Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ஷாருக்கானுக்கு பதவி.. கங்குலிக்கு கைவிரிப்பு.. மம்தாவை விளாசிய கிரிக்கெட் வீரர்.. பாஜகவுக்கு ஆதரவு

Subscribe to Oneindia Tamil

கொல்கத்தா: பிசிசிஐ தலைவராக உள்ள சவுரவ் கங்குலிக்கு கல்தா கொடுக்கப்பட்டுள்ளதாக பாஜகவை சாடிய மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜியை இந்தியாவின் முன்னாள் கிரிக்கெட் வீரரும், எம்எல்ஏவுமான அசோக் திண்டா கடுமையாக விமர்சனம் செய்துள்ளார். மேற்கு வங்காளத்தில் ஷாருக்கானுக்கு பதவி கொடுத்துள்ள மம்தா பானர்ஜி கங்குலிக்கு கைவிரித்துள்ளார் என அவர் விளாசியுள்ளார்.

இந்திய கிரிக்கெட் அணியில் முன்னாள் கேப்டன் சவுரவ் கங்குலி. இவர் பிசிசிஐயின் தலைவராக உள்ளார். செயலாளராக மத்திய உள்துறை அமைச்சரின் மகன் ஜெய் ஷா உள்ளார்.

இவர்களின் பதவிக்காலம் விரைவில் முடிவுக்கு வர உள்ளது. இந்நிலையில் கடந்த 18 ம் தேதி மும்பையில் பிசிசிஐ ஆண்டு பொதுக்கூட்டம் நடந்தது.

பிசிசிஐக்கு புதிய தலைவர்

பிசிசிஐக்கு புதிய தலைவர்

இந்த கூட்டத்தில் பிசிசிஐயின் தலைவர் பதவிக்காக வேட்புமனுத்தாக்கல் செய்த ரோஜர் பின்னி போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டார். செயலாளராக பதவி வகிக்கும் ஜெய்ஷாவுக்கு பதவி நீட்டிப்பு வழங்கப்பட்டுள்ளது. இருப்பினும் கங்குலிக்கு பதவி நீட்டிப்பு வழங்கப்படவில்லை. மேற்குவங்க மாநிலம் கொல்கத்தாவை சேர்ந்த சவுரவ் கங்குலி பாஜகவில் இணைவதாக கூறப்பட்ட நிலையில் அவர் மறுத்தார்.

மம்தா பானர்ஜி கோரிக்கை மறுப்பு

மம்தா பானர்ஜி கோரிக்கை மறுப்பு

இந்நிலையில் தான் பிசிசிஐ பதவி அவரிடம் இருந்து பறிக்கப்பட்டுள்ளது. இதனால் கங்குலியின் பதவி பறிப்பின் பின்னணியில் மத்திய அரசு உள்ளதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. மேலும் மம்தா பானர்ஜியும் கடுமையாக விமர்சனம் செய்தார். இதுதொடர்பாக அவர், ‛‛ கங்குலி மிகவும் பிரபலம் வாய்ந்தவர். இந்தியாவின் கேப்டனாக உள்ளார். இவர் நியாயமற்ற முறையில் ஒதுக்கப்பட்டுள்ளார். கங்குலியை பிசிசிஐ தலைவர் தேர்தலில் போட்டியிட வைக்க வேண்டும்'' என பிரதமர் மோடியிடம் கோரிக்கை வைத்தார். இது நடக்கவில்லை.

பழிவாங்கிய பாஜக என குற்றச்சாட்டு

பழிவாங்கிய பாஜக என குற்றச்சாட்டு

இதுதொடர்பாக திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் செய்தி தொடர்பாளர் குணால் கோஷ் கூறுகையில், ‛‛மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜியின் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி கடுமையாக விமர்சனம் செய்து வருகிறது. பாஜகவில் கங்குலி சேர மறுத்ததால் அவரிடம் இருந்து அக்கட்சி பதவியை பறித்துள்ளது. பாஜக பழிவாங்கும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளது. இது கடுமையாக கண்டிக்கத்தக்கது'' என்றார்.

 தொடரும் வார்த்தை போர்

தொடரும் வார்த்தை போர்

இதன் தொடர்ச்சியாக திரிணாமுல் காங்கிரஸ் கட்சியை பாஜக கடுமையாக விமர்சனம் செய்தது. பாஜகவின் தேசிய துணை தலைவர் திலீப் கோஷ் கூறுகையில், ‛‛திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் குற்றச்சாட்டு அடிப்படை ஆதாரமற்றது'' என்றார். தற்போது இந்த விவகாரத்தில் இருதரப்பு இடையே கடும் வார்த்தைப்போர் நீடித்து வருகிறது. இந்நிலையில் இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரரும் பாஜகவின் எம்எல்ஏவுமான அசோக் திண்டா மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜியை கடுமையாக விமர்சனம் செய்துள்ளார்.

அசோக் திண்டா விமர்சனம்

அசோக் திண்டா விமர்சனம்

இதுதொடர்பாக அசோக் திண்டா, ‛‛மேற்கு வங்க மாநிலத்தின் விளம்பர தூதராக ஷாருக்கான் உள்ளார்.அரசியல் லாபத்துக்காக மம்தா பானர்ஜி ஷாருக்கானை மேற்கு வங்க மாநில விளம்பர தூதராக நியமனம் செய்துள்ளார். மாநிலத்தில் 30 சதவீத மக்களின் வாக்குகளை பெறுவதற்காகவே ஷாருக்கானை இந்த பொறுப்பில் மம்தா பானர்ஜி நியமித்துள்ளார். இந்த பொறுப்பில் ஏன் கங்குலியை நியமனம் செய்யவில்லை.

அப்போது பேசவில்லையே

அப்போது பேசவில்லையே

மேலும் கொல்கத்தா அணியில் இருந்து சவுரவ் கங்குலியை ஷாருக்கான் வெளியேற்றினார். அப்போது இதுபற்றி மம்தா பானர்ஜி ஒன்றும் பேசாமல் அமைதியாக இருந்தார். மம்தா பானர்ஜி விளையாட்டு தொடர்பாக எந்த கருத்தையும் கூறக்கூடாது. ஏனென்றால் அவரது குடும்ப உறுப்பினர்கள் விளையாட்டு சார்ந்த அமைப்புகளிலும், கிளப்புகளிலும் முக்கிய பொறுப்புகளில் உள்ளனர்'' என விமர்சனம் செய்துள்ளார்.

யார் இந்த அசோக் திண்டா?

யார் இந்த அசோக் திண்டா?

மம்தா பானர்ஜியை விமர்சனம் செய்துள்ள அசோக் திண்டா மேற்கு வங்காளத்தை சேர்ந்தவர். இவர் பாஜகவில் உள்ளார். இவர் கடந்த ஆண்டு நடந்த சட்டசபை தேர்தலில் மொய்னா சட்டசபை தொகுதியில் பாஜக சார்பில் போட்டியிட்டு வெற்றியும் பெற்றார். எம்எல்ஏவாக உள்ள நிலையில் தான் மம்தா பானர்ஜியை விமர்சனம் செய்துள்ளார். அசோக் திண்டா இந்திய அணிக்காக கிரிக்கெட் விளையாடி உள்ளார். மேலும் ஐபிஎல்லில் ஷாருக்கான் உரிமையாளராக உள்ள கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்காக சவுரவ் கங்குலியின் கேப்டன்ஷிப்பில் விளையாடி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+