மாட்டுக் கறிக்குத் தடா போட்ட மகாராஷ்டிரா... தோல் கிடைக்காமல் திணறும் தமிழக "லெதர்" துறை!
மும்பை: ஏற்கனவே பல்வேறு பிரச்சினைகளில் சிக்கித் தவித்து வரும் தமிழகத் தோல் தொழில்துறையினர், தற்போது மகாராஷ்டிராவில் அமல்படுத்தப்பட்டுள்ள மாட்டுக் கறிக்குத் தடை காரணமாக புதிய சிக்கலைச் சந்திக்கும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர்.
மகாராஷ்டிர தடையால் யாருக்குப் பிரச்சினையோ இல்லையோ, தமிழக தோல் மற்றும் தோல் பதனீட்டு துறையினருக்குத்தான் மிகப் பெரிய சிக்கல் வந்துள்ளது.
இந்தியாவின் தோல் பதனீட்டுத் துறையில் முன்னணியில் இருப்பது தமிழகம்தான். தமிழகத்தின் பங்கு மட்டும் 48 சதவீதமாகும். கடந்த 2014 ஏப்ரல் - நவம்பர் வரையிலான காலகட்டத்தில் ரூ 10,000 கோடி அளவுக்கு தமிழகத்தில் ஏற்றுமதி நடந்துள்ளது முக்கியமானது.

தோல் பொருட்கள் தயாரிப்பு...
அதேபோல இந்தியாவிலேயே அதிக அளவில் தோல் பொருட்கள் தயாராவதும் தமிழகத்தில்தான்.

கடும் சவால்கள்...
ஆனால் உலகளாவிய பொருளாதார சிக்கல், உள்ளூரில் ஏற்பட்ட பல்வேறு பிரச்சினைகள் காரணமாக தமிழக தோல் பதனீட்டுத் துறை கடும் சவால்களைச் சந்தித்து வருகிறது. இந்த நிலையில் மகாராஷ்டிர மாட்டுக் கறித் தடை அவர்களது வேதனைக்கு மேலும் வலி கூட்டுவதாக அமைந்துள்ளது.

தோல் விலை உயரும்...
இதுகுறித்து இந்திய தோல் பொருட்கள் ஏற்றுமதிக் கழகத்தின் தலைவரான ரபீக் அகமது கூறுகையில், இது மிகப் பெரிய பிரச்சினையை எங்களுக்கு ஏற்படுத்தும். இதன் காரணமாக தோல் பொருட்களின் விலையும் உயரும் என்றார்.

தட்டுப்பாடு அபாயம்...
தமிழகத்திற்கு மகாராஷ்டிராவிலிருந்து 40 சதவீத அளவுக்கு தோல் பொருட்கள் இறக்குமதியாகிறது. தற்போது இது முழுமையாக நின்று போகும் அபாயம் ஏற்பட்டுள்ளது. மகாராஷ்டிராவின் தோல் பொருட்கள் நல்ல தரத்துடன் இருப்பதால்தான் இவை அதிக அளவில் தமிழக தோல் நிறுவனங்களால் வாங்கப்படுகிறதாம்.

தோலின் விலை...
மகாராஷ்டிர மாட்டுத் தோல் 35 முதல் 45 அடி வரை நீளமுள்ளதாக இருக்கிறது. இதன் விலை ரூ. 2400 ஆக இருக்கிறது. சிறிய ரக தோலின் விலை ரூ. 800 வரை உள்ளது.

தோல் தொழில் பாதிப்பு...
மொத்தத்தில் மாட்டுக் கறித் தடையானது, தமிழகத்தினின் தோல் தொழிலை ஆட்டிப் பார்க்கும் வகையில் அமைந்துள்ளதாக கூறுகிறார்கள் தோல் தொழில்துறையினர்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications