அச்சுறுத்தும் வங்கி மோசடிகள்- தடுக்க இதோ புதிய திட்டம் அறிமுகம்!
டெல்லி: வங்கிகளில் மிகப் பெரிய அளவில் மோசடி செய்யப்பட்ட பணத்தை மீட்பதற்காக சிபிஐ, மத்திய ஊழல் கண்காணிப்பு ஆணையம் (சிவிசி), அமலாக்கத் துறை ஆகியவை கூட்டாக இணைந்து புதிய செயல் திட்டத்தை வகுத்துள்ளன.
மேலும், குற்றவாளிகளைக் கண்டறிந்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் இந்த அமைப்புகள் தெரிவித்துள்ளன. இதுகுறித்து, ஊழல் கண்காணிப்பு ஆணையர் டி.எம்.பாசின், மும்பையில் செய்தியாளர்களிடம், "மிகப் பெரிய அளவிலான வங்கி மோசடிகளின் ஆணிவேர் எது என்பதையும், பணம் எப்படி கை மாற்றி விடப்படுகிறது என்பதையும் கண்டறிந்துள்ளோம்.

தற்போது பெரிய அளவிலான 10 மோசடிகளைக் கண்டறிந்துள்ள நிலையில் அந்தப் பணத்தை மீட்பது, குற்றவாளிகள் மீது நடவடிக்கை எடுப்பது குறித்து நாங்கள் ஆலோசித்துள்ளோம். இதற்காக புதிய செயல் திட்டம் ஒன்றை நாங்கள் உருவாக்கியுள்ளோம். இந்த மூன்று அமைப்புகளும் அந்தச் செயல் திட்டத்தின் அடிப்படையிலேயே செயல்படவுள்ளன.
மோசடியாளர்கள் எப்படி செயல்படுகின்றனர், எங்கு தவறு நிகழுகிறது, வங்கி நடைமுறைகளில் உள்ள குறைபாடுகளைக் களைவது எப்படி என்பதை இந்த அமைப்புகள் புலனாய்வு செய்துள்ளன. நாளொன்றுக்கு ரூபாய் 65 லட்சத்தை தாண்டி பண பரிவர்த்தனை செய்பவர்களின் கணக்குகளை எச்சரிக்கைப் பட்டியலில் வைக்குமாறு ரிசர்வ் வங்கிக்கு சிவிசி கடிதம் எழுதியுள்ளது" என்று தெரிவித்துள்ளார்.
-
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்?












Click it and Unblock the Notifications