கொல்கத்தா: சிறுவர்களுக்கு செக்ஸ் தொந்தரவு கொடுத்த சாமியார் 377 சட்டத்தின் கீழ் கைது
கொல்கத்தா: மடத்தில் தங்கி படித்த சிறுவர்களை ஓரினச் சேர்க்கைக்கு வற்புறுத்தி தொந்தரவு கொடுத்த சாமியாரை போலீசார் கைது செய்துள்ளனர்.
மேற்கு வங்காள மாநிலம் ஷகாபூரில் பாரத் சேவாஸ்ரமம் என்ற பெயரில் 27 வயதான சாமியார் மடம் நடத்தி வந்துள்ளார். இவர் மடத்தில் தங்கி படித்த சிறுவர்களுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்தார் என புகார் எழுந்தது.
சாமியார் தங்களுக்கு பாலியல் தொந்தரவு தருவதாக சிறுவர்கள் போலீசில் புகார் கொடுத்தனர். இது தொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.
‘இந்திய தண்டனைச்சட்டம் பிரிவு 377-ன் கீழ் ஓரினச் சேர்க்கை கொள்வது கிரிமினல் குற்றம், இந்தக் குற்றத்துக்கு அதிகபட்சம் ஆயுள் தண்டனை விதிக்கலாம்' என்று சுப்ரீம் கோர்ட் சமீபத்தில் தீர்ப்பு கூறியது.
போலீசார், சாமியார் மீது பிரிவு 377ன் கீழ் வழக்கு பதிவு செய்து அவரை கைது செய்தனர். பின்னர் சாமியாரை போலீசார் மாவட்ட நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி காவலில் எடுத்தனர். அவரிடம் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
சிறுவர்கள் சாமியாரின் மேற்பார்வையில் ஆசிரமத்தில் படித்து வந்துள்ளனர்.












Click it and Unblock the Notifications