மாட்டிறைச்சி விவகாரம்.. ஹரியானா முதல்வரை நேரில் அழைத்து கண்டனம் தெரிவித்த அமித்ஷா
டெல்லி: மாட்டிறைச்சி தொடர்பாக சர்ச்சைக்குரிய வகையில் பேசிவரும் ஹரியானா முதல்வர் மனோகர்லால் கட்டார், மத்திய அமைச்சர் மகேஷ் சர்மா, எம்.பி சாக்ஷி மகாராஜ் உள்ளிட்டோரை நேரில் அழைத்து பாரதிய ஜனதாவின் தலைவர் அமித்ஷா கடும் கண்டனம் தெரிவித்திருக்கிறார்.
உத்தரப் பிரதேச மாநிலம் தாத்ரியில் மாட்டிறைச்சி சாப்பிட்டதாக கிளப்பிவிடப்பட்ட வதந்தியில் இக்லாக் என்ற முஸ்லிம் முதியவர் படுகொலை செய்யப்பட்டார். நாடு முழுவதும் இச்சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இந்த நிலையில் ஹரியாணா முதல்வர் மனோகர் லால் கட்டார், முஸ்லிம்கள் இந்தியாவில் வாழலாம். ஆனால், மாட்டிறைச்சி சாப்பிடுவதை நிறுத்த வேண்டும்.. என்று கூறியிருந்தார்.
பாரதிய ஜனதாவின் எம்.எல்.ஏ. சங்கீத் சாம், தாத்ரி சம்பவத்தில் அப்பாவிகள் மீது போலீசார் வழக்கு பதிவு செய்கின்றனர். தொடர்ந்து இதுபோல் நடந்தால், கடந்த 2013-ம் ஆண்டு முசாபர்நகரில் ஏற்பட்ட கலவரம் போல், திருப்பி பதிலடி தருவோம் என்றார்.
இதேபோல் பாரதிய ஜனதாவின் சாக்ஷி மகராஜ் தொடர்ந்து சர்ச்சைக்குரிய வகையில் பேசி வருகிறார். இதனால் பா.ஜ.க.வுக்கு கடும் நெருக்கடி ஏற்பட்டுள்ளது.
இதனைத் தொடர்ந்து சர்ச்சைக்குரிய வகையில் பேசி வரும் தலைவர்களை, பா.ஜ.க. தேசிய தலைவர் அமித் ஷா நேற்று டெல்லிக்கு நேரில் வரவழைத்து கடும் கண்டனம் தெரிவித்தார். தாத்ரி சம்பவம் வேதனையானது, துரதிருஷ்டவசமானது என்று பிரதமர் மோடி கூறிய பிறகு, சர்ச்சைக்குரிய வகையில் பேசி வருவது கடும் கண்டனத்துக்கு உரியது. இனிமேல் இப்படி பேசக் கூடாது என்று அவர்களை அமித் ஷா கடுமையாக எச்சரித்தார் என்கின்றன பா.ஜ.க. வட்டாரங்கள்.
-
பாஜக கொடியை நீக்கிய அண்ணாமலை.. உருவாகும் 'மக்கள் சக்தி இயக்கம்'.. காரில் வரும் புதிய கொடி! -
டைம் பார்த்து அடிக்க ரெடியாகும் பாஜக? தொகுதி மறுவரையறை, ஒரே நாடு ஒரே தேர்தல்! மோடி போடும் கணக்கு -
விஜய்க்கு நேரடி குடைச்சல் தரப்போகும் அண்ணாமலை.. பாஜகவில் இருந்து விலகிய கையோடு போட்ட பிளான்! பின்னணி -
அந்த ‘4’ ஓல்டு ஸ்டூடண்ட்ஸ்.. என்னை ஒதுக்கி ஓரம் கட்டிட்டாங்க! நபினிடம் கொட்டித் தீர்த்த அண்ணாமலை! -
ஐபிஎஸ் டூ அரசியல்.. 5 பக்க லெட்டரில் முடிந்த 7 ஆண்டு பாஜக பயணம்.. அண்ணாமலைக்கு அடுத்தது என்ன? -
ராஜ்யசபா சீட் கொடுத்த பாஜக தலைமை.. திட்டவட்டமாக மறுத்த அண்ணாமலை.. அடுத்த 6 மாதத்திற்கு மெகா பிளான் -
"வீட்டு வேலை செய்த பெண் டூ மாண்புமிகு அமைச்சர்.." மேற்கு வங்கத்தில் பாஜக செய்த சம்பவம்! -
கொங்கு மண்டல கணக்கு.. எடப்பாடி மீது குறையும் நம்பிக்கை.. அண்ணாமலை புதிய ரூட் எடுக்கும் பின்னணி -
பாஜகவில் இருந்து விலகினார் அண்ணாமலை! நிதினிடம் தமிழக பாஜக மீது அடுக்கடுக்கான புகார் -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
Annamalai Letter: தமிழக பாஜகவில் ஒதுக்கப்பட்டேன்! 5 பக்க கடிதத்தில் குமுறிய அண்ணாமலை -
பாஜகவில் இருந்து விலகியதும்! சென்னை திரும்ப தயாரான அண்ணாமலை! அமித்ஷா வீட்டிலிருந்து வந்த அழைப்பு!












Click it and Unblock the Notifications