மாட்டிறைச்சி விவகாரத்தில் நான் அப்படி சொல்லவேயில்லை.. மத்திய அமைச்சர் பல்டி!
டெல்லி: நான் மாட்டிறைச்சி சாப்பிடுவதற்கு ஆதரவாக குரல் கொடுக்கவில்லை என்று திடீரென அந்தர் பல்டி அடித்துவிட்டார் மத்திய பாதுகாப்புத்துறை இணை அமைச்சர் கிரன் ரிஜிஜு.
மத்திய சிறுபான்மை துறை அமைச்சர் முக்தர் அப்பாஸ் நக்வி, கடந்த வாரம் தொலைக்காட்சி நிகழ்ச்சியில் கூறிய கருத்து பெரும் சர்ச்சையை உருவாக்கியது. மாட்டிறைச்சி உண்பது என்பது இந்துக்களின் உணர்வு சார்ந்த விஷயம். மாட்டு இறைச்சியை சாப்பிடாமல் இருக்க முடியாது என்பவர்கள் தாராளமாக பாகிஸ்தானுக்கோ, அரபு நாடுகளக்கோ செல்லலாம் என்று நக்வி கூறினார்.

இந்நிலையில், மத்திய பாதுகாப்பு துறை இணை அமைச்சர் கிரன் ரிஜிஜுவிடம் இதுகுறித்து பத்திரிகையொன்று கருத்து கேட்டபோது, "நான் மாட்டிறைச்சி சாப்பிடுகிறேன். நான் அருணாச்சல பிரதேசத்தை சேர்ந்தவன். என்னை யாராவது தடுத்து நிறுத்த முடியுமா? மற்றொருவர் பழக்க வழக்கத்துடன் யாரும் விளையாட கூடாது" என்று கூறியுள்ளார். இதுகுறித்த செய்தி பிற ஊடகங்களிலும் வெளியானது. மத்திய அமைச்சர்களுக்குள் கருத்து மோதல் என்று ஊடகங்கள் சித்தரித்தன.
இதையடுத்து அவசரமாக தனது கருத்தை ரிஜிஜு மறுத்துள்ளார். நான் தவறுதலாக சித்தரிக்கப்பட்டுவிட்டேன். நீங்கள் மாட்டிறைச்சி சாப்பிட பாகிஸ்தான் செல்வீர்களா என்று என்னிடம் மீடியா கேட்டபோது, இந்தியா ஒரு மதசார்பற்ற நாடு, உணவு வழக்க வழக்கத்தை தடுக்க கூடாது. அதேநேரம், இந்துக்கள் பெரும்பான்மையாக உள்ள மாநிலங்களில், மாட்டிறைச்சியை தவிர்க்கலாம். அதேபோல, சிறுபான்மையினர் அதிகம் உள்ள மாநிலங்களில் அவர்கள் விருப்பங்கள் மதிக்கப்பட வேண்டும் என்று நான் கூறியிருந்தேன். இவ்வாறு ரிஜிஜு கூறினார்.
-
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்?












Click it and Unblock the Notifications