'அது' வேண்டாம் என்றேன், தாலி கட்டினார்: சதானந்த கவுடா மகன் மீது நடிகை புகார்
பெங்களூர்: என்னை திருமணம் செய்துவிட்டு வேறு பெண்ணுடன் மத்திய ரயில்வே துறை அமைச்சர் சதானந்த கவுடாவின் மகனுக்கு எப்படி நிச்சயதார்த்தம் நடக்கலாம் என்று கன்னட நடிகை மைத்ரியா கவுடா கேள்வி எழுப்பியுள்ளார். கார்த்திக் தன்னுடன் நெருக்கமாக இருக்க விரும்பியதாகவும் திருமணத்திற்கு முன்பு எதுவும் வேண்டாம் என்று தான் உறுதியாக கூறிய பிறகு அவர் தாலி கட்டியதாகவும் மைத்ரியா தெரிவித்துள்ளார்.
மாடலாக இருந்து நடிகையானவர் மைத்ரியா கவுடா. அவர் சூர்யா தி கிரேட், ஹ்ருதயா ஐ மிஸ் யூ, புனீத் ராஜ்குமார் நடித்த மவ்ரியா ஆகிய படங்களில் நடித்துள்ளார். இந்நிலையில் அவர் மத்திய ரயில்வே துறை அமைச்சர் சதானந்த கவுடாவின் மகன் கார்த்திக் தனது கணவர் என்று செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார்.
மேலும் மைத்ரியா அளித்த புகாரின்பேரில் பெங்களூர் போலீசார் கார்த்திக் மீது பாலியல் பலாத்கார வழக்குப்பதிவு செய்துள்ளனர். கார்த்திக்கிற்கு நேற்று தான் வேறு ஒரு பெண்ணுடன் நிச்சயதார்த்தம் நடைபெற்றது. இந்நிலையில் இது குறித்து மைத்ரியா வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது,

காதல்
எனக்கு கார்த்திக் கவுடாவை கடந்த மே மாதம் முதல் தெரியும். முதலில் நண்பர்களாக பழக ஆரம்பித்தோம். பின்னர் நட்பு காதலாக மாறியது.

கவுடாக்கள்
நானும், கார்த்திக்கும் பழகியது, காதலித்தது அவரின் குடும்பத்தாருக்கு நன்கு தெரியும். நான் கார்த்திக்கின் அம்மாவுடன் எல்லாம் பேசி இருக்கிறேன்.

தாலி
கடந்த ஜூன் மாதம் 5ம் தேதி மங்களூரில் வைத்து கார்த்திக் எனக்கு ரகசியமாக தாலி கட்டி திருமணம் செய்து கொண்டார்.

பேச்சு நிறுத்தம்
திருமணம் முடிந்த பிறகு கடந்த ஜூலை மாதம் 25ம் தேதியில் இருந்து கார்த்திக் என்னுடன் பேசுவதை நிறத்திவிட்டார்.

நெருக்கம்
கார்த்திக் என்னுடன் நெருக்கமாக இருக்க விரும்பினார். திருமணத்திற்கு முன்பு எதுவும் வேண்டாம் என்று நான் உறுதியாக கூறிய பிறகு அவர் எனக்கு தாலி கட்டினார்.

புகைப்படங்கள்
கார்த்திக்கும், நானும் நெருக்கமாக இருந்தபோது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் இதோ என்னிடம் உள்ளன என்று அவர் அதில் தெரிவித்துள்ளார். கார்த்திக் அவரை ஒரு நாள் ஏமாற்றிவிடுவார் என்று மைத்ரியாவை அவரது தாய் எச்சரித்துள்ளார்.

நிச்சயம்
என்னை திருமணம் செய்துவிட்டு கார்த்திக்கிற்கு எப்படி வேறு ஒரு பெண்ணுடன் நிச்சயம் நடக்கலாம் என்று மைத்ரியா கேள்வி எழுப்பியுள்ளார்.

கார்த்திக்
நான் மைதிர்யாவை திருமணம் செய்யவில்லை. இது பொய்யான புகார். அவர் காண்பித்த புகைப்படங்கள் போலியானவை என்று கார்த்திக் தெரிவித்துள்ளார்.
-
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம்












Click it and Unblock the Notifications