பாபர் மசூதி இடிப்பு வழக்கு... அத்வானி, ஜோஷி, உமாபாரதி நேரில் ஆஜராக சுப்ரீம் கோர்ட் விலக்கு
பாபர் மசூதி இடிப்பு வழக்கில் பாஜக மூத்த தலைவர்கள் எல்.கே. அத்வானி, முரளி மனோகர் ஜோஷி, உமா பாரதி ஆகியோர் நேரில் ஆஜராக உச்ச நீதிமன்றம் விலக்கு அளித்துள்ளது.
டெல்லி: பாபர் மசூதி இடிப்பு வழக்கில் பாஜக மூத்த தலைவர்கள் அத்வானி, முரளி மனோகர் ஜோஷி, உமா பாரதி ஆகியோர் நேரில் ஆஜராக உச்ச நீதிமன்றம் விலக்கு அளித்துள்ளது.
பாபர் மசூதி இடிப்பு தொடர்பான வழக்கு, விசாரணை லக்னோ சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் கடந்த 30-ஆம் தேதி தொடங்கியது. நீதிமன்ற நடவடிக்கைகள் தொடங்கியதும், அத்வானி உள்ளிட்ட குற்றம்சாட்டப்பட்டவர்கள் கைது நடவடிக்கையை தவிர்க்க முன்ஜாமீன் கோரி மனு தாக்கல் செய்தனர்.

இதையேற்று நீதிமன்றம் இவர்களுக்கு முன்ஜாமீன் வழங்கியுள்ளது. தலா ரூ.20000 பிணைத்தொகையின் பேரில் இவர்களுக்கு நிபந்தனையுடன் கூடிய முன்ஜாமீன் வழங்கப்பட்டுள்ளது. இந்த வழக்கில் 9 பேருடன் சதி திட்டத்தில் ஈடுபட்டதாக அத்வானி, முரளி மனோகர் ஜோஷி, உமா பாரதி ஆகியேர் மீது குற்றச்சாட்டு பதிவு செய்ய செவ்வாய்க்கிழமை நேரில் ஆஜராகுமாறு சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டது.
எனினும் நேரில் ஆஜராவதில் இருந்து தங்களுக்கு விலக்கு அளிக்க வேண்டும் என்று தாக்கல் மனுவை லக்னோ சிறப்பு நீதிமன்ற நீதிபதி எஸ்.கே. யாதவ் நிராகரித்தார். இதைத் தொடர்ந்து அவர்கள் மூவரும் குற்றச்சாட்டை பதிவு செய்ய நேரில் ஆஜராவதிலிருந்து விலக்கு அளிக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றத்தில் கோரினர். இதை ஏற்று மூவரும் நீதிமன்றத்தில் நேரில் ஆஜராக விலக்கு அளித்து உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications