நவ. 12-ல் நாடு தழுவிய வேலைநிறுத்தம்: வங்கி ஊழியர் சங்கம் அறிவிப்பு
டெல்லி: மத்திய அரசுடன் 2-ஆம்கட்ட பேச்சுவார்த்தை தோல்வியடைந்தால் வரும் 12-ஆம் தேதி நாடு தழுவிய வேலைநிறுத்தப் போராட்டம் செய்யப் போவதாக வங்கி ஊழியர்கள் சங்கம் அறிவித்துள்ளது.
ஊதிய உயர்வு, வாரத்துக்கு 5 நாட்கள் பணி, ஓய்வூதியத்தை மாற்றியமைத்தல் உட்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி வங்கி ஊழியர்கள் வரும் 12-ஆம் தேதி நாடு தழுவிய அளவில் ஒருநாள் அடையாள வேலை நிறுத்தம் செய்யப்போவதாக அறிவித்துள்ளனர்.

இதற்கிடையே, மத்திய அரசுடன் நடைபெற்ற முதல்சுற்று பேச்சுவார்த்தை தோல்வியடைந்த நிலையில், திங்கட்கிழமை (10-ம் தேதி) இரண்டாம் சுற்று பேச்சுவார்த்தை நடைபெற உள்ளது.
இதுகுறித்து பேசிய அகில இந்திய வங்கி ஊழியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் வெங்கடாச்சலம், ‘‘எங்களது கோரிக்கைகள் தொடர்பாக மத்திய அரசின் தலைமை தொழிலாளர் நலத்துறை ஆணையர் மித்ராவுடன் முதல்சுற்று பேச்சுவார்த்தை நடத்தினோம். அதில் உடன்பாடு ஏற்படவில்லை.
இதையடுத்து, வரும் திங்கள்கிழமை (10-ம் தேதி) இரண்டாம்சுற்று பேச்சுவார்த்தை நடத்த உள்ளோம். இதில் உடன்பாடு ஏற்படும் என நம்புகிறோம்.
உடன்பாடு ஏற்படாவிட்டால், ஏற்கெனவே திட்டமிட்டபடி 12-ம் தேதி ஒருநாள் அடையாள வேலை நிறுத்தத்தில் ஈடுபடுவோம். நாடு முழுவதும் 10 லட்சம் வங்கி ஊழியர்கள் பங்கேற்பார்கள்'' என்றார்.
-
மத்திய அரசின் புதிய சேவை.. உங்கள் பணம், உங்கள் கையில்.. இனி ஒரு ரூபாய் கூட மிஸ் ஆகாது! -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி












Click it and Unblock the Notifications