"இந்துத்துவ அரசியலின் ஆய்வகம்.." போபாலில் அசுர பலத்துடன் உள்ள பாஜகவை சமாளிக்குமா காங்கிரஸ்?
போபால்: லோக்சபா தேர்தல் விரைவில் நடைபெற உள்ள நிலையில், இந்துத்துவ அரசியலின் ஆய்வகம் என்று அழைக்கப்படும் போபாலில் இப்போது கள நிலவரம் எப்படி இருக்கிறது என்பது குறித்துப் பார்க்கலாம்.
நாட்டில் மிகவும் செழுமையான கலாச்சார பாரம்பரியம் மற்றும் அரசியல் முக்கியத்துவம் கொண்ட நகரம் தான் போபால்.. வரும் லோக்சபா தேர்தலில் மத்திய பிரதேசத்தில் மீண்டும் கவனத்தை ஈர்க்கும் ஒரு தொகுதியாக உருவெடுத்துள்ளது.

வரலாறு: 316 ஆண்டுகளுக்கு முன்பு ஆப்கானிஸ்தான் ராணுவ வீரர் தோஸ்த் முகமது கானால் நிறுவப்பட்ட போபால், சுதந்திரம் அடையும் வரை ஒரு முக்கிய முஸ்லிம் நகரமாக இருந்தது. குறிப்பாக 1819 முதல் 1926 வரை, போபால் நான்கு செல்வாக்கு மிக்க பேகம்களால் ஆளப்பட்டது. குத்சியா பேகம் அதன் முதல் பெண் ஆட்சியாளராகவும், சுல்தான் ஜஹான் பேகம் அதன் கடைசி ஆட்சியாளராகவும் இருந்தார்.
போபால் தொகுதி: போபால் லோக்சபா தொகுதியைப் பொறுத்தவரைத் தொடக்கத்தில் இங்கே காங்கிரஸ் வென்றுள்ளது. 1984 வரை பார்க்கும் போது காங்கிரஸ் 6 முறை வென்றுள்ளது. பாரதிய ஜனதா சங் ஒரு முறையும் ஜனதா கட்சி ஒரு முறையும் வென்றுள்ளது. ஆனால், 1989க்கு பிறகு இது முழுக்க முழுக்க பாஜகவின் கோட்டையாக மாறிப்போனது. அதன் பிறகு மொத்தம் 8 தேர்தல்கள் நடந்துள்ள நிலையில், அவை அனைத்திலும் பாஜகவே வென்றுள்ளது.
சுஷில் சந்திரா, மைமுனா சுல்தான், ஷங்கர் தயாள் சர்மா, உமாபாரதி, சாத்வி பிரக்யா தாக்கூர் மற்றும் கைலாஷ் ஜோஷி என முக்கிய தலைவர்கள் இங்கிருந்து வந்துள்ளனர். கடந்த கால தேர்தல் முடிவுகளில் இங்கே பாஜக தீவிர ஆதிக்கம் செலுத்தி வருவது மிகத் தெளிவாகத் தெரிகிறது.
மக்கள் தொகை: மத்தியப் பிரதேசத்தில் உள்ள இந்த போபால் லோக்சபா தொகுதியின் மக்கள் தொகையில் 75% இந்துக்கள் மற்றும் 20% முஸ்லிம்கள் உள்ளனர். மேலும், இது நகர்ப்புறம் அதிகம் இருக்கும் ஒரு தொகுதியாகவும். இங்குள்ள 79% வாக்காளர்கள் நகர்ப்புறத்தில் தான் வசிக்கிறார்கள். வெறும் 21% மக்கள் மட்டுமே கிராமப் புறத்தில் வசிக்கிறார்கள்.
இங்கே 2019 லோக்சபா தேர்தல் ரொம்பவே முக்கியமானது. அந்த முறை காங்கிரஸில் இருந்து மூத்த தலைவர் திக்விஜய சிங் போட்டியிட்ட நிலையில், பாஜகவில் இருந்து சர்ச்சைக்குரிய வேட்பாளர் பிரக்யா சிங் தாக்கூர் போட்டியிட்டார்.
ஆய்வகம்: 'இந்துத்துவ அரசியலின் ஆய்வகம்' என்று அழைக்கப்படும் போபால் கடந்த 2019இலல் மிகக் கடுமையான போட்டியைச் சந்தித்தது. இரு தரப்பு மிக தீவிர பிரச்சாரத்தை மேற்கொண்டனர். இறுதியில், பாஜகவின் பிரக்யா தாக்கூர் 8.66 லட்சம் வாக்குகள் பெற்று சுமார் 3.64 லட்சம் வாக்கு வித்தியாசத்தில் வென்றார். திக்விஜய் சிங் கடும் போட்டி கொடுத்தாலும் அவரால் வெறும் 5.01 லட்சம் வாக்குகளை மட்டுமே பெற முடிந்தது.
காங்கிரஸ் மூத்த தலைவரே படுதோல்வி அடைந்து இருக்கிறார் என்றால் இது எந்தளவுக்கு பாஜகவின் கோட்டையாக இருக்கும் எனப் பாருங்கள். குறிப்பாகக் கடைசியாக நடந்த இரு தேர்தல்களில் இங்குப் பதிவான மொத்த வாக்குகளில் சுமார் 60% மேல் பாஜகவுக்கு மட்டும் போய் இருக்கிறது குறிப்பிடத்தக்கது.
இந்த முறை யார்: இந்த வெற்றியைத் தக்க வைக்க வேண்டும் என்ற முனைப்பில் பாஜக 2024 லோக்சபா தேர்தலில் களமிறங்குகிறது. காந்தியைக் கொன்ற கோட்சே தேச பக்தர் என்று சிட்டிங் எம்பி பிரக்யா தாக்கூர் சொன்னது சர்ச்சையான நிலையில், அவருக்கு இந்த முறை மீண்டும் வாய்ப்பு தரப்படவில்லை. அங்கே பாஜக சார்பில் அலோக் ஷர்மா வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். காங்கிரஸ் சார்பில் அருண் ஸ்ரீவஸ்தவ் வேட்பாளராகக் களமிறங்குகிறார்.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications