5 பாரத ரத்னா விருதுகள் தயாராகின்றன... வாஜ்பாய், நேதாஜிக்கும் தர மத்திய அரசு திட்டம்?
டெல்லி: முன்னாள் பிரதமர் வாஜ்பாய்க்கு பாரத ரத்னா விருது வழங்க மத்திய அரசு பரிசீலித்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
கடந்த 1954ம் ஆண்டு முதல் இந்தியாவில் பல்வேறு துறைகளில் சாதனை புரிந்தவர்களுக்கு பாரத ரத்னா விருது வழங்கிக் கவுரவிக்கப்பட்டு வருகிறது. தமிழர்களான ராஜாஜி, டாக்டர் ராதாகிருஷ்ணன், டாக்டர் சி.வி.ராமன் ஆகியோர் இந்த விருதை முதன் முதலில் பெற்றனர்.
கடந்த ஆண்டு சச்சின் டெண்டுல்கருக்கும், சி.என்.ராவுக்கும் இந்த விருது வழங்கப்பட்டது. இதுவரை இந்த விருது 43 பேருக்கு வழங்கப்பட்டுள்ளது.

வாஜ்பாய்க்கு...
நீண்ட நாட்களாக முன்னாள் பிரதமர் வாஜ்பாய்க்கு பாரத ரத்னா விருது வழங்க வேண்டும் என பா.ஜ.க. வலியுறுத்தி வருகிறது. இந்நிலையில் மத்தியில் பாஜக் ஆட்சி அமைந்ததைத் தொடர்ந்து வாஜ்பாய் பெயரும் பாரத ரத்னா விருதுப் பட்டியலில் உள்ளதாகத் தெரிகிறது.

கன்ஷிராம்....
அதேபோல் பகுஜன் சமாஜ் கட்சியின் நிறுவனர் கன்ஷிராமுக்கும் பாரத ரத்னா வழங்கப்படலாம் எனவும் செய்திகள் வெளியாகியுள்ளன.

மோடியின் ஆசை...
சுதந்திரத்திற்கு முன்பே இந்தியாவில் ராணுவத்தை ஏற்படுத்திய சுதந்திர போராட்ட வீரர் நேதாஜி சுபாஷ் சந்திர போஸுக்கு பாரத ரத்னா விருது வழங்க பிரதமர் மோடி விரும்புவதாகவும், பிரபல ஓவியர் ரவிவர்மா, இந்து புராணங்களை வெளியிட்ட கீதா பதிப்பகத்தை உருவாக்கிய அனுமன் பிரசாத் போடர் ஆகியோருக்கும் பாரத ரத்னா விருது வழங்கப்படலாம் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

5 பதக்கங்கள்...
இதற்கிடையே, கடந்த சில தினங்களுக்கு முன்பு 5 பதக்கங்களை தயாரிக்குமாறு ரிசர்வ் வங்கியின் நாணய தயாரிப்பு பிரிவுக்கு மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளது பரபரப்பைக் கிளப்பியுள்ளது.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications