ஹர ஹர மோடி, ஜெய் ஜெய் மோடி கோஷத்திற்கிடையே நன்றி தெரிவித்த மோடி தாய்.. தொண்டர்கள் நெகிழ்ச்சி
காந்திநகர்: மக்களவை தேர்தலின் முன்னிலை நிலவரங்கள் எக்ஸிட் போல் முடிவகள் கூறியதை போல, பாரதிய ஜனதாவிற்கு சாதகமாகவே வந்துள்ளன. இந்நிலையில் மோடியையும், தேசிய ஜனநாயக கூட்டணியையும் முன்னிலை பெற வைத்து வெற்றி பாதைக்கு அழைத்து சென்ற வாக்காளர்களுக்கு மோடியின் தாய் நன்றி தெரிவித்துள்ளார்.
மோடியின் சொந்த மாநிலமான குஜராத்தில் மொத்தமுள்ள 26 மக்களவைத் தொகுதிகளில் 25 இடங்களில் பாஜக முன்னிலையில் உள்ளது. மேலும் நாடு முழுவதிலும் சுமார் 360-க்கும் மேற்பட்ட இடங்களில் தேசிய ஜனநாயக கூட்டணி முன்னிலை பெற்று வெற்றியை நோக்கி சென்று கொண்டிருக்கிறது.

இந்நிலையில் மோடியின் தாயான ஹீராபென் வசிக்கும் இல்லத்தின் அருகே குவிந்த பாரதிய ஜனதா தொண்டர்கள், மோடியை வாழ்த்தி விண்ணதிர கோஷங்களை எழுப்பி உற்சாகமடைந்தனர்.
அப்போது மோடியின் 98 வயதான தாய் ஹீராபென் வெளியே வந்து தொண்டர்களின் வாழ்த்துக்களை ஏற்றுக் கொண்டார். அவரை கண்ட கட்சி தொண்டர்கள் மேலும் உற்சாகமடைந்து ஹர ஹர மோடி, ஜெய் ஜெய் மோடி என தொடர்ந்து முழக்கமிட்டனர்.
Gujarat: Prime Minister Narendra Modi's mother Heeraben Modi greets the media outside her residence in Gandhinagar. pic.twitter.com/yR2Zi9eeL1
— ANI (@ANI) May 23, 2019
இதனால் மோடியின் தாய் திக்குமுக்காடி போனார். மேலும் முழக்கங்களை தொடர்ந்த பாஜக தொண்டர்கள், வந்தே மாதரம் என உற்சாக குரலெழுப்பினர். பின்னர் அங்கு குழுமியிருந்த தொண்டர்களை பார்த்து கை அசைத்த மோடியின் தாய், ஆதரவளித்த அனைவருக்கும் இரு கை கூப்பி சைகையால் நன்றி தெரிவித்து கொண்டார்.
இதனால் அந்த இடமே உற்சாக வெள்ளத்தில் மிதந்தது. மோடியின் தாய் நன்றி தெரிவித்ததும் குழுமியிருந்த பாஜக தொண்டர்கள் நெகிழ்ந்து போயினர்.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications