உ.பி.யில் மண்ணில் குழந்தை உயிரோடு புதைப்பு.. மணல் அசைந்ததால் காப்பாற்றிய மக்கள்
சித்தாப்பூர்: உத்தரபிரதேச மாநிலத்தில் குழந்தை ஒன்று உயிருடன் மண்ணில் புதைத்த கொடூரம் அரங்கேறியுள்ளது. மணல் மேடு அசைவதைப் பார்த்த பொதுமக்கள் அந்த இடத்தைத் தோண்டி குழந்தையை வெளியே எடுத்து மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். இதனால் இந்த கிராமத்தில் பரபரப்பு ஏற்பட்டது.
உத்தர பிரதேச மாநிலத்தில் சித்தாப்பூர் என்ற கிராமத்தில் உள்ள கால்வாய் ஓரத்தில் குழந்தை ஒன்றை பள்ளம் தோண்டி யாரோ புதைத்துள்ளனர். அந்த வழியாக சென்ற பொது மக்கள், புதைக்கப்பட்ட இடத்தில் மணல் மேடு குவிந்திருப்பதையும் அந்த மணல் மேடு அசைவதையும் பார்த்து அதிர்ந்துள்ளனர்.

இதனையடுத்து, அசைந்த மணல்மேடு பகுதியை தோண்டி எடுத்து பார்த்த பொது மக்களுக்கு பேரதிர்ச்சி காத்திருந்தது. மண்ணைத் தோண்ட தோண்ட அங்கு குழந்தை ஒன்று கிடப்பதை கண்டுள்ளனர். குழந்தையை அந்தப் பள்ளத்தில் இருந்து மீட்டு அவசர சிகிச்சை பிரிவில் அனுமதித்துள்ளனர் பொதுமக்கள். இதனைத் தொடர்ந்து அந்தக் குழந்தைக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
குழந்தை உயிருடன் புதைத்தவர்கள் யார், ஏன் புதைக்கப்பட்டது என்ற கோணத்தில் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.












Click it and Unblock the Notifications