பெங்களூரு ஏ.டி.எம்.மில் பெண்ணை தாக்கியது ஆந்திரா கொள்ளையன்!

பெங்களூரு ராஜராஜேஸ்வரி நகரை சேர்ந்த ஜோதி உதய் (37). தனியார் வங்கி மேலாளராக பணியாற்றி வரும் இவர், கடந்த 19ஆம் தேதி, ஏ.டி.எம். மையத்தில் பணம் எடுக்க சென்றார்.
அப்போது, ஏ.டி.எம் உள்ளே புகுந்த கொள்ளையன், ஷட்டரை பூட்டிவிட்டு, ஜோதியை அரிவாளால் சரமாரியாக வெட்டினான். இதில் பலத்த காயம் அடைந்த ஜோதி மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு தற்போது குணம் அடைந்து வீடு திரும்பியுள்ளார்.
இந்நிலையில், பெங்களூருவில் பெண்ணை தாக்கிய அன்றே ஆந்திராவில் ஏ.டி.எம் மையம் ஒன்றில் பெண் ஒருவர் கொலை செய்யப்பட்டார். காவல்துறையினர் இரண்டு ஏ.டி.எம் மையங்களில் பதிவாகியிருந்த கைரேகைகளை ஒப்பிட்டு பார்த்தபோது கைரேகை ஒப்பிட்டிருந்தது.
இதையடுத்து, தீவிர விசாரணை நடத்தி வந்த காவல்துறையினர் ஏ.டி.எம் கொள்ளையனை அடையாளம் கண்டுள்ளனர். ஆந்திர மாநிலம் அனந்தபூரை சேர்ந்த கொள்ளையன் நாராயண ரெட்டி என்பதும், தற்போது தந்தையுடன் வசித்து வருகிறான் என்றும் தெரியவந்துள்ளது.
இதைத் தொடர்ந்து, ஆந்திரா, கர்நாடக மாநிலத்தை சேர்ந்த காவல்துறையினர், கொள்ளையன் நாராயண ரெட்டியை பிடிக்க சென்றபோது தப்பிவிட்டான். அவனின் தந்தையிடம் காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
கொள்ளையனை பற்றி துப்பு கொடுப்பவர்களுக்கு பரிசு வழங்கப்படும் என்று கர்நாடக, ஆந்திரா மாநில காவல்துறை அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications