பாபர் மசூதி இடிப்பு.. அத்வானி கோர்ட்டில் ஆஜராக வேண்டும்.. சி.பி.ஐ. கோர்ட் அதிரடி உத்தரவு
பாபர் மசூதி இடிப்பு வழக்கில் பாஜக மூத்த தலைவர் அத்வானி கோர்ட்டில் ஆஜராக வேண்டும் என்று சிபிஐ சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
லக்னோ: பாபர் மசூதி இடிப்பு வழக்கில், பாஜக மூத்த தலைவர் அத்வானி, முரளிமனோகர் ஜோஷி, உமா பாரதி ஆகியோர் நேரில் ஆஜராக வேண்டும் என்றும் சி.பி.ஐ. சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
உத்தரபிரதேச மாநிலம் அயோத்தியில் இருந்த பழமை வாய்ந்த பாபர் மசூதி கடந்த 1992ம் ஆண்டு டிசம்பர் 6ந் தேதி ஆர்.எஸ்.எஸ். உள்ளிட்ட இந்துத்துவ அமைப்பினரால் இடிக்கப்பட்டது. இது தொடர்பாக லக்னோ சிறப்பு கோர்ட்டில் வழக்கு விசாரணை நடந்து வருகிறது.
அயோத்தியில் பாபர் மசூதி இடிக்கப்பட்டது தொடர்பாக, பாஜக தலைவர்கள் அத்வானி, உமா பாரதி, முரளி மனோகர் ஜோஷி, கல்யாண் சிங் உள்ளிட்ட 13 பேர் மீது சதி குற்றச்சாட்டப்பட்டது. இவர்களை, ரேபரேலி சிறப்பு நீதிமன்றம் வழக்கிலிருந்து விடுவித்தது. அலகாபாத் உயர் நீதிமன்றமும் அதை உறுதி செய்தது.

மேல்முறையீடு
இதனை எதிர்த்து, சி.பி.ஐ. தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இந்த வழக்கு விசாரணை தொடங்கி 25 ஆண்டுகள் ஆகிவிட்டது. ஒரு சம்பவத்தில் இருவேறு நீதிமன்றகளில் விசாரணை நடத்தக்கூடாது என உத்தரவிட்ட உச்சநீதிமன்றம், அத்வானி உள்ளிட்டோர் மீதான குற்றச்சதி வழக்கையும் லக்னோ சிறப்பு நீதிமன்றத்திற்கு மாற்றி கடந்த மாதம் 19-ந் தேதி உத்தரவிட்டது.

சி.பி.ஐ நீதிமன்றம்
இந்த வழக்கை லக்னோ சி.பி.ஐ. சிறப்பு நீதிமன்றம் தினமும் விசாரித்து, 2 ஆண்டில் தீர்ப்பு வழங்க வேண்டும் என்று கடந்த மாதம் உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. இதைத் தொடர்ந்து இந்த வழக்கு விசாரணை, லக்னோ சிபிஐ சிறப்பு நீதிமன்ற நீதிபதி எஸ்.கே.யாதவ் முன்னிலையில் கடந்த 20ம் தேதி தொடங்கியது.

விஎச்பி தலைவர்கள் ஆஜர்
அப்போது நீதிமன்ற சம்மன் பெற்ற, 59 வயதான ராம் விலாஸ் வேதாந்தி, 71 வயதான சம்பத் ராய், 88 வயதான பைகுந்த் லால் ஷர்மா, 79 வயதான மகந்த் நிரித்யா கோபால் தாஸ், 68 வயதான தரம்தாஸ் மகாராஜ் ஆகிய 5 விஸ்வ இந்து பரிஷத் தலைவர்கள் நேரில் ஆஜராகினர். 6வது குற்றவாளியான சதிஷ் பிரதான் ஆஜராகவில்லை. நேரில் ஆஜரான 5 விஸ்வ இந்து பரிஷத் தலைவர்களுக்கும் நீதிபதி எஸ்.கே.யாதவ் ஜாமீன் வழங்கி உத்தரவிட்டார்.

அத்வானி ஆஜராக உத்தரவு
இதனைத் தொடர்ந்து, இந்த வழக்கில் இன்று லக்னோ சிறப்பு நீதிமன்றத்தில் மீண்டும் விசாரணை வந்தது. அப்போது, பாஜக தலைவர்கள் அத்வானி, முரளி மனோகர் ஜோஷி, உமா பாரதி ஆகியோர் வரும் 30ம் தேதி ஆஜராக வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளது.

பரபரப்பு
பாஜக தலைவர்கள் அத்வானி, முரளி மனோகர் ஜோஷி, மத்திய அமைச்சர் உமா பாரதி ஆகியோர் நேரில் ஆஜராக வேண்டும் என்ற இந்த உத்தரவு அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதனால் அத்வானிக்கு நெருக்கடி முற்றியுள்ளது.
-
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
எடப்பாடி வீட்டிற்கு வந்த எஸ்பி வேலுமணி.. சிவி சண்முகம் மட்டும் மிஸ்ஸிங்.. தனித்துவிடப்படுகிறாரா?












Click it and Unblock the Notifications