வாக்குப்பதிவுக்கு நடுவே பாஜக லீக் செய்த ஆடியோ.. அதே பாணியில் தரமான பதிலடி கொடுத்த மம்தா!
கொல்கத்தா: மேற்குவங்க மாநிலம் நந்திகிராம் தொகுதி பாஜக துணைத் தலைவரிடம், மம்தா பானர்ஜி உதவி கேட்பது போன்ற ஆடியோ வெளியாகி பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி இருந்தது. இந்நிலையில் திடீர் திருப்பமாக பா.ஜ.க.வின் முகுல் ராய் தேர்தல் ஆணையத்தில் செல்வாக்கு செலுத்துவது குறித்து விவாதிக்கும் வீடியோவை திரிணாமுல் காங்கிரஸ் வெளியிட்டுள்ளது.
அசாம் மற்றும் மேற்கு வங்க சட்டசபைத் தேர்தலுக்கான முதற்கட்ட வாக்குப்பதிவு இன்று நடைபெற்றது. . மேற்கு வங்காத்தில் மொத்தமுள்ள 294 இடங்களில் 30 தொகுதிகளுக்கு இன்று வாக்குப்பதிவு நடந்தது.
மேற்குவங்கத்தில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சிக்கும், பாஜகவிற்கும் இடையே கடும் போட்டி நிலவுகிறது. எப்படியாவது முதல்வர் மம்தாவின் ஆட்சியை அகற்ற வேண்டும் என்று பாஜக தீவிரமாக இறங்கி உள்ளது.

கருத்துக்கணிப்புகள்
ஒரு காலத்தில் பாஜக வளர காரணமாக இருந்தது திரிணாமுல் காங்கிரஸ் கட்சி. ஆனால் இன்று திரிணாமுல் காங்கிரஸ்யை விழுங்கும் அளவிற்கு பாஜக வளர்ந்துள்ளது. கருத்துக்கணிப்புகள் எல்லாமே திரிணாமுல் காங்கிரிஸ் கட்சிக்கு சாதகமாக இருந்தாலும் பாஜகவிற்கு கிட்டத்தட்ட திரிணாமுல் காங்கிரஸ கட்சி அளவிற்கு 100 தொகுதிகளுக்கு மேல் வெல்லும் என்று கூறுகின்றன.

மம்தாவிற்கு ஷாக்
இதனால் உற்சாகத்தில் உள்ள பாஜக 8 கட்டமாக நடைபெற உள்ள மேற்கு வங்க தேர்தலில் பல்வேறு புதிய அஸ்திரங்களை எடுத்து மம்தாவை வீழ்த்த கடுமையாக முயன்று வருகிறது. அப்படியொரு முயற்சியை பாஜக செய்து உள்ளது. திரிணாமுல் காங்கிரசில் மம்தாவின் நம்பிக்கைக்குரிய தலைவராக, அமைச்சராக இருந்த சுவெந்து அதிகாரியை பாஜக தங்கள் பக்கம் இழுத்தது. இதனால் ஆத்திரமடைந்த மம்தா, சுவெந்து அதிகாரியின் சொந்த தொகுதியான நந்திகிராமில் போட்டியிடப்போதவாக அறிவித்தார். அதன்படி சுவேந்து அதிகாரியை களத்தில் இறங்கி உள்ளார் மம்தா. போட்டி அங்கு கடுமையாக உள்ளது.

மம்தா ஆடியோ
இந்த நிலையில், பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தும் வகையில், ஆடியோ ஒன்றை பாஜக தலைவர் அமித் மால்வியா இன்று ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளார். அதில், தான் போட்டியிடும் நந்திகிராம் தொகுதியின் பாஜக துணைத் தலைவர் Proloy Pal என்பவரிடம் மம்தா பானர்ஜி வங்க மொழியில் தொலைபேசியில் உரையாடுவது போல் உள்ளது. அதில், தனது வெற்றிக்கு உதவுமாறு மம்தா கேட்பதாக அமித் மால்வியா கூறியுள்ளார் இதற்கு பதிலளிக்கும் பிரலாய், திரிணாமூல் காங்கிரஸ் கட்சியில் தான் மிகவும் அவமானப்படுத்தப்பட்டதாகவும், தானும் தனது குடும்பமும் பாஜகவுக்கு துரோகம் செய்ய மாட்டோம் என்று பதில் அளித்ததாக அமித் மால்வியா கூறியிருக்கிறார்.

திரிணாமுல் காங்கிரஸ் பதிலடி
இந்த வீடியோவை மறுத்துள்ள திரிணாமுல் காங்கிரஸ், மம்தாவின் ஆடியோ அல்ல என்று விளக்கம் அளித்துள்ளது. அதேநேரம் பாஜகவின் முகுல் ராய் , மற்றொரு பாஜக தலைவர் ஷிஷிர் பஜோரியா உடன் பேசும் ஆடியோ கிளிப்பை திரிணாமுல் காங்கிரஸ் வெளியிட்டுள்ளது. அதில் முகுல்ராய் தேர்தல் ஆணையத்தில் செல்வாக்கு செலுத்துவது எப்படி என்பது குறித்து விவாதிப்பது போல் உள்ளது. இரு தரப்பும் முதற்கட்ட தேர்தலிலேயே ஆடியோவை மாறி மாறி வெளியிட்டுள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications