நேரலையில் அயோத்தி ராமர் கோவில் கும்பாபிஷேக நிகழ்வை பார்ப்பது எப்படி? டிடி சேனல் சிறப்பு ஏற்பாடு!
அயோத்தி: அயோத்தி ராமர் கோவில் கும்பாபிஷேக விழாவை வீட்டில் இருந்தபடியே நேரலையில் பார்ப்பது எப்படி என்பதை இங்கு காணலாம்..
உத்தர பிரதேச மாநிலம் அயோத்தியில் கட்டப்பட்டுள்ள ராமர் கோவிலின் கும்பாபிஷேக விழா இன்று நடைபெறுகிறது. இந்த விழாவில் பிரதமர் மோடி, பாஜக உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சிகளின் தலைவர்கள், ஆன்மீக தலைவர்கள், அமைச்சர்கள், திரையுலக பிரபலங்கள், முக்கிய பிரமுகர்கள், பக்தர்கள் என லட்சக்கணக்கானோர் கலந்து கொள்கின்றனர்.

அயோத்தில் உள்ள ராமர் கோவிலில் இன்று மதியம் 12.20 மணி அளவில் ராமர் சிலை பிரதிஷ்டை செய்யும் நிகழ்வு நடைபெற உள்ளது. பிரதமர் மோடி முன்னிலையில் நடைபெறவிருக்கும் இந்த நிகழ்வுக்கான ஏற்பாடுகள் மிகவும் பிரம்மாண்டமான முறையில் செய்யப்பட்டுள்ளது. குழந்தை ராமர் சிலை பிரதிஷ்டை செய்யப்பட்டு, கும்பாபிஷேகம் நடைபெறும்.
அயோத்தி ராமர் கோவில் கும்பாபிஷேக நிகழ்வுக்கு பக்தர்களின் வருகையால் அயோத்தி நகரமே விழாக்கோலம் பூண்டுள்ளது. அயோத்தியில் கும்பாபிஷேகம் நடைபெறும் அதே நேரத்தில், இந்தியாவில் பல்வேறு பகுதிகளில் உள்ள கோவில்களில் யாகங்கள், ஹோமங்கள், சிறப்பு பூஜைகள் நடத்தவும் திட்டமிடப்பட்டுள்ளது. மேலும், நாடு முழுவதும் பல்வேறு பகுதிகளில், பொது இடங்களில் எல்.இ.டி திரை அமைத்து, அயோத்தி ராமர் கோவில் கும்பாபிஷேக நிகழ்வை நேரடியாக ஒளிபரப்பு செய்யப்பட உள்ளது.
PVR INOX திரையரங்குகளில் இன்று காலை 11 மணி முதல் 3 மணி வரை ராமர் கோயில் திறப்பு விழா நேரலையில் திரையிடப்படுகிறது. நாடு முழுவதும் ஏராளமான நகரங்களில் உள்ள 160க்கும் அதிகமான pvr inox திரையரங்கங்களில் அயோத்தி ராமர் கோவில் கும்பாபிஷேக விழா நேரலையில் திரையிடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்காக கட்டணமாக 100 ரூபாய் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
அதேபோல வீட்டில் இருந்தபடியும், அயோத்தி ராமர் கோவில் கும்பாபிஷேக நிகழ்வை நேரலையில் பார்க்கலாம். இந்திய அரசின் தொலைக்காட்சியான தூர்தர்ஷனில் அந்தந்த மொழிகளில் இன்று காலை 7 மணி முதலே அயோத்தி ராமர் கோவில் நிகழ்வுகள் நேரலையாக ஒளிப்பரப்பப்பட்டு வருகிறது. வெவ்வேறு மொழிகளில் இருக்கும் அதன் கவரேஜிற்காக, அயோத்தி நகரத்தின் பல்வேறு இடங்களில் DD கிட்டத்தட்ட 40 கேமராக்களை நிறுவியுள்ளது.
டிடி நியூஸ், டிடி தமிழ், டிடி நேஷனல் ஆகிய சேனல்களில் நேரலையாக பார்க்கலாம். மேலும், பல்வேறு தனியார் செய்தி தொலைக்காட்சிகளும், அயோத்தி ராமர் கோவில் நிகழ்வுகளை நேரலையாக ஒளிபரப்பு செய்கின்றன. டிடி தமிழ் சேனல் உள்ளிட்ட தொலைக்காட்சியின் யூடியூப் பக்கத்திலும் நேரலை செய்யப்படுகிறது. நமது ஒன் இந்தியா தளத்திலும், அயோத்தி ராமர் கோவில் திறப்பு விழா நிகழ்வுகள் உடனுக்குடன் பகிரப்பட்டு வருகிறது.
-
டோட்டலாக தனிமைப்படுத்தப்பட்ட திமுக! உச்சக்கட்ட ஹேப்பியில் பாஜக.. தவெக விஜய் அரசுக்கு சிக்கலா? -
மோடி, நிர்மலா சீதாராமன் சந்திப்பின்போது.. கூடவே போன ஜோசியர்! சலசலப்பை கிளப்பிய விஜய்! -
97 ரன்களில் அவுட்.. ஒட்டுமொத்த மைதானமும் சோகம்.. உலக சாதனையை தவறவிட்ட வைபவ் சூர்யவன்ஷி! -
முதல்வர் விஜய்யை சந்திக்க நேரம் ஒதுக்காத அமித் ஷா.. என்ன நடந்தது? -
பிரதமர் மோடிக்கு நன்றி சொன்ன முதல்வர் விஜய்.. அதைவிட முக்கியம் 4 மேஜர் கோரிக்கைகள் -
"ஆர்.எஸ்.எஸ் பேரப்பிள்ளையாக மாறிய விசிக".. திருமா மீது பொன்.ராதாகிருஷ்ணன் கடும் தாக்கு! -
நிர்மலா சீதாராமனும் விஜய் கிட்ட அதையே சொல்வாரோ? 118 மேஜிக் நம்பர்.. தவெகவை அசைக்க முடியாத பின்னணி? -
ஒரே சீசனில் 61 சிக்ஸ்.. கெய்ல் சாதனையை 15 வயது சிறுவன் முடிச்சிட்டான்! தெறிக்கவிட்ட வைபவ் சூர்யவன்ஷி -
குதிரை பேரமா? எடப்பாடி பழனிசாமிதான் அதை செய்தார்! ஒரே போடாக போட்ட அமைச்சர் அருண்ராஜ் -
தமிழக அரசின் அதிரடி அறிவிப்பு! நுகர்வோருக்கு வந்த புதிய வசதி.. வெளியானது முக்கிய அப்டேட் -
“போலீஸ் என்றால் சிரிக்க கூடாதா? இதில் என்ன பிரச்சனை?” அமைச்சர் வன்னி அரசு சரமாரி கேள்வி! -
ரயிலில் உங்க சீட்டில் வேறு யாரேனும் இருந்தால் ரூ.20,000 இழப்பீடு? இந்த உத்தரவு பற்றி தெரியுமா












Click it and Unblock the Notifications