மகளுக்கு திருமண ஏற்பாடு செய்து வந்த ஏட்டு சிமி தீவிரவாதிகளால் கொலை
போபால்: போபால் மத்திய சிறையில் சிமி தீவிரவாதிகளால் கொலை செய்யப்பட்ட ஏட்டு ராம்சங்கர் யாதவ் தனது மகளின் திருமணத்திற்கு ஏற்பாடு செய்து வந்த நிலையில் பலியாகியுள்ளார்.
மத்திய பிரேதச மாநிலம் போபாலில் உள்ள மத்திய சிறையில் பாதுகாவலராக பணியாற்றி வந்தவர் ஏட்டு ராம்சங்கர் யாதவ். மாரடைப்பு வந்து சிகிச்சை பெற்ற நிலையில் யாதவ் தனது மகள் சோனியாவின்(24) திருமணத்திற்கு ஏற்பாடு செய்து வந்தார்.

வரும் டிசம்பர் மாதம் 9ம் தேதி சோனியாவுக்கு திருமணம் நிச்சயிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் மத்திய சிறையில் இருந்த 8 சிமி தீவிரவாதிகள் யாதவை கொலை செய்துவிட்டு தப்பியோடினர். பின்னர் அந்த 8 பேரும் என்கவுன்ட்டரில் சுட்டுக் கொல்லப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.
யாதவுக்கு சாம்புநாத்(36), பிரபுநாத்(32) என இரண்டு மகன்கள் உள்ளனர். இருவரும் ராணுவத்தில் உள்ளனர். அவர்கள் கவுஹாத்தி மற்றும் ஹிஸாரில் பணியாற்றி வருகிறார்கள்.
யாதவின் மரணத்தால் அவரின் குடும்பத்தார் சோகத்தில் ஆழ்ந்துள்ளனர். சோனியாவின் திருமணத்தை நிச்சயித்த தேதியில் நடத்துவதா அல்லது தள்ளி வைப்பதா என்று இனி முடிவு செய்யப்படும் என உறவினர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
-
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல்












Click it and Unblock the Notifications