ஜெயலலிதாவின் ஜாமீனை எதிர்க்காதது ஏன்?: 'வாய் திறந்தார்' பவானி சிங்
பெங்களுர்: சொத்துக்குவிப்பு வழக்கில் ஜெயலலிதாவை ஜாமீனில் விடுவிக்க எதிர்ப்பு தெரிவிக்காததற்கு காரணம் ராம் ஜெத்மலானியின் வாதம்தான் என்று அரசு வழக்கறிஞர் பவானி சிங் விளக்கம் அளித்துள்ளார்.
சொத்துக்குவிப்பு வழக்கில் 4 ஆண்டுகள் சிறை தண்டனை பெற்று பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் ஜெயலலிதா கடந்த மாதம் 29ஆம் தேதி ஜாமீன் மனு தாக்கல் செய்திருந்தார்.
அப்போது அவருக்கு ஜாமீன் வழங்கக்கூடாது என்று அரசு வழக்கறிஞர் பவானி சிங் எதிர்ப்பு தெரிவித்திருந்தார்.
இதனிடையே, கர்நாடக உயர் நீதிமன்றத்தில் ஜெயலலிதாவின் ஜாமீன் மனு விசாரணையின் போது அரசு வழக்கறிஞர் பவானி சிங் எதிர்ப்பு தெரிவிக்காதது சர்ச்சையை ஏற்படுத்தியது. இது குறித்து பவானி சிங் விளக்கம் அளித்துள்ளார்.

ரத்து செய்ய கேட்டனர்
கடந்த 29ம் தேதி ஜெயலலிதா ஜாமீன் மனு தாக்கல் செய்தபோது, 4 ஆண்டு தண்டனையை ரத்து செய்ய வேண்டும் என்றும், தனக்கு ஜாமீன் வழங்க வேண்டும் என்றும் ஜெயலலிதா தரப்பில் கோரிக்கை விடுத்ததால் தான் ஜாமீன் வழங்க எதிர்ப்பு தெரிவித்தேன்.

ராம்ஜெத்மலானி வாதம்
ஆனால் நேற்று நடைபெற்ற விசாரணையின் போது, ஜெயலலிதா தரப்பில் வாதாடிய மூத்த வழக்கறிஞர் ராம் ஜெத்மலானி, தண்டனை நிறுத்தி வைக்க வலியுறுத்தவில்லை என்றும் ஜாமீன் வழங்கினால் மட்டும் போதும் என்றும் நீதிமன்றத்தில் தெரிவித்தார்.

நிபந்தனைகளை ஏற்கத்தயார்
மேலும் ஜாமீன் வழங்க நீதிபதி விதிக்கும் எந்த நிபந்தனைகளையும் ஏற்றுக்கொள்ள தயார் என்றும் ராம்ஜெத்மலானி வாதாடினார்.

எதிர்க்காதது ஏன்?
இதனால் தான் நான் எனது நிலைப்பாட்டை மாற்றி கொண்டு ஜெயலலிதாவுக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கலாம் என்று கூறினேன் என்றார் பாவானி சிங்












Click it and Unblock the Notifications