அயோத்தியில் ராமர் கோவில் ஓகே.. மசூதி எங்கே? விஜய் டிவி ‛புகழ்’ நாஞ்சில் விஜயன் பரபர வீடியோ!
அயோத்தி: அயோத்தியில் நேற்று ராமர் கோவில் கும்பாபிஷேகம் நேற்று சிறப்பாக நடந்து முடிந்தது. இந்நிலையில் தான் அயோத்தி ராமர் கோவில் மற்றும் மசூதி தொடர்பாக விஜய் டிவி நிகழ்ச்சிகள் மூலம் பிரபலமான நாஞ்சில் விஜயன் பரபரப்பாக பேசி வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அயோத்தி சர்ச்சைக்குரிய இடம் தொடர்பாக கடந்த 2019ம் ஆண்டில் உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. அதாவது அயோத்தியில் ராமர் கோவில் கட்டி கொள்ளலாம் என உச்சநீதிமன்றத்தின் 5 நீதிபதிகள் அடங்கிய அமர்வு உத்தரவிட்டது.

இதையடுத்து 2020ம் ஆண்டில் பிரதமர் நரேந்திர மோடி ராமர் கோவிலுக்கு அடிக்கல் நாட்டினார். ராமர் கோவில் 3 அடுக்குகளாக அமைய உள்ள நிலையில் முதல் தளத்தில் பணிகள் முழுவதுமாக முடிந்துள்ளது.
இதையடுத்து நேற்று கும்பாபிஷேகம் நடந்து முடிந்தது. கோவில் கருவறையில் நிறுவப்பட்ட 5 வயது குழந்தை பருவ ராமர் சிலைக்கு பிரான் பிரதிஷ்டை சடங்குகளை பிரதமர் மோடி செய்தார். அதன்பிறகு ராமர் சிலையின் கண்கள் திறக்கப்பட்டு கும்பாபிஷேகம் முடிவடைந்தது. இன்று முதல் பொதுமக்கள் அயோத்தி ராமர் கோவிலில் தரிசனம் செய்து வருகின்றனர். கூட்டம் அலைமோதுகிறது. இன்று ஒரேநாளில் 5 லட்சத்துக்கும் அதிகமானவர்கள் கோவிலில் தரிசனம் செய்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதற்கிடையே தான் விஜய் டிவியில் பல்வேறு நிகழ்ச்சியில் பங்கேற்று புகழ் பெற்ற நாஞ்சில் விஜயன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அயோத்தி ராமர் கோவில் மிகப்பிரமாண்டமாக கட்டியது போல் அங்கு மசூதியும் மிகப்பிரமாண்டமாக கட்டிவிட்டு ‛ஜெய் ஸ்ரீராம்' கோஷம் எழுப்ப வேண்டும் என அவர் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் பேசிய வீடியோவில், ‛ஜெய் ஸ்ரீராம்' இந்த வார்த்தை தான் இந்தியா முழுவதும் இப்போது கேட்டு கொண்டு உள்ளது.
ஒருபக்கம் ராமர் பிறந்த பூமியான அயோத்தியில் ராமருக்கு மிகப்பெரிய கோவில் கட்டிய சந்தோஷம். இன்னொரு பக்கம் பாபர் மசூதியை இடித்துவிட்டு தான் கோவில் கட்டியிருக்கீங்க என்ற வருத்தம். ஒன்றை நாம் புரிந்து கொள்ள வேண்டும். இந்தியாவை ஆண்ட மன்னர், ஆட்சியாளர்கள் தான் விரும்பும் கடவுள், இருக்கும் மதத்துக்கு கோவில் கட்டுவது வழக்கம்.
அது ராஜராஜசோழன் காலத்தில் இருந்து இன்று வரை உள்ளது. அப்படித்தான் பாரத பிரதமர் தனக்கும், ராமருக்கு பெருமை சேர்க்கும் வகையில் மிகப்பெரிய கோவிலை கட்டியுள்ளார். ஆனால் இந்தியா என்பது மதம் சார்ந்த நாடு இல்லை. வேற்றுமையில் ஒற்றுமை, எம்மதமும் சம்மதம் எனச்சொல்லி தான் நாம் குழந்தைகளை வளர்த்து கொண்டு இருக்கிறோம். நாமும் வளர்ந்து இருக்கிறோம்.
