ரூ.85.3 கோடிக்கு ஏலத்தில் வரும் விஜய் மல்லையாவின் கோவா வில்லா!
பனாஜி: தொழில் அதிபர் விஜய் மல்லையாவின் கோவா சொகுசு மாளிகையை ஏலத்தில் விடுகிறது ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா. குறைந்தபட்ச ஏலத்தொகையாக ரூ. 85 கோடியே 30 லட்சம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
தொழில் அதிபர் விஜய் மல்லையா பல்வேறு வங்கிகளில் ரூ.9 ஆயிரம் கோடி கடன் வாங்கி அதை திருப்பிக் கொடுக்காமல் லண்டனுக்கு தப்பியோடிவிட்டார். இதையடுத்து ரூ. 8 ஆயிரத்து 41 கோடி மதிப்புள்ள மல்லையாவின் சொத்துகளை அமலாக்கத்துறை பறிமுதல் செய்துள்ளது.

இந்நிலையில் கோவாவில் உள்ள அவரது சொகுசு பங்களாவை ஏலத்தில் விடுகிறது ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா. குறைந்தபட்ச ஏலத்தொகையாக ரூ. 85 கோடியே 30 லட்சம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
வடக்கு கோவாவில் உள்ள கன்டோலிம் பகுதியில் இருக்கும் அந்த சொகுசு மாளிகையில் ஒரு காலத்தில் மல்லையா பார்ட்டிகள் கொடுத்து வந்தார். அந்த மாளிகை வரும் அக்டோபர் மாதம் 19ம் தேதி ஏலத்திற்கு வருகிறது.
மாளிகையை ஏலம் எடுக்க விரும்புபவர்கள் வரும் 26, 27 ஆகிய தேதிகள் மற்றும் அக்டோபர் 5,6 ஆகிய தேதிகளில் நேரில் வந்து பார்க்கலாம் என்று வங்கி அறிவித்துள்ளது.
முன்னதாக மும்பையில் உள்ள மல்லையாவின் கிங்ஃபிஷர் ஹவுஸ் ஏலத்திற்கு வந்தபோது அதை வாங்க ஆள் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.
-
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம்












Click it and Unblock the Notifications