பெண் குழந்தை வேணுமா.. ரொம்ப சீப்புதான்... 5000 போதும்... இது தெலுங்கானா பகீர்!
நல்கொண்டா: தெலுங்கானாவில் அரசு நடத்தும் மையம் ஒன்றில் பெண் குழந்தைகள் வெளிப்படையாக விற்கப்படும் கொடுமையை ஆங்கில செய்தி சேனல் ஒன்று அம்பலப்படுத்தியுள்ளது.
ஆந்திராவில் இருந்து கடந்தாண்டு பிரிந்து தனி மாநிலமாக உருவெடுத்தது தெலுங்கானா. இங்குள்ள பின் தங்கிய மாவட்டங்களில் ஒன்றான நல்கொண்டா பகுதியில் தான் இவ்வாறு பெண் குழந்தைகள் விற்கப்படுவதாக என்.டி.டி.வி செய்தி வெளியிட்டுள்ளது.
இது தொடர்பாக அந்த செய்தி சேனலின் ஆசிரியர்கள் மற்றும் மாநில குழந்தைகள் உரிமை கமிஷன் உறுப்பினர்கள் நல்கொண்டாவிற்கு பயணம் செய்து உள்ளனர். அப்போது தேவாரகொண்டா பகுதியில் உள்ள அரசு நடத்தும் மையத்தில் குழந்தைகள் விற்கப் படுவது தெரிய வந்துள்ளது.

குழந்தைகள் சந்தை:
குழந்தையில்லாத பெற்றோர்கள் அங்கு சென்று குழந்தைகளை சில ஆயிரம் ரூபாய் கொடுத்து பெற்றோரிடமே வாங்கி வருகின்றனராம். இந்த செய்திக்குழுவின் குழந்தை வாங்க வந்திருப்பது போலவே நாடகமாடி ஆட்டோ டிரைவர் ஒருவர் மூலம் அங்கு சென்றுள்ளனர்.
அப்போது, அவர்களுக்கு பல குழந்தைகள் காட்டப்பட்டுள்ளது. அவற்றில் உங்களுக்கு பிடித்த குழந்தைகளை நீங்கள் தேர்வு செய்துக் கொள்ளுங்கள் என்று அங்கிருந்தவர்கள் கூறியுள்ளனர்.
அங்கு சுமார் 8 முதல் 10 வரையிலான குழந்தைகள் இருந்ததாகவும், ஆனால் அவற்றில் ஆண் குழந்தைகள் எதுவும் இல்லை, அனைத்தும் பெண் குழந்தைகள் தான் என்றும் அந்தச் செய்தியில் கூறப்பட்டுள்ளது.
மேலும், இடைத்தரகர் ஒருவர் மூலம் அன்று மாலைக்குள்ளேயே ஒரு குழந்தையை தத்தெடுத்துக் கொள்ள ஏற்பாடு செய்யப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பெண் குழந்தைகள் மட்டும்:
இவ்வாறு விற்கப் படும் பெண் குழந்தைகள் அனைத்தும், ஆண் குழந்தையின் மீது மோகம் கொண்ட குடும்பங்களால் ஒப்படைக்கப்பட்டவை என்று கூறப்படுகிறது. அதோடு, பழங்குடியின மக்கள் வாழும் இம்மாவட்டத்தில் பெரிதும் ஏழ்மை காரணமாகவும் பெண் குழந்தைகள் விற்கப்படுகின்றனர்.
அரசு சட்டத்தின்படி குழந்தையை தத்து கொடுப்பவர்கள் அபிடவிட்டில் கையெழுத்திட வேண்டும், அவர்கள் குழந்தை தத்து கொடுப்பதற்கு 90 நாட்களில் தங்களுடைய நிலையை மாற்றிக் கொள்ளவும் வாய்ப்பு வழங்கப்பட்டு உள்ளது. பின்னர் நடைமுறையின்படி குழந்தை தத்து வழங்கப்படும். ஆனால் நல்கொண்டாவில் முறையற்ற வகையில், குழந்தைகள் வழங்கப்படுகிறது.
முறையற்ற ஆவணங்கள்:
மேலும், அந்த மையத்தில் ஆவணங்கள் முறையாக பராமரிப்பு செய்யப்படவில்லை என்பது உறுதியாகி உள்ளது. இது குறித்து இடைத்தரகர் பேசுகையில், "ஒரு குழந்தைக்கு மற்றொரு குழந்தையை மாற்றிவிட்டால் யார் மேடம் தெரிந்துக் கொள்வார்? இங்கு இது வாடிக்கையானதே" எனக் கூறியுள்ளார்.
அதேபோல், "உங்களுக்கு ஒரு வாரத்தில் குழந்தையை தயார் செய்வது எங்களுடைய பொறுப்பு ஆகும். நாங்கள் மிகவும் தேடி குழந்தையின் புகைப்படத்தை உங்களுக்கு வாட்ஸ் அப் மற்றும் மெயிலில் அனுப்பி வைப்போம். பெண் குழந்தை ரூ. 5 ஆயிரத்தில் வாங்கிவிடலாம்'' என்றும் அவர் உறுதி அளித்துள்ளார்.
"நீங்கள் நேற்று வந்து இருந்தால் இதே விலையில் இரட்டை குழந்தைகள் இருந்தது," இரட்டை பெண் குழந்தையை பெற்ற பெண்ணுக்கு ஏற்கனவே இரண்டு குழந்தைகள் இருக்கிறது. இரண்டு குழந்தைகளையும் நாங்கள் ரூ. 3000-5000 ஆயிரத்திற்கு கொடுத்துவிட்டோம். என்றும் அவர் கூறியதாக அந்த செய்தியில் கூறப்பட்டுள்ளது.
