‛ஒருநாள் மழைக்கே தாங்கலையே’.. 6 மாதத்திலேயே இடிந்து விழுந்த அயோத்தி ரயில் நிலைய சுவர்.. என்னாச்சு?
அயோத்தி: அயோத்தி ராமர் கோவில் கும்பாபிஷேகத்தையொட்டி புனரமைக்கப்பட்டு திறக்கப்பட்ட அயோத்தி ரயில் நிலையத்தின் சுற்றுச்சுவர் வெறும் 6 மாதத்தில் ஒரு நாள் மழைக்கே தாக்குப்பிடிக்க முடியாமல் இடிந்து விழுந்துள்ளது. இதனால் எதிர்க்கட்சிகள் பாஜகவை விமர்சிக்க தொடங்கி உள்ளன.
உத்தர பிரேதச மாநிலம் அயோத்தியில் புதிதாக ராமர் கோவில் கட்டப்பட்டுள்ளது. இந்த ராமர் கோவிலின் கும்பாபிஷேகம் என்பது கடந்த ஜனவரி மாதம் 22ம் தேதி நடந்தது. பிரதமர் மோடி கும்பாபிஷேகத்தில் பங்கேற்று பிரதிஷ்டை செய்தார்.

முன்னதாக அயோத்தி ராமர் கோவில் கும்பாபிஷேகத்தையொட்டி அயோத்தி ரயில் நிலையம் புனரமைக்கப்பட்டு பெயர் மாற்றம் செய்யப்பட்டது.
அயோத்தி ராமர் கோவில் கட்டிய பிறகு இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் இருந்து அங்கு ரயிலில் ஏராளமான பக்தர்கள் வந்து செல்வார்கள் என்பதால் அந்த ரயில் நிலையம் கூடுதல் வசதிகளுடன் புனரமைக்கப்பட்டது. புனரமைப்பு பணி முழுவதுமாக முடிவடைந்த பிறகு கடந்த ஆண்டு டிசம்பர் 30ம் தேதி பிரதமர் மோடி அயோத்தி ரயில் நிலையத்தை திறந்து வைத்தார்.
மேலும் ரயில் நிலையத்தின் பெயர் என்பது மாற்றம் செய்யப்பட்டது. அயோத்தி ரயில்வே சந்திப்பு என்று இருந்த அதன் பெயர் அயோத்தி தாம் என மாற்றம் செய்யப்பட்டது. அயோத்தி தாம் என்பது ராமர்-சீதையின் இருப்பிடத்தை குறிக்கும் சொல்லாகும். இதனால் அயோத்தி ரயில்வே சந்திப்பு என்பது அயோத்தி தாம் என்று மாற்றம் செய்யப்பட்டது.
இத்தகைய சூழலில் தான் அயோத்தியில் தற்போது மழை பெய்து வருகிறது. நேற்று கனமழை பெய்தது. இந்நிலையில் தான் மழைக்கு தாக்குப்பிடிக்க முடியாமல் அயோத்தி ரயில் நிலையத்தின் வெளிப்புறம் கட்டப்பட்டுள்ள சுற்றுச்சுவர் இடிந்து விழுந்துள்ளது. சுமார் 20 அடி நீள சுற்றுச்சுவர் இடிந்து தரையில் விழுந்துள்ள நிலையில் சுற்றுச்சுவர் இன்னொரு பகுதி சாய்ந்தபடி எப்போது வேண்டுமாானலும் விழும் என்ற நிலையில் உள்ளது.
இதுதொடர்பான போட்டோ மற்றும் வீடியோக்கள் தற்போது இணையதளங்களில் பரவி வருகிறது. இந்நிலையில் தான் எதிர்க்கட்சி தலைவர்கள், நெட்டிசன்கள் பாஜகவை கடுமையாக விமர்சிக்க தொடங்கி உள்ளனர். அதாவது புனரமைப்பு பணி முடிவடைந்து கடந்த டிசம்பர் மாதம் தான் அயோத்தி ரயில் நிலையம் திறக்கப்பட்டது. தற்போது 6 மாதத்துக்கு சுற்றுச்சுவர் இடிந்து விழுந்துள்ளதால் தரமற்ற முறையில் கட்டப்பட்டுள்ளதாக நெட்டிசன்கள் விமர்சனம் செய்கின்றனர்.
அதேபோல் சமாஜ்வாதி கட்சியின் தலைவரும், உத்தர பிரதேச முன்னாள் முதல்வருமான அகிலேஷ் யாதவ், ‛‛பெரும் செலவில் கட்டப்பட்ட சுற்றுச்சுவர் ஒருநாள் மழைக்கே தாங்கவில்லை. பாஜக மாடலின் உண்மை முகம் இதுதான்'' என விமர்சனம் செய்துள்ளார்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications