உத்தரகாண்டில் பள்ளத்தாக்கில் பஸ் கவிழ்ந்து விபத்து... 12 பேர் பலி
டேராடூன்: உத்தரகாண்ட் மாநிலத்தில் பேருந்து ஒன்று பள்ளத்தாக்கில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 12 பேர் உயிரிழந்தாக தகவல் வெளியாகியுள்ளது.
அல்மோரா மாவட்டத்தின் மாசி நகரில் இருந்து பயணிகளுடன் புறப்பட்ட பேருந்து ஒன்று, நைனிடால் மாவட்டத்திலுள்ள ராம்நகருக்கு சென்றுகொண்ருந்தது. அப்போது சல்ட் நகரின் சுரிகாட்டி என்ற பகுதியில் இன்று காலை பேருந்து சென்றுகொண்டிருந்தபோது, அங்கிருந்த பள்ளத்தாக்கில் கவிழ்ந்து விபத்துக்குள்ளாது.

இந்த விபத்தில், 12 பேர் உயிரிழந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. 20க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர் அவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த மாவட்ட பேரிடர் மேலாண்மை அதிகாரி ராகேஷ் ஜோஷி மீட்பு பணிகளை மேற்கொள்ள உத்தரவிட்டுள்ளார். விபத்திற்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.












Click it and Unblock the Notifications