லதா மங்கேஷ்கரின் பாரதரத்னாவைப் பறிக்க உங்கள் பாட்டன் சொத்து இல்லை: காங்.குக்கு சிவசேனா பதிலடி
மும்பை: பாடகி லதா மங்கேஷ்கரின் பாரத ரத்னா விருதை பறிக்க அது ஒன்றும் உங்கள் தாத்தா வீட்டு சொத்து இல்லை என்று சிவசேனா மற்றும் பாஜக காங்கிரஸ் தலைவரிடம் தெரிவித்துள்ளது.
மகாராஷ்டிரா மாநிலம் புனேவில் தீனாநாத் மங்கேஷ்கர் மருத்துவமனை திறப்பு விழா இந்த மாத துவக்கத்தில் நடந்தது. இந்த விழாவில் கலந்து கொண்ட பிரபல பின்னணி பாடகி லதா மங்கேஷ்கர் பாஜக பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடிக்கு ஆதரவு தெரிவித்து பேசினார். மோடி பிரதமராக நான் கடவுளை பிரார்த்திக்கிறேன். இது தான் அனைவரின் விருப்பமும் கூட என்றார்.
இதையடுத்து கடந்த திங்கட்கிழமை நடந்த விழா ஒன்றில் கலந்து கொண்ட மும்பை மாநில காங்கிரஸ் தலைவரும், முன்னாள் எம்.எல்.ஏ.வுமான ஜனார்தன் சந்துர்கர் பேசியதாவது,

அரசியல்வாதிகளுக்கு ஆதரவு தெரிவிக்கும் கலைஞர்களின் பத்ம விருதுகளை அவர்கள் திருப்பிக் கொடுக்க வேண்டும். இல்லை என்றால் அரசு அந்த விருதுகளை பறிக்க வேண்டும் என்றார்.
இது குறித்து சிவசேனா தலைவரும், எம்.பி.யுமான சஞ்சய் ராவ்த் கூறுகையில், இந்த விருதுகள் ஒன்றும் சந்துர்கரின் தாத்தா வீட்டு சொத்து இல்லை. ஒரு தனி நபரின் திறமையை பாராட்டி அரசு வழங்கியது. இசைத் துறையில் லதாஜியின் சாதனைகளை பார்த்து அரசு அவருக்கு பாரத ரத்னா உள்ளிட்ட விருதுகளை வழங்கியுள்ளது. அரசு விருது கொடுப்பதால் அதற்கு அடிமையாக முடியாது. லதாஜி உள்பட விருது பெற்ற அனைவருக்கும் தங்கள் கருத்துகளை தெரிவிக்கும் உரிமை உள்ளது. விருதுகளை திருப்பிக் கொடுக்கச் சொல்வது விந்தையானது. லதாஜியை பிடிக்கவில்லை என்றால் சந்துர்கர் அவரது பாடல்களை கேட்பதை நிறுத்த வேண்டும் என்றார்.
சந்துர்கர் பேச்சு குறித்து பாஜக மூத்த தலைவர் அதுல் ஷா கூறுகையில், லதா மங்கேஷ்கருக்கு அவரது கருத்தை தெரிவிக்கும் உரிமை உள்ளது. அவரை நச்சரிப்பது தவறு என்றார்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications