Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

நான் ராஜினாமா செய்ததாக வெளியான தகவல் உண்மையல்ல, வதந்தி.. பவானி சிங் மறுப்பு

Subscribe to Oneindia Tamil

பெங்களூரு: தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மீதான சொத்துக் குவிப்பு வழக்கில் அரசு வழக்கறிஞராக உள்ள பவானி சிங், தான் ராஜினாமா செய்ததாக பரவிய தகவல் வதந்தி என விளக்கமளித்துள்ளார்.

ஜெயலலிதா, சசிகலா, சுதாகரன், இளவரசி ஆகியோர் மீதான சொத்துக்குவிப்பு வழக்கு 2005-ம் ஆண்டு சென்னையில் இருந்து பெங்களூருவுக்கு மாற்றப்பட்டது. அப்போது இவ்வழக்கிற்கு அரசு வழக்கறிஞராக பி.வி.ஆச்சார்யா நியமிக்கப்பட்டார். வழக்கு இறுதி கட்டத்தை எட்டிய நிலையில் 2012-ம் ஆண்டு அவர் ராஜினாமா செய்தார்.

Bhavani singh denied news about resignation

கடந்த 2013 பிப்ரவரி 28-ல் பவானி சிங் அரசு வழக்கறிஞராக நியமிக்கப்பட்டார். ஜெயலலிதாவுக்கு ஆதரவாக அவர் செயல்படுவதாக திமுக தரப்பில் குற்றம் சாட்டப்பட்டது. மேலும் விசாரணையின்போது வழக்கை தாமதிக்க முயன்றதாக பவானி சிங்கிற்கு நீதிபதி டி'குன்ஹா ரூ.65 ஆயிரம் அபராதம் விதித்தார்.

கர்நாடக உயர் நீதிமன்றத்தில் ஜெயலலிதா ஜாமீன் கோரியபோது பவானி சிங் ஆட்சேபம் தெரிவிக் காததால் அந்த மனுவை விசாரித்த நீதிபதி சந்திரசேகரா, 'அரசு வழக்கறிஞர் தனது பொறுப்பை உணர்ந்திருக்கிறாரா?'என கேள்வி எழுப்பினார். ஆனபோதும், இந்த வழக்கில் பவானி சிங்கே அரசு வழக்கறிஞராக தொடர தமிழக அரசு ஆணை பிறப்பித்தது.

கர்நாடக உயர் நீதிமன்றத்தில் கடந்த வெள்ளிக்கிழமை மாலை சொத்துக்குவிப்பு வழக்கின் விசாரணை முடிந்ததும் அனைவரும் நீதிமன்றத்தில் இருந்து வெளியேறினர். ஆனால் பவானி சிங் மட்டும் வெளியே வராமல் நீண்ட நேரம் தனது இருக்கையில் அமர்ந்திருந்தார். திமுக வழக்கறிஞர் சரவணனுடன் ஏற்பட்ட மோதலின் காரணமாக அவர் மிகுந்த மன உளைச்சலுடன் இருந்ததாகக் கூறப்பட்டது.

இந்த நிலையில், தன்னை நியமனம் செய்தது தமிழக லஞ்ச ஒழிப்புப் பிரிவு என்பதால் அப்பிரிவின் ஐஜி குணசீலனை தனது அறைக்கு வரவழைத்த பவானி சிங் அவரிடம் தான் ராஜினாமா செய்வதாக தெரிவித்ததாக கூறப்படுகிறது. இதுதொடர்பாக அவர் கொடுத்த கடிதத்தில், 'தொடர் வேலைப்பளு காரணமாக உடல்ரீதியாக நான் மிக‌வும் பாதிக்கப்பட்டுள்ளேன். சமீபகாலமாக தேவையில்லாத‌ மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளேன். ஜெயலலிதா மீதான சொத்துக்குவிப்பு வழக்கில் என்னால் தொடர்ந்து அரசு வழக்கறிஞராக நீடிக்க முடியாது. எனவே அரசு வழக்கறிஞர் பொறுப்பில் இருந்து இன்றுமுதல் விடுபடுகிறேன் 'என குறிப்பிட்டிருந்தார் பவானி சிங் என்று தகவல்கள் வெளியாகின.

இதையடுத்து ஜெயலலிதா தரப்பு வழக்கறிஞர் செந்தில், அரசு வழக்கறிஞர் பவானி சிங்கை சந்தித்து சுமார் 15 நிமிடங்கள் தனியாக பேசினாராம். அப்போது, திமுக தரப்பு நெருக்கடிகளை பொறுக்க முடியவில்லை. சுப்பிரமணியன் சுவாமியும் டிராபிக் ராமசாமியும் என்னை நீக்க முயற்சிக்கிறார்கள். சமீபகாலமாக எனக்கு உடல்நிலையும் சரியில்லை. இவ்வளவு நெருக்கடியுடன் என்னால் அரசு வழக்கறிஞராக‌ தொடர‌ முடியாது. தமிழக லஞ்ச ஒழிப்புத்துறை எனக்கு ஒரு நாளைக்கு ரூ.65 ஆயிரம் மட்டுமே ஊதியமாக வழங்குகிறது. டெல்லியை சேர்ந்த வழக்கறிஞர்கள் என்றால் ரூ.25 லட்சம் வரை ஊதியமாக வழங்கப்படுகிறது. இவ்வளவு குறைந்த ஊதியத்தில் எப்படி பணியாற்ற முடியும் என பவானி சிங் கேள்வி எழுப்பியதாக நீதிமன்ற வட்டாரங்கள் கூறுகின்றன.

இருப்பினும் செந்திலும், தமிழக லஞ்ச ஒழிப்புத்துறை ஐஜி குணசீலன் உள்ளிட்டோரும் பவானி சிங்குடன் தொடர்ந்து பேசியதாக கூறப்படுகிறது. மேலும், அவருக்கு போதிய ஊதிய உயர்வு வழங்குவதாகவும் உறுதியளித்ததாகவும் கூறப்படுகிறது.

இந்த நிலையில் தான் விலகியதாக வெளியான தகவல்களை பவானி சிங் மறுத்துள்ளார். இது தொடர்பாக தனியார் தொலைக்காட்சிக்கு அவர் அளித்த பேட்டியில், ‘தான் ராஜினாமா செய்ததாக வெளியான தகவல் வெறும் வதந்தி' என விளக்கமளித்துள்ளார் பவானி சிங்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+