4,000 பேருக்கு அறுசுவை விருந்து! எதிலும் பிரம்மாண்டம்! அதிமுகவில் கலக்கும் அய்யாதுரை பாண்டியன்!
தென்காசி: முத்துராமலிங்கத் தேவர் குருபூஜை மற்றும் ஜெயந்தி விழாவை முன்னிட்டு அதிமுக சார்பில் தென்காசி மாவட்டத்தில் 4,000 பேருக்கு அறுசுவை விருந்து கொடுத்திருக்கிறார் அய்யாதுரை பாண்டியன்.
அண்மையில் தான் எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் அய்யாதுரை பாண்டியன் அதிமுகவில் இணைந்தார்.
தனது பிரம்மாண்டங்களால் கட்சியில் இணைந்த ஒரு மாதத்திற்குள்ளாகவே அதிமுக தலைமையின் குட் புக்கிலும் இடம்பிடித்துவிட்டார் அய்யாதுரை பாண்டியன்.

அய்யாதுரை பாண்டியன்
தென்காசி மாவட்டத்தை சேர்ந்த பிரபல தொழிலதிபரான அய்யாதுரை பாண்டியன், கடந்த 5ஆம் தேதி தான் அதிமுகவில் இணைந்தார். சேலத்தில் எடப்பாடி பழனிசாமி தலைமையில் இணைந்த இவர், அதிமுக சார்பில் தென்காசி மாவட்டத்தில் தொடர்ச்சியாக நலத்திட்ட உதவிகளை வழங்கி கட்சி தலைமையின் கவனத்தை ஈர்த்திருக்கிறார். இதனிடையே இன்று முத்துராமலிங்கத் தேவர் ஜெயந்தி விழாவை ஒட்டி 4,000 பேருக்கு அறுசுவை விருந்து வைத்து அசத்தியிருக்கிறார்.

சேலை -வேட்டி சட்டை
இதேபோல் சங்கரன்கோவில், கடையநல்லூர் தொகுதிகளில் உள்ள பல கிராமங்களில் நூற்றுக்கணக்கானோருக்கு வேட்டி சட்டை மற்றும் சேலை எடுத்துக் கொடுத்து தேவர் ஜெயந்தி விழாவை கொண்டாடியுள்ளார். திமுகவில் இருந்தபோதும் சரி, அமமுகவில் இருந்த போதும் சரி தாம் நடத்தும் நிகழ்ச்சிகள் அனைத்தும் பிரம்மாண்டமாக இருக்க வேண்டும் என எண்ணுபவர் அய்யாதுரை பாண்டியன். குறிப்பாக நிர்வாகிகளிடம் பணத்தை கொடுத்து நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்யச் சொல்லாமல் தாமே நேரடியாக தலையிட்டு நிகழ்ச்சிகளை ஆர்கனைஸ் செய்து பயனாளிகளை தேர்வு செய்வார்.

10,000 பேர் இணைப்பு
அதிமுகவில் 10,000 பேரை இணைக்கும் நிகழ்ச்சிக்கு திட்டமிட்டுள்ள இவர் விரைவில் எடப்பாடி பழனிசாமியை தென்காசிக்கு அழைத்து வந்து விழா நடத்தவுள்ளார். அய்யாதுரை பாண்டியனின் சுறுசுறுப்பும், வேகமும் எடப்பாடி பழனிசாமிக்கு இரட்டிப்பு மகிழ்வை கொடுத்திருக்கிறது. இதனால் இவருக்கு அதிமுகவில் முக்கியப் பதவி ஒன்று வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. அய்யாதுரை பாண்டியன் முக்குலத்தோர் சமுதாயத்தை சேர்ந்தவர் என்பதால் இதன் மூலம் ஓ.பன்னீர்செல்வத்துக்கு செக் வைக்கவும் எடப்பாடி தரப்பு ஆலோசித்து வருகிறது.

சொந்த நிதி
அதிமுகவில் இணைந்து ஒரு மாதம் கூட ஆகாத நிலையில் அக்கட்சிக்காக பல லட்சங்களை இதுவரை செலவழித்து சீனியர் நிர்வாகிகளையே திரும்பிப் பார்க்க வைத்துள்ளார் அய்யாதுரை பாண்டியன் என்பது குறிப்பிடத்தக்கது.
-
இதுவும் பெரிய திமிங்கலம் தான்.. அதிமுகவுக்கு அடுத்த ஆப்பு வைத்த விஜய்! சி.விஜயபாஸ்கரின் திடீர் மூவ்! -
கதை ஓவர்! அதிமுகவில் இருந்து நீக்கியதை எதிர்த்த மனுவை வாபஸ் பெற அனுமதி கேட்ட ஒபிஎஸ்.. இன்று விசாரணை -
பெரிய புள்ளி.. அதிமுகவுக்கு அடுத்த ஆப்பு! வலையை விரித்த செங்க்ஸ்.. தவெகவுக்கு தாவ தயாரான சிவிஎஸ்! -
எல்லாத்தையும் நான் பாத்துக்குறேன்..நீங்க ஒத்துழைப்பு மட்டும் கொடுங்க! ர.ர.க்களுக்கு எடப்பாடி மெசேஜ்! -
எடப்பாடி பழனிசாமிக்கு நிம்மதி.. IT விசாரணை கோரிய வழக்கை தள்ளுபடி செய்தது சென்னை உயர் நீதிமன்றம் -
தொண்டர்களுக்கு மதிப்பு கொடுங்க.. அதிமுக தலைவர்கள் திருத்தி கொள்ளணும்.. செல்லூர் ராஜூ ஒரே போடு! -
அதிமுக பெயரையே தவிர்க்கும் விஜய்?.. தவெக வியூகத்தால் அதிருப்தியில் தொண்டர்கள்! -
இன்ஸ்டாவில் பொய் செல்லி.. ஆட்சிக்கு வந்துட்டாரு விஜய்! யாரும் கலங்க வேண்டாம்.. ஆறுதலாக பேசிய கேடிஆர் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது












Click it and Unblock the Notifications