குஜராத்தின் 17வது முதல்வராக பதவி ஏற்றார் பூபேந்திர பட்டேல்.. விரைவில் அமைச்சரவை பதவி ஏற்பு?
காந்தி நகர்: குஜராத்தின் புதிய முதல்வராக பூபேந்திர பட்டேல் இன்று பதவி ஏற்றார். ஆளுநர் ஆச்சார்யா தேவ்ராத் இவருக்கு பதவிப்பிரமாணம் செய்து வைத்தார்.
குஜராத்தின் 17வது முதல்வராக பூபேந்திர பட்டேல் பதவி ஏற்று உள்ளார். மிக எளிமையான விழாவில் பூபேந்திர பட்டேல் பதவி ஏற்றார். இன்னும் அமைச்சரவை முழுமையாக தேர்வு செய்யப்படவில்லை. இன்னும் இரண்டு நாட்களில் ஆலோசனைக்கு பின் அமைச்சரவை தேர்வு செய்யப்படும் என்று கூறப்படுகிறது.

பதவி ஏற்பு விழாவில் இன்று பல முக்கிய தலைவர்கள் கலந்து கொண்டனர். பாஜக சார்பாக மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, மூத்த பாஜக நிர்வாகிகள், பாஜக ஆளும் மாநில முதல்வர்களான ஹரியானா முதல்வர் லால் கட்டார், மத்திய பிரதேச முதல்வர் சிவராஜ் சிங் சவுகான், கோவா முதல்வர் பிரமோத் சாவத் ஆகியோர் கலந்து கொண்டனர்.
நேற்று பாஜக எம்எல்ஏக்கள் கூட்டத்தின் முடிவில் பூபேந்திர பட்டேல் முதல்வராக தேர்வு செய்யப்பட்டார். இவரின் தேர்வு மிகவும் சர்ப்பரைஸ் விஷயமாக இருந்தது. நேற்று மாலையே ஆளுநர் இவரை பதவி ஏற்க அழைப்பு விடுத்தார். இதையடுத்து இன்று பதவி ஏற்பு விழா நடைபெற்றது. குஜராத் முதல்வராக இருந்த விஜய் ரூபாணி கடந்த இரண்டு நாட்களுக்கு முன்புதான் பதவி விலகினார்.
இவர்தான் பூபேந்திர பட்டேலுக்கு முதல்வராக பதவி அளிக்க வேண்டும் என்று எம்எல்ஏக்கள் கூட்டத்தில் முன் மொழிந்தார். பூபேந்திர பட்டேல் தேர்வு பலருக்கும் ஆச்சர்யத்தை ஏற்படுத்தி உள்ளது. இன்னும் 15 மாதத்தில் குஜராத்தில் சட்டசபை தேர்தல் நடக்க உள்ளது. இப்படிப்பட்ட நிலையில் அங்கு முதல்வர் மாற்றப்பட்டு இருக்கிறார். விஜய் ரூபாணிராஜினாமா செய்துவிட்டு பூபேந்திர பட்டேல் தேர்வு செய்யப்பட ஜாதி வாக்குகள் முக்கியமான காரணமாக பார்க்கப்படுகிறது.
விஜய் ரூபாணியை முன்னிறுத்தி 2017ல் நடத்தப்பட்ட சட்டசபை தேர்தலில் பாஜக 99 இடங்களிலும் காங்கிரஸ் 77 இடங்களிலும் வென்றது.காங்கிரஸ் இந்த தேர்தலில் சிறப்பாக செயல்பட்டது. இதனால் அடுத்த தேர்தலில் பூபேந்திர பட்டேலை முன்னிறுத்த பாஜக நினைக்கிறது. பூபேந்திர பட்டேல் காந்திநகரில் உள்ள கடலோடியா தொகுதியில் கடந்த தேர்தலில் வென்று எம்எல்ஏ ஆனார். அதிக அரசியல் அனுபவம் மிக்கவர்.
பட்டிதார் இனத்தின் உட்பிரிவான கட்வா பட்டிதார் பிரிவை சேர்ந்தவர் இவர். அங்கு இந்த ஜாதி பிரிவினர் அதிக அளவில் உள்ளனர். பட்டிதார் இன மக்களின் வாக்குகளை கவர வைக்கும் வகையில் இந்த தேர்வு நடந்து இருக்கலாம் என்று கணிக்கப்பட்டுள்ளது. தேர்தலை மையமாக வைத்து இந்த மூவ் செய்யப்பட்டு இருக்கலாம் என்று கூறப்படுகிறது. குஜராத்தின் புதிய முதல்வராக பதவி ஏற்று இருக்கும் பூபேந்திர பட்டேலை அமித் ஷா நேரில் சென்று வாழ்த்தினார், பிரதமர் மோடி உள்ளிட்ட பலர் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தலை எதிர்கொள்ள திமுகவின் இரட்டை வியூகம்.. இள ரத்தத்திற்கு முக்கியத்துவம்! -
96,000 வாக்குகள் வித்தியாசத்தில்.. தவெக வேட்பாளரை ஜெயிக்க வைத்த தொகுதிக்கு இந்த நிலைமையா? -
இந்தியாவை தாக்கும் பெரிய ஆபத்து.. விஷயம் கேட்டு எலான் மஸ்க் கூட அதிர்ந்து போனார்! பேரழிவு கன்பார்ம்? -
அதிகாலையே கணக்கில் வரவு வைக்கப்பட்ட ரூ.3000.. வந்தது மே மாதம் பேமெண்ட்.. அரசின் அசத்தல் மூவ்! -
சொத்துகளை மறைக்கும் சென்னை மேயர் பிரியா.. துணை மேயர் உள்பட 75% கவுன்சிலர்கள் 4 ஆண்டுகளாக ‘டிமிக்கி' -
அதிமுக + திமுகவிற்கு ஷாக்.. 4 மாஜி அமைச்சர்கள் - 8 எம்எல்ஏக்கள் உள்பட 60 பேர் தவெகவில் ஐக்கியம் -
அடித்து ஆடும் விஜய்.. வருகிறது ராமநாதபுரம் புதிய விமான நிலையம்.. பொருளாதார புரட்சிக்கு அடித்தளம்! -
ரஷ்யா வச்ச ஆப்பு.. தள்ளுபடிலாம் தர முடியாது.. பிரீமியம் கட்டணம்! கச்சா எண்ணெய்க்கு 425% கூடுதல் தொகை -
ரூ.15 லட்சம் கோடி பஸ்பம் ஆகும்? சரிகிறது இந்தியாவின் தங்க’ சாம்ராஜ்யம்.. நாட்டையே உலுக்கும் சம்பவம் -
"அண்ணாமலை வந்ததால் பாஜக ஒன்னும் பலமாகவில்லை".. ஒரு இதழை கூட அசைக்க முடியாது.. தமிழிசை ‘அட்டாக்' -
நாங்க தோத்துட்டோம்.. ஆனா சாகலை! விஜய்க்கு ஏதாவது ஆச்சுனா கம்பெனி பொறுப்பில்லை! மாஜி கொடுத்த வார்னிங் -
ஒரு மேயர் பதவியையாவது ஜெயிச்சு பாருங்க..நான் என் ஒரு பக்க மீசையை எடுத்துக்குறேன்! ஆர்எஸ் பாரதி சவால்












Click it and Unblock the Notifications