சுஷ்மா சுவராஜைச் சந்தித்தார் ஆஸி. பிரதமர் டோனி அபோட்
Subscribe to Oneindia Tamil
மும்பை: இந்தியா வந்துள்ள ஆஸ்திரேலிய பிரதமர் டோனி அபோட், இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜை சந்தித்தார்.

இரண்டு நாள் பயணமாக இந்தியா வந்துள்ளார் ஆஸ்திரேலிய நாட்டு பிரதமர் டோனி அபோட். நேற்று காலை மும்பை விமான நிலையத்தில் வந்திறங்கிய டோனி அபோட், பின்னர் மராட்டிய கவர்னர் வித்யாசாகர் ராவைச் சந்தித்துப் பேசினார். அப்போது அவருக்கு கவர்னர் பூங்கொத்து கொடுத்து வரவேற்றார்.
முன்னதாக மும்பையில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்ட டோனி அபோட், 2008-ம் ஆண்டு தீவிரவாதிகள் தாக்குதலுக்கு உள்ளான தாஜ் ஓட்டல் வளாகத்தில் உள்ள நினைவு சின்னத்தில் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார்.
அதனைத் தொடர்ந்து டெல்லி வந்த டோனி அபோட் வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜை சந்தித்துப் பேசினார்.












Click it and Unblock the Notifications