வங்கிகள் இணைப்பு எதிரொலி.. பங்கு சந்தையில் 20 ஆயிரம் கோடி இழப்பை சந்தித்த வங்கிகள்!
விஜயா வங்கி, பேங்க் ஆப் பரோடா மற்றும் தேனா ஆகிய மூன்று தேசிய வங்கிகளும் இணைந்த காரணத்தால் நேற்று பங்குசந்தையில் வங்கிகள் பெரிய அளவில் இழப்பை சந்தித்துள்ளது.
மும்பை: விஜயா வங்கி, பேங்க் ஆப் பரோடா மற்றும் தேனா ஆகிய மூன்று தேசிய வங்கிகளும் இணைந்த காரணத்தால் நேற்று பங்குசந்தையில் வங்கிகள் பெரிய அளவில் இழப்பை சந்தித்துள்ளது.
இந்தியாவின் இந்த மூன்று முன்னணி பொதுத்துறை வங்கிகளும் இணையும் என்று யாரும் எதிர்பார்க்கவில்லை. விஜயா வங்கி, பேங்க் ஆப் பரோடா மற்றும் தேனா ஆகிய மூன்று வங்கிகளையும் இணைப்பதற்கு நேற்றுதான் மத்திய அரசு முடிவு செய்தது.
இது நேற்று பங்குசந்தையில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியது. 2016ல் இறுதியில் ஸ்டேட் வங்கி மற்றும் பாரதிய மகிளா வங்கி ஆகிய அசோசியேட் வங்கிகள் இணைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

ஏன் இப்படி
இதன் மூலம் வாராக்கடனில் சிக்கி தவிக்கும் இந்த மூன்று வங்கிகளும் தங்கள் நஷ்டத்தில் இருந்து தப்பிக்க முடியும். ஆனால் மூன்று வங்கிகளும் இணைந்த பிறகு வழக்கம் போல சுதந்திரமாக செயல்படும். பணியாளர்கள் விவகாரத்தில் எந்த மாற்றமும் செய்யப்படாது. இது வாராக்கடன் மற்றும் நஷ்டத்தை சமாளிக்க மட்டுமே என்று கூறப்படுகிறது.

பெரிய அளவில் குறைந்தது
நேற்று இந்த அறிவிப்பு முறையாக வெளியானதில் இருந்தே, வங்கிகளின் மதிப்பு வேகமாக பங்கு வர்த்தகத்தில் குறைந்து கொண்டே இருந்தது. இன்று காலை வரை பங்குசந்தையில் சிறிய சிறிய பொதுத்துறை வங்கிகளின் பாதிப்பு வேகமாக குறைந்து வருகிறது. சில வங்கிகள் மட்டும் ஏற்றத்தை சந்தித்துள்ளது.

மோசம்
மொத்தமாக 22 வங்கிகள் பங்குசந்தையில் பெரிய அளவிலான பங்குகளை வைத்துள்ளது. இதில் பெரும்பாலான வங்கிகள் இழப்பை சந்தித்து இருக்கிறது. நேற்று மட்டும் இதனால் 20 ஆயிரம் கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

மேலும் இழப்பு
இந்த இழப்பு மேலும் தொடரும் என்றும் கூறப்பட்டுள்ளது. ஆனால் சில நாட்கள் கழித்து இந்த வங்கிகள் நல்ல பலனை அடையும் என்று கூறப்பட்டு இருக்கிறது. இந்த இணைப்பு காரணமாக இந்த வங்கிகள் வாராக்கடனை சமாளிக்க முடியும் என்றும் கூறப்படுகிறது.












Click it and Unblock the Notifications