குஜராத் முதல்வராக பூபேந்திர படேல் பதவி ஏற்பு: பிரதமர் மோடி உள்ளிட்டோர் பங்கேற்பு
காந்திநகர்: குஜராத் சட்டசபை தேர்தலில் பாஜக வெற்றி பெற்றதைத் தொடர்ந்து மாநில முதல்வராக பூபேந்திர படேல் இன்று பதவி ஏற்றார். இந்த விழாவில் பிரதமர் மோடி உள்ளிட்டோர் பங்கேற்றனர்
பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷாவின் சொந்த மாநிலம் குஜராத். இம்மாநில சட்டசபைத் தேர்தலில் வரலாறு காணாத வெற்றியை பாஜக பெற்றுள்ளது.
குஜராத்தின் 182 தொகுதிகளில் 156 இடங்களில் பாஜக வென்றது. குஜராத் தேர்தல் வரலாற்றில் இது சாதனையாகும். குஜராத்தில் 7-வது முறையாக அதிகாரத்தை பாஜக கைப்பற்றியிருக்கிறது.

பாஜக அமோக வெற்றி
காட்லோதியா தொகுதியில் போட்டியிட்ட பூபேந்திர படேல் 1.92 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.பாஜக வெற்றி பெற்றதைத் தொடர்ந்து மாநில முதல்வராக இருந்த பூபேந்திர படேல் மீண்டும் முதல்வராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.பின்னர் குஜராத் பாஜக எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் பாஜக மேலிட பார்வையாளர்களாக ராஜ்நாத்சிங், அர்ஜூன் முண்டா, எடியூரப்பா பங்கேற்றனர். இக்கூட்டத்தில் பூபேந்திர படேல், முதல்வராக ஒருமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

பதவி ஏற்ற பூபேந்திர படேல்
பின்னர் ஆளுநர் ஆச்சார்ய தேவ்ரத்தை சந்தித்து ஆட்சி அமைக்க உரிமை கோரினார் பூபேந்திர படேல். இதனை ஆளுநர் ஏற்றுக் கொண்டார். இதனைத் தொடர்ந்த் இன்று அம்மாநில முதல்வராக பூபேந்திர படேல் பதவியேற்றார். இன்று பிற்பகல் நடைபெற்ற நிகழ்ச்சியில் பூபேந்திர படேலுக்கு ஆளுநர் ஆச்சார்ய தேவ்ரத் பதவி பிரமாணம் செய்து செய்து வைத்தார். குஜராத்தின் 18-வது முதல்வராக பூபேந்திர படேல் பதவி ஏற்றார்.

மோடி, அமித்ஷா, முதல்வர்கள்
பூபேந்திர படேல் பதவியேற்பு விழாவில் பிரதமர் மோடி, மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத்சிங், பாஜக ஆளும் மாநிலங்களின் முதல்வர்களான யோகி ஆதித்யநாத், பசவராஜ் பொம்மை, ஹிமந்த பிஸ்வாஸ் சர்மா, பிஎஸ் தாமி, மாணிக் சஹா உள்ளிட்டோர் பங்கேற்றனர். பூபேந்திர படேல் பதவி ஏற்பு விழாவை முன்னிட்டு பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.

ஆர்.எஸ்.எஸ். பின்னணி
பூபேந்திர படேல் ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தைச் சேர்ந்தவர். குஜராத் மாநில ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தில் மிக முக்கிய பங்கு வகித்தவர். 2017-ம் ஆண்டுதான் தேர்தல் அரசியலுக்கு களமிறங்கினார். 2021-ம் ஆண்டு முதல்வரானார். படேல் சமூகத்தை சேர்ந்த 5-வது முதல்வர். கேசுபாய் படேல், பாபுபாய் படேல், சிமன்பாய் படேல், ஆனந்தி பென் படேல் ஆகியோர் ஏற்கனவே முதல்வராக இருந்தனர்.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications