பெங்களூர் ஏ.டி.எம். கொள்ளையன் பற்றி துப்பு கிடைத்துள்ளது: ஆந்திராவிலும் அட்டூழியம்?

பெங்களூரில் உள்ள ஏ.டி.எம். மையம் ஒன்றில் கடந்த 19ம் தேதி ஜோதி உதய்குமார்(38) என்ற வங்கி அதிகாரியை மர்ம நபர் ஒருவர் அரிவாள் மற்றும் துப்பாக்கியை காட்டி மிரட்டினார். பின்னர் ஜோதியின் தலையில் தாக்கிவிட்டு அவரிடம் இருந்த பணம் மற்றும் செல்போனை எடுத்துக் கொண்டு ஷட்டரை மூடிவிட்டு அந்த நபர் ஓடிவிட்டார்.
மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட ஜோதி சிகிச்சை பெற்று வருகிறார். இந்நிலையில் ஜோதியின் செல்போனை அந்த நபரிடம் இருந்து வாங்கியவர் ஆந்திர மாநிலம் அனந்தபூர் மாவட்டத்தில் உள்ள இந்துபூரில் கடந்த வாரம் கைது செய்யப்பட்டார். அவரிடம் போலீசார் அந்த மர்ம நபர் குறித்து விசாரணை நடத்தினர்.
இந்நிலையில் அனந்தபூர் மாவட்டத்தில் உள்ள கதிரியில் பொதுத் துறை வங்கி ஒன்று தங்களின் ஏ.டி.எம். மையத்தில் கடந்த 11 மற்றும் 12 ஆகிய தேதிகளில் பணம் எடுத்த நபர் ஜோதியை தாக்கிய நபர் போன்று இருப்பதாக சிசிடிவி வீடியோவில் பதிவானதை பார்த்துவிட்டு தெரிவித்துள்ளது. அந்த நபர் பெங்களூர் தாக்குதல் சம்பவத்தின்போது அணிந்திருந்த அதே சட்டை அணிந்திருந்ததுடன், அதே பையை வைத்துள்ளார்.
ஆந்திர வங்கி பெங்களூர் வங்கிக்கு இந்த தகவலை தெரிவித்தது. இதையடுத்து அந்த வீடியோவை வாங்க பெங்களூர் போலீசார் நடவடிக்கை எடுத்துள்ளனர். மேலும் பெங்களூர் போலீசார் ஆந்திர வங்கியுடன் தொடர்பில் உள்ளனர். ஜோதியை தாக்கிய நபர் கடந்த 10ம் தேதி அனந்தபூர் மாவட்டத்தில் உள்ள தர்மாவரத்தில் ஒரு மூத்தாட்டியை கொன்றுவிட்டு அவரது மகனின் ஏ.டி.எம். கார்டு மூலம் பணத்தை எடுத்திருப்பதாக போலீசார் சந்தேகிக்கின்றனர். மேலும் அந்த நபர் ஒரு மெடிக்கல் ரெப்ரசென்டேட்டிவ் என்று கூறப்படுகிறது.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications