வங்கத்தில் பிரச்சாரத்திற்கு தடை.. பாஜகவிற்கு குஷியோ குஷி.. கவலையில் மமதா.. இதுதான் காரணம்!
மேற்கு வங்கத்தில் தேர்தல் பிரச்சாரம் தடை செய்யப்பட்டது, அம்மாநில முதல்வர் மமதா பானர்ஜிக்கு பெரிய பின்னடைவாக பார்க்கப்படுகிறது.
Recommended Video
கொல்கத்தா: மேற்கு வங்கத்தில் தேர்தல் பிரச்சாரம் தடை செய்யப்பட்டது, அம்மாநில முதல்வர் மமதா பானர்ஜிக்கு பெரிய பின்னடைவாக பார்க்கப்படுகிறது.
மேற்கு வங்கத்தில் தேர்தல் ஆணையம் தேர்தல் பிரச்சாரம் செய்ய தடை விதித்து இருக்கிறது. இன்று இரவில் இருந்து இந்த தடை அமலுக்கு வருகிறது.
மேற்கு வங்கத்தில் நடந்த தொடர் கலவரங்களை அடுத்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது. நேற்று ஆலோசனை கூட்டம் நடத்திய பின் தேர்தல் ஆணையம் இந்த நடவடிக்கையை எடுத்தது.

என்ன பிரச்சனை
பாஜக தேசிய தலைவர் அமித் ஷா நேற்று முதல்நாள் மேற்கு வங்கத்தில் பிரம்மாண்ட சாலை பேரணியை நடத்தினார். நேற்று கொல்கத்தா கல்லூரி சாலையில் உள்ள வித்யாசாகர் கல்லூரி அருகே இந்த பேரணி செல்லும் போது பெரிய கலவரம் ஏற்பட்டது. அங்கு இருந்த திரிணாமுல் காங்கிரஸ் மற்றும் ஆர்எஸ்எஸ், பாஜகவினர் இடையே பெரிய அளவில் கலவரம் ஏற்பட்டது.

பெரிய சர்ச்சை
ஆர்எஸ்எஸ் அமைப்பின் மாணவர் பிரிவான ஏபிவிபி அமைப்பினர் அந்த வித்யாசாகர் கல்லூரிக்குள் சென்று அங்கிருந்த பொருட்களுக்கு தீ வைத்தனர். இதனால் அங்கு கடுமையான பதற்றம் நிலவியது. இந்த பதற்றத்தை தொடர்ந்து தேர்தல் ஆணையம் நேற்று அவசரமாக கூடி ஆலோசனை செய்தது.

தடை
இதையடுத்து மேற்கு வங்கத்தில் தேர்தல் பிரச்சாரம் செய்ய தடை விதிக்கப்பட்டு இருக்கிறது. அதன்படி இன்று இரவு 10 மணியில் இருந்து தேர்தல் பிரச்சாரம் செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளது. மற்ற மாநிலங்களில் நாளை மாலைதான் தேர்தல் பிரச்சாரம் முடிய உள்ளது. மேற்கு வங்கத்தில் இன்றே பிரச்சாரம் முடிய உள்ளது.

பாஜக கூட்டம்
பாஜக நடத்தும் பெரும்பாலான தேர்தல் பிரச்சார கூட்டங்கள் இன்றுதான் மேற்கு வங்கத்தில் நடக்கிறது. இன்று மாலை பிரதமர் மோடி சார்பாக 6 மணிக்கு பாஜக கூட்டம் ஒன்று நடக்கிறது. இது இல்லாமல் உத்தர பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத், அமித் ஷா ஆகியோரின் பிரச்சார கூட்டங்களும் இன்றுதான் மேற்கு வங்கத்தில் நடக்கிறது.

பாஜக சந்தோசம்
இதனால் தற்போது பாஜக மகிழ்ச்சியில் இருக்கிறது. தேர்தல் ஆணையம் விதித்த தடையால் தங்களுக்கு பெரிய அளவில் பாதிப்பு இல்லை. தங்களது பிரச்சார கூட்டங்கள் இதனால் பெரிதாக பாதிக்காது என்று பாஜக மகிழ்ச்சியில் இருக்கிறது. ஆனால் மேற்கு வங்கத்தில் காங்கிரஸ், திரிணாமுல் காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் இதனால் கடும் கவலையில் உள்ளது.

ஏன் கவலை
ஏனென்றால் காங்கிரஸ், திரிணாமுல் காங்கிரஸ் இரண்டு கட்சிகளும் நாளை மிகப்பெரிய அளவில் மேற்கு வங்கத்தில் இறுதிக்கட்ட பிரச்சாரத்தை நடத்த திட்டமிட்டு இருந்தது. ஆனால் தற்போது இன்றே பிரச்சாரத்தை முடிக்கும் நிலைக்கும் காங்கிரஸ், திரிணாமுல் காங்கிரஸ் தள்ளப்பட்டுள்ளது. இது மமதா பானர்ஜியை கடும் கோபத்திற்கு உள்ளாக்கி உள்ளது.

என்ன சொன்னார்
இதுகுறித்து நேற்று பேட்டியளித்த மமதா பானர்ஜி, தேர்தல் ஆணையம் பிரச்சாரத்திற்கு தடை விதிக்க வேண்டும் என்றால் இப்போதே தடை விதிக்கலாம் அல்லவா, பதற்றம் என்றால் உடனடியாக தடை விதிக்க வேண்டுமே. அதை விட்டுவிட்டு ஏன் நாளை இரவு 10 மணிக்கு தடை விதிக்க வேண்டும். மோடியின் பிரச்சாரம் நாளை மாலை 6 மணிக்கு நடக்கிறது.

ஏன் தடை இல்லை
அதேபோல் பாஜக நடத்தும் பல பிரச்சாரங்கள் நாளை நடக்க உள்ளது. இதை எல்லாம் கருத்தில் கொண்டே தேர்தல் ஆணையம் இப்படி செயல்படுகிறது. மோடிக்கு பிரச்சனை வரமால் தேர்தல் ஆணையம் செயல்பட்டுள்ளது. தேர்தல் ஆணையம் பாஜகவிற்கு சார்பாக செயல்படுவதை ஒரு போதும் ஏற்க முடியாது. இதை நாங்கள் சட்ட ரீதியாக எதிர்கொள்வோம், என்று மமதா பானர்ஜி குறிப்பிட்டுள்ளார்.












Click it and Unblock the Notifications