சாம்பார் எப்படி இருக்கும்னு தெரியுமா.. சப்பாத்தி சுடுவீங்களா.. ஒபாமா அளித்த காமெடியான பதில்!
டெல்லி வந்துள்ள அமெரிக்க முன்னாள் அதிபர் ஒபாமா இந்திய உணவுப் பொருட்கள் குறித்த தனது அனுபவத்தை வெளிப்படுத்தினார்.
டெல்லி: அமெரிக்க முன்னாள் அதிபர் ஒபாமா இன்று டெல்லி வந்துள்ளார். டெல்லியில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் பேசிய அவர் இந்திய உணவுப் பொருட்கள் குறித்த தனது அனுபவத்தை பேசினார்.
அப்போது சப்பாத்தி குறித்தும் சாம்பார் குறித்தும் அவர் உரையாற்றினார். மேலும் எப்படி தனக்கு இந்திய உணவுப்பொருட்கள் அறிமுகம் ஆனது என்பது குறித்தும் அவர் பேசியுள்ளார்.
அதேபோல் டெல்லியில் இருக்கும் மோசமான சுற்றுச்சுழல் குறித்து சமூக வலைத்தளங்களில் பலர் ஒபாமாவிடம் கேள்வி எழுப்பி இருக்கின்றனர்.

டெல்லி வந்த ஒபாமா
அமெரிக்க முன்னாள் அதிபர் ஒபாமா தற்போது டெல்லி வந்து இருக்கிறார். அவரது சொந்த நிறுவனமான ஒபாமா பாவுண்டேஷன் அமைப்பின் விழா ஒன்றில் கலந்து கொள்வதற்காக அவர் வந்து உள்ளார். மேலும் இந்த விழாவில் இந்திய இளைஞர்களை அதிகம் கவர வேண்டும் என்பதற்காக கடந்த 10 நாட்களாக பேஸ்புக்கில் இது குறித்து நிறைய விளம்பரங்களும், வீடியோக்களும் வந்து கொண்டிருந்தது.

சாம்பார்
இந்த நிலையில் அந்த கூட்டத்தில் ஒபாமாவிடம் இந்திய உணவுப்பொருட்கள் குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அப்போது ஒருவர் நீங்கள் சாம்பார் (டால்) சாப்பிட்டு இருக்கிறீர்களா என்று கேட்டார். அதற்கு ஒபாமா ''நான் பலமுறை சாப்பிட்டு இருக்கிறேன். அமெரிக்க அதிபர்களிலேயே நான் மட்டும் தான் என்னுடைய உணவு அட்டவணையில் சாம்பாரை இடம்பெற செய்து இருந்தேன்'' என்று கூறினார். மேலும் ''என்னால் சப்பாத்தி செய்ய முடியாதது. அது மிகவும் கடினமான வேலை'' என்று இன்னொரு கேள்விக்கு பதில் அளித்தார்.

கற்றுக் கொண்டது எப்படி
மேலும் இந்திய உணவுப்பொருட்கள் தனக்கு எப்படி அறிமுகம் ஆனது என்பது குறித்தும் அவர் பேசியுள்ளார். அதில் ''நான் அதிபர் ஆகும் முன்பே இந்திய உணவுகளை சாப்பிட்டு இருக்கிறேன். கல்லூரியில் என்னுடைய ரூம் மேட் ஒரு இந்தியர் தான். அவர்தான் எனக்கு சாம்பாரும், சப்பாத்தியும் அறிமுகப்படுத்தியது'' என்று கூறினார். மேலும் இப்போதும் கூட அடிக்கடி சாம்பார் சாப்பிடுவதாக கூறினார்.
|
டெல்லி மாசு
இந்த நிலையில் ஒபாமா டெல்லி வருவதற்கு சில நாட்களுக்கு முன் ஒரு தனியார் நிறுவன ஓனர் அவருக்கு கடிதம் ஒன்று எழுதி டிவிட்டரில் வெளியிட்டார். அதில் 'நீங்கள் டெல்லிக்கு வரும் போது புகை நாசியில் செல்லாமல் இருக்க துணி வைத்து மூடுவீர்களா'' என்று கேட்டு இருந்தார். தற்போது இதுகுறித்து விவாதம் நடத்துவதற்காக ஒபாமா அவரை விழாவிற்கு அழைத்துள்ளார்.
-
பெங்களூர், ஹைதராபாத்-யிடம் தோற்றுப்போகும் சென்னை.. தலையெழுத்தை மாற்றுவாரா விஜய்! -
1700 ஏக்கர் சிப்காட் பூங்கா ஒரு சர்வதேச விமான நிலையத்திற்கு இணையான வளர்ச்சியை கொடுக்குமா?- ஒரு அலசல் -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பெரிய திமிங்கலம் வருதே.. தவெகவில் ஐக்கியமாகும் அண்ணாமலை? மோடி அரசை விமர்சிப்பது ‘இதனால்’ தானா? -
அமித் ஷா நோ சொன்னதால்.. கடைசி வரை ராகுல், சோனியாவை சந்திக்காமல் திரும்பிய விஜய்.. என்ன நடந்தது? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
கிளாம்பாக்கத்திற்கு பதில் கோயம்பேடு... ஆம்னி பஸ் போல் அரசு பஸ்சும் புறப்படுமா? அமைச்சர் தந்த பதில் -
கிரிக்கெட் கடவுளே சொல்லிட்டாரு.. வைபவ் சூர்யவன்ஷியின் பேட்டிங் ஸ்டைலை புகழ்ந்த சச்சின் டெண்டுல்கர்! -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
மரண ஓலம்.. 5 லட்சம் பேர் உயிரிழப்பு.. எங்கு திரும்பினாலும் கதறும் பொதுமக்கள்.. நிலைமை மோசம் -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
தவெகவில் இணையும் 2 அதிமுக எம்எல்ஏக்கள்! ஒருவர் சி.வி.சண்முகம்! இன்னொருவர்.. வெல்லமண்டி நடராஜன் தகவல்












Click it and Unblock the Notifications