மாவீரன் பகத்சிங்கின் துப்பாக்கியை பஞ்சாப் கொண்டுவர வேண்டும்.. குடும்பத்தினர் வலியுறுத்தல்
சுதந்திர போராட்ட தியாகி பகத்சிங்கின் துப்பாக்கியை இந்தூரில் இருந்து பஞ்சாப்பில் உள்ள அவரது அருங்காட்சியகத்துக் கொண்டுவர வேண்டும் என்று அவருடைய குடும்ப உறவினர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
சண்டிகர்: இந்தூர் எல்லைப் பாதுகாப்பு ஆயுதப்படை கல்வி நிலையத்தில் இருக்கும் சுதந்திரப் போராட்ட தியாகி பகத்சிங்கின் துப்பாக்கியை பஞ்சாபில் உள்ள அவரது அருங்காட்சியகத்துக்கு கொண்டு வர வேண்டும் என்று அபய்சிங் சந்து என்பவர் வலியுறுத்தி உள்ளார்.
இதுதொடர்பாக அவர் மேலும் கூறியிருப்பதாவது: கடந்த 1969-ம் ஆண்டு வரையில் பஞ்சாப் பிலார் காவல் கல்வி நிலையத்தில் தான் சுதந்திர போராட்ட தியாகி பகத்சிங்கின் துப்பாக்கி வைக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில், அதனை வேறு இடத்துக்கு மாற்றியுள்ளனர். இதனை மீண்டும் பஞ்சாப் கொண்டு வர வேண்டும் என்று வலியுறுத்தி வந்தோம். அது எங்கிருக்கிறது என்பது குறித்தும் தெளிவுப்படுத்த வேண்டும் என்று வலியுறுத்தி வந்தோம்.
சமீபத்தில் இந்தூர் எல்லைப் பாதுகாப்பு ஆயுதப்படை கல்வி நிலையத்தில் பகத்சிங்கின் துப்பாக்கி இருப்பதாக ஒருவர் எங்களுக்கு தொலைபேசி வாயிலாக தகவல் தெரிவித்தார். அந்தப் துப்பாக்கியின் ஆவணப் பதிவு எண் உள்ளிட்ட விவரங்கள் வாயிலாக அது பகத்சிங்கின் துப்பாக்கி என்பதை எங்களுக்கு அவர் உறுதிப்படுத்தினார்.
இந்த துப்பாக்கியை பஞ்சாப் மாநில சாகித் பகத்சிங் நகர் மாவட்டம் கட்கர் காலன் கிராமத்தில் அமைந்துள்ள பகத்சிங்கின் அருங்காட்சியகத்துக்கு கொண்டு வரவேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டார். இதற்கான நடவடிக்கைகளை பஞ்சாப் மாநில அரசு மேற்கொள்ள வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார்.
பகத்சிங் அருங்காட்சியகம் விரிவுப்படுத்தப்பட உள்ள நிலையில் அந்த அருங்காட்சியகத்துக்கு நாடுமுழுவதும் பல்வேறு இடங்களில் இருக்கும் பகத்சிங்கின் இதர ஆவணங்களும் இங்கு கொண்டுவர அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அபய்சிங் சந்து கேட்டுக் கொண்டார்.
உத்தரப் பிரதேச மாநிலம் மீரட்டில் தனிநபரிடம் இருக்கும் பகத்சிங்கின் சூ, கைக்கடிகாரம் ஆகியவற்றை மீட்டு இங்குள்ள பகத்சிங்கின் அருங்காட்சியகத்துக்கு கொண்டு வர வேண்டும் என்றார் அபய்சிங்.
-
வெளிநாடு போயிருக்கதே 'ரீல்ஸ்' பார்த்துதான் தெரியுது.. அமைச்சர் கீர்த்தனாவை கலாய்த்த மேயர் பிரியா! -
"எதிரிகள் சர்வ நாசம்".. எம்ஜிஆர், ஜெ., பாணியில் விஜய்.. கொல்லூர் மூகாம்பிகை கோவிலுக்கு செல்வது ஏன்? பின்னணி -
தங்கப்பத்திரத்தில் 1.50 கோடி முதலீடு செய்தவர்களுக்கு 6 கோடி தந்த மத்திய அரசு.. லாபம் 4.85 கோடி -
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
"3 சேனல்கள் நீக்கம் இல்லை.. தொழில்நுட்ப கோளாறால் தற்காலிக ஒளிபரப்பு பாதிப்பு” - அமைச்சர் ராஜ்மோகன் -
முதல்வர் விஜய்யின் முதல் அரசு நிகழ்ச்சி.. ஒரே ஏஐ வீடியோவில் இத்தனை தமிழ்ப் பிழைகளா! -
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
நேற்று இந்திரா, நாளை நேரு.. 62 வருட சாதனை முறியடிப்பு! மிக நீண்ட கால பிரதமர் என்ற வரலாறு படைத்த மோடி -
காவலாளிக்கு லாட்டரியில் விழுந்த ரூ.78 கோடி பரிசு.. ஐக்கிய அரபு அமீரகத்தில் ‘மெகா ஜாக்பாட்’ -
2 மனைவிகளும் எனக்கு வேணும் சார்.. ஒரு நிமிஷம் போலீசுக்கே தலைசுத்திருச்சு.. திகைத்த திண்டுக்கல்












Click it and Unblock the Notifications