ஓடும் ரயிலில் கழிவறையில் பிரசவம்: தண்டவாளத்தில் விழுந்தும் காயமின்றி தப்பிய குழந்தை
கொல்கத்தா: ஓடும் ரெயிலின் கழிவறையில் பிறந்த குழந்தை தண்டவாளத்தில் விழுந்தும் அதிர்ஷ்டவசமாக உயிர் பிழைத்துள்ளது.
மேற்கு வங்காள மாநிலம், முர்ஷிதாபாத்தில் உள்ள ஜூம்கா கிராமத்தை சேர்ந்தவர் அப்ரோசா பீவி. இவர் தனது கர்ப்பிணி மகள் ரைஹானா பீவியுடன் நேற்று லால்கோடா ரயிலில் பயணம் செய்து கொண்டிருந்தார்.
மாலை 6.30 மணியளவில் நாடியா மாவட்டம், பலாஷி நிலையத்தை ரயில் நெருங்கிய போது கழிவறைக்கு சென்றுள்ளார் ரைஹானா. அப்போது திடீரென கழிவறையில் வைத்தே ரைஹானாவுக்கு பிரசவ வலி ஏற்பட்டுள்ளது. மற்றவர்களை உதவிக்கு அழைக்கக் கூட அவகாசம் இன்றி எதிர்பாரா விதமாக கழிவறைக்குள்ளேயே அவருக்கு பிரசவம் நடந்துள்ளது.

இந்நிலையில், கழிவறைக்குச் சென்ற மகள் நெடுநேரமாகியும் திரும்பாததால், சந்தேகமடைந்த அப்ரோசா கழிவறைக்கு சென்று பார்த்தபோது அதிர்ந்து போயுள்ளார். காரணம் சற்றுமுன் பிறந்த குழந்தை கழிவறை பீங்கான் துளை வழியாக தொப்புள் கொடியுடன் தண்டவாளத்தில் தொங்கிக்கொண்டிருந்திருக்கிறது.
விபரமறிந்த மற்ற பயணிகள் உடனடியாக அபாய சங்கிலியை பிடித்திழுத்து ரயிலை நிறுத்தியுள்ளனர். உடனடியாக தண்டவாளத்தில் இருந்து மீட்கப் பட்ட குழந்தை பலாஷி ரயில் நிலையத்திற்கு அருகேயுள்ள ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டது.
அங்கு தாயையும், சேயையும் பரிசோதித்த மருத்துவர்கள் இருவரும் நலமாக உள்ளதாக தெரிவித்துள்ளனர். மேலும், தண்டவாளத்தில் விழுந்த குழந்தை பெரிய காயம் ஏதும் ஏற்படாமல் தப்பியது அதிசயம்தான் என அவர்கள் ஆச்சர்யம் தெரிவித்துள்ளனர்.
-
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்!












Click it and Unblock the Notifications