பெங்களூரில் 17 நாட்களில் 240 மி.மீ. மழை: குளிரில் வெடவெடவென நடுங்கும் மக்கள்
பெங்களூர்: பெங்களூரில் கடந்த 17 நாட்களில் 240 மி.மீ. மழை பெய்துள்ளது.
பெங்களூரில் நவம்பர் மாதம் துவங்கியதில் இருந்து மழை பெய்து வருகிறது. கடந்த 17 நாட்களில் 240 மி.மீ. மழை பெய்துள்ளது. கடந்த ஆண்டு நவம்பர் மாதம் பெங்களூரில் 252 மி.மீ. மழை பெய்தது. இந்த ஆண்டு அதை விட அதிக மழை பெய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இது குறித்து வானிலை ஆய்வு மைய அதிகாரி ஒருவர் கூறுகையில்,
கடந்த ஆண்டு அக்டோபர் முதல் டிசம்பர் வரையிலான காலகட்டத்தில் பெங்களூரில் 278.2 மி.மீ. மழை பெய்தது. இந்த ஆண்டு அதே காலகட்டத்தில் அதிக மழை பெய்துள்ளது. நவம்பர் மாதத்தில் சராசரியாக 54.1 மி.மீ. மழை பெய்யும். ஆனால் இந்த ஆண்டு நவம்பர் மாதம் பிறந்து 17 நாட்களில் 240 மி.மீ. மழை பெய்துள்ளது.
பெங்களூரில் ஒரு வாரத்திற்கும் மேலாக வானம் மேகமூட்டமாகவே உள்ளது. மேலும் தினமும் மழை தூறிக் கொண்டே இருப்பதால் அதிக குளிராக உள்ளது. வெப்ப நிலை 6 டிகிரி செல்சியஸாக குறைந்திருக்கிறது.
வங்கக் கடலில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக மழை பெய்கிறது. அடுத்த 2 நாட்களுக்கு மழை பெய்யக்கூடும் என்றார்.
-
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
கருணை காட்டுவாரா வருண பகவான்.. சென்னை, செங்கல்பட்டில் சட்டென மாறிய வானிலை -
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
இன்னும் 3 நாள் தான்.. வரப் போகுது தென்மேற்குப் பருவமழை! ஜில்ஜில் கிளைமேட்டுக்கு ரெடியாகுங்க மக்களே! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட்












Click it and Unblock the Notifications