விமான எரிபொருளின் விலை 8.2%, மானியமில்லா கேஸ் சிலிண்டரின் விலை ரூ.5 உயர்வு
டெல்லி: விமான எரிபொருளின் விலை 8.2 சதவீதமும், மானியமில்லா கேஸ் சிலிண்டரின் விலை ரூ.5ம் உயர்த்தப்பட்டுள்ளது.
சர்வதேச சந்தையில் உள்ள எண்ணெய் நிலவரத்தின்படி விமான எரிபொருளின் விலை கிலோலிட்டருக்கு ரூ. 3,849.97 அதாவது 8.2 சதவீதம் உயர்த்தப்பட்டுள்ளது. அதன்படி தற்போது ஒரு கிலோலிட்டர் விமான எரிபொருளின் விலை ரூ. 50 ஆயிரத்து 363 ஆகும்.

கடந்த ஆகஸ்ட் மாதத்தில் இருந்து விமான எரிபொருளின் விலை குறைக்கப்பட்டு வந்தது. கடைசியாக பிப்ரவரி 1ம் தேதி விமான எரிபொருளின் விலை கிலோலிட்டருக்கு ரூ.5,909.9 குறைக்கப்பட்டது. கடந்த ஆகஸ்ட் மாதத்தில் இருந்து பிப்ரவரி 1ம் தேதி வரை விமான எரிபொருளின் விலை ரூ. 23 ஆயிரத்து 648.73 அதாவது 33 சதவீதம் குறைக்கப்பட்டது. இந்நிலையில் தான் ஞாயிற்றுக்கிழமை விமான எரிபொருளின் விலை உயர்த்தப்பட்டுள்ளது.
விமான நிறுவனங்களின் செலவில் 40 சதவீதம் எரிபொருளுக்கு தான் செல்கிறது. இந்நிலையில் எரிபொருளின் விலை உயர்த்தப்பட்டுள்ளது பற்றி விமான நிறுவனங்கள் இதுவரை கருத்து எதுவும் தெரிவிக்கவில்லை.
மேலும் டெல்லியில் 14.2 கிலோ எடை கொண்ட மானியமில்லா கேஸ் சிலிண்டர் ஒன்றின் விலை ரூ.5 உயர்த்தப்பட்டுள்ளது. தற்போது கேஸ் சிலிண்டர் ஒன்றின் விலை ரூ.610 ஆக உள்ளது. கடந்த ஆகஸ்ட் மாதத்தில் இருந்து மானியமில்லா கேஸ் சிலிண்டரின் விலை 7 முறை குறைக்கப்பட்டது.
கடந்த பிப்ரவரி மாதம் 1ம் தேதி தான் கடைசியாக மானியமில்லா கேஸ் சிலிண்டரின் விலை ரூ.103.5 குறைக்கப்பட்டது. கடந்த ஆகஸ்ட் மாதத்தில் இருந்து பிப்ரவரி வரை மானியமில்லா கேஸ் சிலிண்டரின் விலை ரூ.317.50 குறைக்கப்பட்டது.
அரசுத் துறை நிறுவனங்களான இந்தியன் ஆயில், பாரத் பெட்ரோலியம், ஹிந்துஸ்தான் பெட்ரோலியம் ஆகியவை சர்வதேச சந்தை நிலவரத்திற்கேற்ப விமான எரிபொருள் மற்றும் மானியமில்லா கேஸ் சிலிண்டரின் விலையை ஒவ்வொரு மாத துவக்கத்திலும் மாற்றி வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.
-
பாஜகவுக்கு ஆதரவு தரும் திமுக? டெல்லியை அதிர வைக்க போகும் மாற்றம்.. ரெடியாகும் மாஸ்டர் பிளான் -
வெளிநாடு போயிருக்கதே 'ரீல்ஸ்' பார்த்துதான் தெரியுது.. அமைச்சர் கீர்த்தனாவை கலாய்த்த மேயர் பிரியா! -
வெளிப்படையாக வார்னிங் கொடுத்த விஜய்.. சிங்கப்பெண் நிகழ்ச்சியில் நடந்த முக்கிய விஷயம்! -
விஜய் - மோடி சந்திப்புக்கு பின்பு நடந்த முக்கிய மாற்றம்! தரமான செயல்..! #தமிழ்த்தாய்வாழ்த்து -
HDFC வங்கியால் கடன் வாங்கிய அனைவருக்கும் ஷாக்.. உங்க EMI அதிகரிக்க போகிறது? -
கடைசியில் ட்விஸ்ட்.. பாஜக சொன்ன பாயிண்டு! காங்கிரஸ் வேட்பாளர் மீனாட்சி நடராஜன் வேட்புமனு நிராகரிப்பு -
வெளிநாட்டு வாழ் இந்தியர்களுக்கு NRI ஜாக்பாட்! கையில் டாலர் இருந்தா போதும், RBI கொடுத்த மெகா சலுகை! -
தலைவரை நீக்குங்க.. விஜய் வென்றதும் வாட்ஸ் ஆப்பில் பறந்த மெசேஜ்! ரெடியாகும் தங்க நகை.. என்ன நடக்குது? -
41 வயது பெண் கூட்டு பலாத்காரம்.. வலைதள வீடியோவால் சிக்கிய 10 பேர் கும்பல்.. கர்நாடகாவில் கொடூரம் -
எலான் மஸ்க்-ன் 'SpaceX' ஐபிஓ.. இந்திய முதலீட்டாளர்களுக்கு காத்திருக்கும் அரிய வாய்ப்பு! -
"அந்த" 14 கையெழுத்தால் வந்த சிக்கல்.. மம்தா வீட்டில் சிஐடி அதிரடி சோதனை.. மேற்கு வங்கத்தில் பதற்றம் -
தமிழ்நாட்டில் 6 ஐஏஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்.. தமிழக அரசு அதிரடி உத்தரவு!












Click it and Unblock the Notifications