இடைத் தரகர்கள்:
இதற்கிடையே காம்லி என்ற பெண்ணிடம் இருந்து செய்தியாளர்களுக்கு தொலைபேசி அழைப்பு வந்துள்ளது. அதில், ‘ரூ. 30 ஆயிரத்திற்கு பெண் குழந்தையை வழங்குவதாக' அவர் தெரிவித்துள்ளார். செய்தியாளர்கள், காம்லியிடம் இருந்து தொலைபேசி அழைப்பு வருவதற்கு முன்னதாகவே அவர் குழந்தை விற்பனையில் பெயர் போனவர் என்று தெரிந்து வைத்து உள்ளனர். காம்லி பேசுகையில் "என்னுடைய பெயர் காம்லி பாய். இரண்டு முறை துணை பஞ்சாயத்து தலைவராக இருந்து உள்ளேன். இது 23 நாட்கள் ஆன குழந்தை. மிகவும் அழகான குழந்தை, நான் ரூ. 30 ஆயிரம் விலை நிர்ணயம் செய்து உள்ளேன். நான் உங்களுக்காக முன்பணம் ரூ. 5 ஆயிரம் வழங்கி உள்ளேன். நீங்கள் எப்போது வருவீர்கள்?" எனக் கூறுகிறார்.
செய்தியாளர்கள் காம்லியை சந்திக்கையில், காம்லி ரூ.50 ஆயிரம் கேட்டு வலியுறுத்தி உள்ளார். நான் பலருக்கு பணம் கொடுக்க வேண்டியது உள்ளது என்று காம்லி கூறிஉள்ளார். இதுதொடர்பாக யாரும் கேள்வி எழுப்பினாலோ, குழந்தையின் பெற்றோர்கள் திருப்பி கேட்டாலும் என்ன நடக்கும் என்று செய்தியாளர்கள் கேட்டு உள்ளனர். இதற்கு பதில் அளித்து உள்ள காம்லி "உங்களுக்கு காம்லியை பற்றி தெரியாது. நான் இதுவரையில் சுமார் 20 குழந்தைகளை வழங்கி உள்ளேன். இதுபோன்று ஒன்றும் நடந்தது கிடையாது," என்று உறுதியாக தெரிவித்து உள்ளார்.
அப்போது காம்லியின் சகோதரி இம்லி பேசுகையில் "அனைத்து நடைமுறைகளையும் என்னுடைய சகோதரி பார்த்துக் கொள்வார். நாங்கள் எங்களுடையை சகோதரரின் மூன்று குழந்தைகளையும் கொடுத்து உள்ளோம்," என்று தெரிவித்து உள்ளார்.
வறுமை:
இது தொடர்பாக சம்பந்தப்பட்ட குழந்தையின் தாய் முன்பு எதுவும் பேசக்கூடாது எனவும் காம்லி கூறியுள்ளார். செய்திக்குழுவிடம் காட்டுவதற்காக அக்குழந்தையின் தாயார் ரிக்ஷா ஒன்றில் வந்துள்ளார். குழந்தையின் பெயர் பவானி எனத் தெரிந்து கொண்ட செய்திக் குழு, பின்னொரு நாளில் வருவதாக கூறி அங்கிருந்து கிளம்பி விட்டனராம்.
வறுமையில் வாடும் தெலுங்கானா மக்கள் தங்கள் குழந்தைகளை விற்கும் அவலத்தையும், இதனை பயன்படுத்தி இடைத்தரகர்களாக செயல்படும் மாபியா கும்பல் பற்றியும் அந்தச் செய்தி தொகுப்பு தோலுரித்துக் காட்டுகிறது.
விசாரணைக்கு உத்தரவு:
இந்த விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளதைத் தொடர்ந்து இதுகுறித்து விசாரணை நடத்த தெலுங்கானா மாநில அரசு உத்தரவிட்டுள்ளது.
-
சொத்து வைத்திருப்போர் கவனத்திற்கு! ஏப்.1 முதல் பத்திரப்பதிவில் பெரிய மாற்றம்.. இனி நிலம் இந்த விலை? -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
H-1B விசா கட்டுப்பாடுகள் நீக்கம்.. அமெரிக்காவில் முக்கிய மசோதா.. இதுதான் இந்தியர்களுக்கு நல்ல செய்தி -
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
வளைகுடா வளையம்: ஈரானிடம் இந்தியா வைத்த 'செக்'.. தவிப்பில் கச்சா எண்ணெய்! டெல்லி மெகா முடிவு -
திமுக வேட்பாளர் நேர்காணலில் பங்கேற்ற துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்.. என்ன கேட்கப்பட்டது என விளக்கம் -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
டிராகனின் வெள்ளி வேட்டை.. சீனாவைச் சுழற்றியடிக்கும் சில்வர் ஜுரம்.. வெள்ளி இனி குட்டித்தங்கம்.. ஏன்? -
முதல் விக்கெட்.. திமுக கூட்டணியில் விலகிய தமிழக வாழ்வுரிமை கட்சி.. அறிவித்தார் வேல்முருகன் -
Siragadikka Aasai Promo: விஜயாவுக்கு எதிராக ஆதாரத்தை கண்டுபிடித்த முத்து- மீனா.. சிந்தாமணிக்கு ஆப்பு! செம சம்பவம் -
நன்றியய்யா நன்றி.. ஓட்டல் ஓனர்கள் வயிற்றில் பால் வார்த்த அறிவிப்பு! இனி சிலிண்டர் தட்டுப்பாடு இல்லை!












Click it and Unblock the Notifications