கேரளாவில் இறக்கிவிட்ட பெண்ணின் வீட்டிற்குள் சென்று பலாத்காரம் செய்த ஆட்டோ டிரைவர்!
திருவனந்தபுரம்: கேரளாவில் ஆட்டோ ஓட்டுநர் ஒருவர் பயணியைப் பலாத்காரம் செய்த சம்பவம் பெரும் பரபரப்பினை ஏற்படுத்தியுள்ளது.
திருவனந்தபுரம் அருகே உள்ள ஆற்றிங்கல்லை அடுத்த செப்பள்ளி பகுதியைச் சேர்ந்தவர் ராஜேஷ். இவர் செப்பள்ளி ஆட்டோ ஸ்டாண்டில் ஆட்டோ ஓட்டி வருகிறார்.

சம்பவத்தன்று அதே பகுதியைச் சேர்ந்த சுமார் 38 வயது மதிக்கத்தக்க ஒரு பெண் ராஜேசின் ஆட்டோவில் சவாரி செய்தார். அவர் ஆற்றிங்கல் மார்க்கெட்டுக்கு சென்று வீட்டுக்கு தேவையான பொருட்களை வாங்கிக் கொண்டு ஆட்டோ மூலம் தனது வீட்டிற்கு சென்றார்.
அந்த பெண்ணின் வீடு ஆள் நடமாட்டம் அதிகம் இல்லாத இடத்தில் இருந்தது. மேலும் அப்போது அந்த வீட்டில் வேறு யாரும் இல்லை. தனியாக இருந்த அந்த இடத்தில் பெண் பயணியை இறக்கி விட்ட ஆட்டோ டிரைவர் ராஜேசுக்கு விபரீத எண்ணம் ஏற்பட்டது.
உடனே அவர், அந்த பெண்ணின் கையை பிடித்து இழுத்து பலாத்காரம் செய்ய முயன்றார். இதனால் அதிர்ச்சி அடைந்த அந்த பெண் அவரிடம் இருந்து தப்பி வீட்டிற்குள் ஓடினார். ஆனால் அவரை பின் தொடர்ந்து அங்கு சென்ற ராஜேஷ் அந்த பெண்ணை பலாத்காரம் செய்து விட்டு தப்பி ஓடி விட்டார்.
இதுபற்றி ஆற்றிங்கல் போலீசில் பாதிக்கப்பட்ட பெண் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து ஆட்டோ டிரைவர் ராஜேசை கைது செய்தனர். அவர் மீது ஏற்கனவே பெண்களிடம் அத்துமீறியதாகவும், அடிதடி வழக்குகளும் உள்ளது.
-
சென்னையை அதிரவைத்த மூதாட்டி - சிறுவன் மீதான பாலியல் வன்கொடுமை.. தேசிய மகளிர் ஆணையம் அதிரடி -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்!












Click it and Unblock the Notifications