மேலும்‛பாய்' வீட்டில் ரம்ஜான் என்றால் இந்து வீட்டுக்கு பிரியாணி வரும். இந்து வீட்டில் பண்டிகை என்றால் ‛பாய்' வீட்டுக்கு பலகாரம் போகிறது. இப்படித்தான் நாம் வாழ்ந்து வருகிறோம். இன்றைக்கு அயோத்தியில் ராமர் கோவில் பிரமாண்டமாக கட்டி உள்ளோம். ஆனால் நீதிமன்ற தீர்ப்பின்படி மசூதி கட்டவும் இடம் ஒதுக்கி இருக்கிறார்கள். ஆனால் இன்று வரை மசூதி எழுப்பப்படவில்லை. அந்த இடத்திலும் மிகப்பிரமாண்டமாக மசூதி எழுப்பிவிட்டு ஒட்டுமொத்த இந்தியர்களும் இந்துக்கள் உட்பட அனைவரும் ஜெய் ஸ்ரீராம் என்று சத்தமாக முழக்கம் இடுவோம்'' என தெரிவித்துள்ளார்.
நாஞ்சில் விஜயனின் இந்த கருத்தை ஒரு தரப்பினர் வரவேற்கும் நிலையில் இன்னொரு தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்து கமெண்ட்டில் கருத்து பதிவிட்டு வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. அதாவது 2019ல் அயோத்தி ராமர் கோவில் வழக்கில் உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியபோது பாபர் மசூதிக்கு பதிலாக, புதிய மசூதி கட்ட உத்தர பிரதேச மாநில அரசு 5 ஏக்கர் நிலம் ஒதுக்க உத்தரவிட்டது. அதன்படி பாபர் மசூதி இருந்த இடத்தில் இருந்து 22 கிலோமீட்டர் தொலைவில் 5 ஏக்கர் நிலம் வழங்கப்பட்டுள்ளது.
தனிப்பூர் எனும் கிராமத்தில் அந்த இடம் உள்ளது. இந்த இடமானது உத்தர பிரதேச அரசு சார்பில் அங்குள்ள சன்னி முஸ்லிம் மத்திய வக்ஃபு வாரியத்திடம் வழங்கப்பட்டது. இங்கு ஐக்கிய அரபு நாடுகள் மற்றும் மத்திய கிழக்கு நாடுகளில் இருக்கும் மசூதிகளை போல் மசூதி கட்ட திட்டமிடப்பட்டுள்ளது. அதோடு மசூதியுடன் மருத்துவமனையும் கட்ட முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்கான வரைபடங்கள் அயோத்தி மாநகர வளர்ச்சி ஆணையத்தின் அனுமதிக்காக வழங்கப்பட்டுள்ளது. இத்தகைய சூழலில் தான் நாஞ்சில் விஜயன் இந்த வீடியோவை வெளியிட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
-
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம் -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
பிள்ளையை கிள்ளி விட்ட இஸ்ரேல்.. தொட்டிலை ஆட்டும் அமெரிக்கா! வெறி கொண்டு அடிக்கும் ஈரான்.. குண்டு மழை -
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம் -
3 அமைச்சர்களை எதிர்க்கும் தமாக! அதிமுக – பாஜக வழங்கிய தொகுதியை கவனிச்சீங்களா.. 5 தொகுதியும் கடினம் -
கரண்ட் பில் இலவசம்? இனி கட்ட வேண்டாமா? மத்திய அரசு ₹78,000 மானியம்! உங்க வீட்டிற்கு எப்படி வாங்குவது -
பிடுங்கப்படும் டிரம்பின் பவர்! அதிபர் பதவியிலேயே இருந்தாலும் அதிகாரம் இருக்காது.. நிலைமை மோசம்! -
நல்ல காலம் பொறக்குது.. தங்கம், வெள்ளியை முடிஞ்ச அளவு வாங்குங்க! ‘கோல்டுமேன்’ அடுக்கும் காரணங்கள்! -
மருமகள் உள்ளே, சீனியர் வெளியே? 55 கால சாம்ராஜ்ஜியத்திற்கு செக்! காட்பாடி திருப்பத்தின் பின்னணி என்ன -
இரட்டை இலையை விட்டுவிட்டு.. தாமரைக்கு தாவும் கூட்டணி கட்சிகள்! எங்கேயோ இடிக்குதே! -
ஈரானை சுத்துப்போடும் ‘பாராசூட் அட்டாக்’ டீம்.. டிரம்ப் பெரிய பிளான்.. போர் இப்போதைக்கு முடியாது? -
10 சவரன் கையில், 8 சவரன் பில்லில்! பழைய நகையை மாற்றினால் நடக்கும் ரகசியம்.. ஏமாறாமல் இருக்க இதோ வழி












Click it and Unblock the Notifications