள நவீன அடிமைகளில் 61 சதவிகிதம் பேர் உள்ள 5 நாடுகளில் இந்தியா முதல் இடத்தில் உள்ளது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சர்வதேச மனித உரிமைகள் அமைப்பும், வாக்ஸ்ப்ரீ பவுண்டேசன் அமைப்பும் இணைந்து 167 நாடுகளில் நடத்திய குளோபல் ஸ்லேவரி இண்டெக்ஸ் 2014 அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. அடிமைத் தளையை ஒழிக்கும் நோக்கத்தில் ஆண்டு தோறும் இந்த அறிக்கை தயாரிக்கப்படுகிறது.
உலகம் முழுவதும் 35.8 மில்லியன் மக்கள் நவீனக் கால அடிமைகளாக வாழ்கிறார்கள் என்று அதில் மதிப்பிடப்பட்டுள்ளது. மக்கள் தொகையில் நவீன அடிமைகள் அதிகம் வாழும் பட்டியலில் முதலிடத்தில் மவுரிடானியா உள்ளது.
2 ஆவது இடத்தில் உஸ்பெகிஸ்தான், 3 ஆவது இடத்தில் ஹைதி, 4 ஆவது இடத்தில் கத்தார், 5 ஆவது இடத்தில் இந்தியா உள்ளது.
உலகில் உள்ள நவீன அடிமைகளில் 61 சதவிகிதம் பேர் இந்தியா, பாகிஸ்தான், சீனா, ரஷ்யா, உஸ்பெகிஸ்தான் ஆகிய 5 நாடுகளில் உள்ளனர் என்றும், அந்த 5 நாடுகளில் இந்தியா முதல் இடத்தில் உள்ளது.
125 கோடியே 21 லட்சத்து 39 ஆயிரத்து 596 மக்கள் தொகை கொண்ட இந்தியாவில், 1 கோடியே 42 லட்சத்து 85 ஆயிரத்து 700 மக்கள் அடிமைகளாக வாழ்கிறார்கள்.
இந்தியாவில் கட்டுமானம், விவசாயம், வீட்டு வேலை, ஜவுளி உற்பத்தி உள்ளிட்ட தொழில்களில் மக்கள் நவீன அடிமைகளாக நடத்தப்படுவது ஆய்வில் தெரிய வந்துள்ளது.
இதுமட்டுமின்றி, கட்டாய பாலியல் தொழிலில் ஈடுபடுத்துதல், கட்டாயத் திருமணம் செய்து வைத்தல் போன்ற காரணங்களால் இந்தியாவில் பெண்கள் நவீன அடிமைகளாக உள்ளனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
நவீன அடிமைகள் கலாச்சாரம் பரவி வருவதால், உலகம் முழுவதும் அடிமை வாழ்க்கையை வாழ்பவர்களின் எண்ணிக்கை கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு 23 சதவிகிதம் அதிகரித்துள்ளது.
அடிமைத் தனத்தை ஒழிகக சர்வதேச ஒத்துழைப்பு அவசியம் என்றும், ஆட்களை வலுகட்டாயமாக வேலை வாங்குபவர்களுக்கு தண்டனையை அதிகரிக்க வேண்டும் என்றும் அந்த அறிக்கையில் வலியுறுத்தப்பட்டுள்ளது.
-
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
கனவுகள் தகர்ந்தன! மாணவர்களால் மறக்க முடியாத மே மாதம்! 24 லட்சம் மாணவர்களை பாதித்த தேர்வு குளறுபடிகள் -
கதறும் கராச்சி.. குடிநீர், மின்சாரம், கேஸ் எதுவும் இல்லை.. சிந்து நதியை நிறுத்தியதால் நிலைமை மோசம் -
இந்தியாவில் விருப்பப்பட்டு ஒருவர் பாலியல் தொழில் செய்வது குற்றமல்ல! உச்ச நீதிமன்றம் முக்கிய தீர்ப்பு -
JEE Advanced 2026: வெளியானது ஜேஇஇ அட்வான்ஸ்டு தேர்வு முடிவுகள்! முதல் 3 இடங்களை பிடித்தவர்கள் யார்? -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்!












Click it and Unblock the Notifications